October 20, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 4 (இறுதித்தொடர்)


ஏக இறைவனின் திருப்பெயரால்
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் என்ற இந்தத் தலைப்பின் கீழ் இதுவரை மார்க்க அறிஞர்களுல் தாங்கள் இவ்வளவு காலமும் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் பொருந்தாத காரணத்தைச் சொல்லி சத்தியத்தை மறுப்பவர்களைப் பற்றி தொடர் ஒன்றிலும் தொடர் ஒன்றைக் காண இங்கே க்ளிக் செய்யவும் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே பலபல காரணங்களைச் சொல்லி சத்தியத்தை மறைப்பவர்களைப் பற்றி தொடர் இரண்டிலும் இரண்டாம் தொடரைக் காண இங்கே க்ளிக் செய்யவும் மார்க்க அறிஞர்களுல் சிலர் மார்க்கத்தின் மூலாதாரங்கள் எவை எவை என்பதிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால் மார்க்கத்தை எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல் எவ்விதமான பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடாமல் உள்ள மார்க்க அறிஞர்களைப்  பற்றி தொடர் மூன்றிலும் பார்த்தோம் தொடர் மூன்றைக்காண இங்கே க்ளிக் செய்யவும் இனி இறுதியாக நான்காம் வகையினரான என்னுடைய உம்மத்தில் (சமுதாயம்) எல்லாக் காலத்திலும் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும் என நபி(ஸல்) அவர்களால் முன்ன்றிவிப்புச் செய்யப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய உன்மையான மார்க்க அறிஞர்களைப் பற்றிப் பார்ப்போம் சுமார் 20 25 வருடங்களுக்கு முன்னால் தமிழுழக  முஸ்லீம்கள் மார்க்க விஷயத்தில் எந்த நிலையில் இருந்தார்கள் என்று பின்னோக்கிச் சிந்தித்துப் பார்த்தால்
மார்க்கச் சட்டதிட்டங்கள் அதன் உன்மையான வடிவத்தில் தெரியாமல் அதைத் தெரிந்து செயல்படுத்தாமல் மார்க்கத்திற்க்கு முரனான காரியங்களையெல்லாம் மார்க்கம் என்று நினைத்துச் செய்துகொண்டிருந்ததைத் தான் நம்மால் உனரமுடியும் ஏனென்றால் மார்க்கத்தின் அடிப்படை என்னவென்ற நம்மவர்களுக்குத் தெரியாமல் இருந்ததே இதற்க்குக் காரணம் அவர்கள் மார்க்கத்தின் அடிப்படையை விளங்காமல் இருந்தது அவர்கள் குற்றமல்ல மாறாக மார்க்கத்தைக் கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் அதைச் சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் சொல்லாமல் அதை இருட்ட்டிப்புச் செய்து விட்டு மார்க்கத்திற்க்கு முரனான எல்லாக்காரியங்களையும் மார்க்கம் என்ற பெயரில் மக்களிடம் அறிமுகப்படுத்தியதுதான் காரணம் அதனால்தான் முஸ்லீம்களின் கட்டாயக்கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் நிறைவேற்றாதவர்கள் கூட ரமலான் மாதம் நோன்பு நோற்க்காதவர்கள் கூட மாதாமாதம் தங்களின் வீடுகளில் பாத்திஹா மற்றும் மவ்லித் ஓதத்தவறமாட்டார்கள் மேலும் மாற்றுமத சகோதரர்கள் தமதுகுலதெய்வக் கோயில்களுக்குப் போய் வருவதுபோல் இவர்களும் பெரும் பொருள்செலவு செய்து வருடத்திற்க்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ தமது குடும்பத்தாருடன் சிலர் உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு நாகூர் ஏர்வாடி போன்ற தர்காக்களுக்குப் போய்வந்து விடுவார்கள் இப்படி இஸ்லத்திற்க்கும் முஸ்லீம்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் பெயரளவில் மட்டும் முஸ்லீம்களாக நம்மவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் இதையெல்லாம் கண்டு மனம் நொந்துபோன இன்றைய தவ்ஹீத் ஆலிம்கள் இந்தக் கொடுமைகளுக்கெதிராக இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைப்பதற்க்காக அன்று களமிறங்கினார்கள் அல்லாஹ்வுடைய தனிப்பெருங்கருனையால் இன்னும் அந்தப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது இனியும் இது தொடர அல்லாஹ் அருள்புரிவானாக இந்தத் தவ்ஹீத் ஆலிம்கள் அன்று தொடங்கிய ஏகத்துவப் பிரச்சாரத்தினால்தான் தமிழ்பேசும் முஸ்லீம்களின் இருண்டகாலமான அன்றைய நிலைமாறி இன்று தமிழ்கூறும் முஸ்லீம்களுக்கிடையில் ஏகத்துவ ஒளிவீசுகிறது இனி சத்தியத்தை எடுத்துச் சொல்லி மக்களை நேர்வழிக்கு அழைப்பவர்களுக்கு கிடைக்கவிருக்கின்ற நன்மைகளையும் அவர்களுக்குள்ள சிறப்பைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடை தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் கூறுவதைப் பற்றிப் பார்ப்போம் நாம் சத்தியத்தை எடுத்துச் சொல்லி அதன் மூலம் ஒருவர் நேர்வழி அடைந்தால் எடுத்துச் சொன்னவருக்கு உள்ள நன்மையைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது
சத்தியத்தை எடுத்துச் சொன்னால் இரட்டிப்புக்கூலி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.
அறிவிப்பவர் : அபூஹஹூரைரா (ரலி) அவர்கள் நூல் : முஸ்ம் 4831
சத்தியத்தை எடுத்துச் சொல்லி மக்களை நன்மையின் பக்கம் அழைப்பது எந்த அளவிற்க்கு நமக்குக் கூலியைப் பெற்றத்தரும் என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவாக விளக்குகின்றது ஒருவர் மற்றவருக்கு நன்மையான காரியத்தை எடுத்துச் சொல்லி அவரும் அதை நடைமுறைப்படுத்தினால் அவர் அந்த நன்மையான காரியத்தைச் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவருக்கு கிடைக்கின்ற கூலியைப் போன்றே இவருக்கும் கூலி கிடைத்துக்கொண்டிருக்கும் அவர் மரணித்துவிட்டாலும் சரி இருவருடைய கூலியில் எந்தவொன்றையும் இறைவன் குறைத்துவிடமாட்டான் அப்படியென்றால் ஒருவருக்கு நன்மையான காரியத்தை எடுத்துச் சொல்லிக் கொடுத்து அவர் ஐவேளை தொழுதால் நமக்கும் தொழுத கூலி அவர்நோன்பு நோற்றால் நமக்கும் நோன்பு நோற்ற கூலி இன்னும் நம்மூலம்  அவர் தெரிந்து கொண்டு செய்யும் எல்லா நன்மையான செயலுக்கும் (நாம் செய்ததுபோக கூடுதலாக) நமக்கும் கூலி உண்டு என்று சொன்னால் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது எந்தளவிற்க்கு மகத்தானதொரு கூலியை இறைவனிடத்தில் நமக்குப் பெற்றத்தரும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும் (தீமைக்கும் இதே போன்றுதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்) அதிலும் குறிப்பாக அல்லாஹ தான் ஒருபோதும் மன்னிக்கவேமாட்டேன் என்று கூறிய நிரந்தர நரகத்திற்க்குரிய அல்லாஹ்வுக்கு இனைவைக்கும் மாபாதகச் செயலிலிருந்து இறைவனின் நாட்டத்தின்படி நாம் சத்தியத்தை எடுத்துச் சொன்ன காரணத்தால் ஒருவர் நேர்வழி அடைவதென்பது எந்தளவிற்க்குச் சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்
அல்லாஹ்விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.   நூல் புஹாரி 3701 ஹதீஸின் சுருக்கம்
சத்தியத்தை எடுத்துச் சொல்பவர்களின் சிறப்புகள்
மேலும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்களின் சிறப்புக்களைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பல இடங்களில் சிலாகித்துக் கூறுகின்றான்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.அல்குர்ஆன் 3.104
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம் அல்குர்ஆன் 4.114
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் அல்குர்ஆன் 9.71
அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்? அல்குர்ஆன் 41.33
ஜிம்ஆ உரைநிகழ்த்துவதற்க்கு மட்டுமா மார்க்கக் கல்வி
அதுபோல் தமிழ் முஸ்லீம்களிடையில் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் சிலர் சுற்றிச் சுழன்று சத்திப்பிரச்சாரம் செய்வதை விட்டுவிட்டு வாரத்திற்க்கொரு ஜிம்ஆ உரையையும் வருடத்திற்க்கு இருபெருநாள் உரைகளையும் நிகழ்த்திவிட்டு அதோடு தாங்களின் கடமை முடிந்து விட்டதாகவும் அதுவே தாங்கள் சத்தியத்தை எடுத்துச் சொல்லிவிட்டதற்க்குப் போதுமானதாகும்  என்று நினைத்துக் கொள்கின்றனர் அவர்கள் இந்த உரைகளின் மூலம் என்னதான் குர்ஆன் ஹதீஸைப் போதித்தாலும் உண்மையில் சத்தியத்தை எடுத்துச் சொன்னதின் அளவுகோல் இதுதானா நபி(ஸல்) அவர்களும் இன்னபிற நபிமார்களும் இப்படித்தான் ஏகத்துவத்தைப் போதித்தார்களா என்று குர்ஆனிலும் ஹதிஸிலும் வரக்கூடிய நபிமார்களின் ஏகத்துவப் பிரச்சாரப்பணியைப்  பார்த்தால் இதற்க்கு நேர்மாற்றமாக இருப்பதை எளிதில் விளங்கலாம் உதாரணமாக நூஹ் (அலை) அவர்களின் பிரச்சாரப்பணியைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்
"என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்'' என்று அவர் கூறினார்.
"எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை''.
"நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர்''
"பின்னர் அவர்களை நான் உரத்த குரலில் அழைத்தேன்''
"பின்னர் அவர்களைப் பகிரங்க மாகவும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன்''
 அல்குர்ஆன் 71 .5 6 7 8 9
இந்த வசனத்தில் நூஹ்(அலை) அவர்கள் எந்தெந்த விதத்தில் எல்லாம் இறைமார்க்த்தை மக்களுக்குப் போதித்திருக்கின்றார்கள் என்று பார்க்கிறோம்
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் கட்டளையைப் பாருங்கள்
உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் கையால் தடுக்கட்டும் அதற்கு சக்தி இல்லாதவர் வாயால் தடுக்கட்டும் அதற்கும் சக்தி இல்லாதவர் மனதினால் வெறுத்து ஒதுங்கட்டும் இது தான் ஈமானில் மிக பலவீனமாக நிலையாகும் நூல் முஸ்லிம் 70)
எனவே நாங்களும் குர்ஆன் ஹதிஸின் அடிப்படையில் சத்தியத்தைத் தான் எடுத்துச் சொல்கிறோம் என்று கூறிக்கொண்டு ஓரிரு பயான்கள் செய்வதாலும் சில அறிஞர்களின் நூல்களை தமிழிழ் மொழிபெயர்த்து வெளியிடுவதால் மட்டுமே தாங்கள் கற்ற கல்வியின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைப்பவர்கள் இனியாவது இடம் பொருள் ஏவலுக்கேற்ப தங்களின் பிரச்சாரப்பணியை அமைத்துக்கொள்ளவேண்டும்
சத்தியத்தை எடுத்துச் சொல்வதில் விவாதமும் ஓர் அங்கமே
அதுபோல் சத்தியப்பாதையில் உள்ளவர்கள் என்னதான் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் சத்தியத்தை எடுத்துச் சொன்னாலும் சைத்தானால் தூன்டிவிடப்பட்ட சிலர் அதற்க்கெதிராக அடுக்கடுக்கான கேள்விக்கனைகளைத் தொடுப்பார்கள் அது சிலநேரம் மாற்றுமதத்தவர்களிடமிருந்தும் சிலநேரம் கடவுளே இல்லையென்று கூறும் நாத்திகர்களிடமிருந்தும் வரும் சிலவேளைகளில் முஸ்லீம்களிடமிருந்தும்கூட வரும் முஸ்லீம்களிடமிருந்து வரும் என்பதைப் பொருத்தவரை மார்க்க அறிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு மார்க்கத்தைக் கெடுக்கும் சிலர் அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் தர்காக்களில் சுஜுத் செய்யலாம் கத்தம் பாத்திஹா ஓதலாம் இனைவைப்புப் பாடல்களான மவ்லித் பாடல்களைப் பாடலாம் போன்ற மார்க்கத்திற்க்கு முரனான காரியங்களையெல்லாம் மார்க்கமாக்க முயல்வார்கள் முஸ்லீமல்லாதவர்களைப் பொருத்தவரை இஸ்லாமிய மார்க்கமே பொய் என்றும் அறிவுக்குப் பொருந்தாத மார்க்கம் என்றும் வாதிடுவார்கள் எனவே இஸ்லாத்திற்க்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மார்க்க அடிப்படையில் விளக்கமளிப்பதோடு இஸ்லாம்தான் உன்மையான மார்க்கம் என்பதை நிரூபிக்க கீழ்க்காணும் இறைவசனத்தின் அடிப்படையில் விவாதக்களம் காணவும் தயங்கக்கூடாது
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். அல்குர்ஆன் 16.125
மேலும் இப்ராஹிம்(அலை) அவர்கள் நம்ரூத் அரசனிடம் விவாத அடிப்படையில் உன்மையை நிரூபித்துக் காட்டியதும் இதற்க்கு ஓர் ஆதாரமாகும்
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன் என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
அல்குர்ஆன் 2:258.
சமுதாயப்பணி
அதுபோல் குர்ஆன் ஹதிஸின் அடிப்படையில் சத்தியத்தை எத்தி வைப்பதுடன்சமுதாய மக்களுக்குச் சேவை செய்யம் விதத்திலும் நம் அழைப்புப்பணி அமையவேண்டும் ஏனென்றால் ஏகத்துவக் கொள்கையுடையோர் செய்யும் சில உதவிகளைப் பார்த்தே எத்தனையோ சகோதர சகோதரிகள் குர்ஆன் ஹதிஸின் அடிப்படையில் செயல்படத்துவங்குவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம் எனவே சத்தியப்பிரச்சாரத்தை மேற்கண்ட அடிப்படைகளிலெல்லாம் செய்ய கல்வியாளர்கள் முன்வரவேண்டும் இது போன்று மார்க்கத்தைக் கற்று அதைப்பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் ஒரு உன்மையான மார்க்க அறிஞர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஓர் அழகிய உதாரணத்தைக் கூறியுள்ளார்கள்
'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல் புஹாரி 79
 எனவே மார்க்கத்தைக் கற்றுள்ள மாரக்க அறிஞர்கள் மார்க்கத்தை அதன் தூயவடிவில் மக்களிடம் எடுத்துரைத்து அந்தக்கல்வியின் மூலம் தாமும் பயன்பெற்று மற்றவர்களும் பயனடையும் விதத்தில் நடப்போமாக அதற்க்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக
அல்லாஹ் மிக அறிந்தவன்
                                    முடிந்தது
இதே தலைப்பின் கீழுள்ள மற்ற தொடர்கள்

No comments:

Post a Comment