March 06, 2014

கன்னேரு பற்றிய ஹதீஸ் உன்மையா


             கன்னேரு பற்றிய ஹதீஸ் உன்மையா

கன்னேரு என்ற நம்பிக்கை உண்டு அதன் மூலம் ஒருவரது அழகையோ உடல் ஆரோக்கியத்தையோ அல்லது வேறு ஏதாவது தனிச்சிறப்பபைப் பற்றியோ ஓருவர் பொறாமை கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தால் அது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தில்  அறிவிப்பாளர் வரிசை மூலம் சரியானவையாக அறியப்பட்ட  சில ஹதீஸ்கள் உள்ளது  உண்மைதாண் ஆனாலும் குறிப்பிட்ட இந்த ஹதீஸ்களை நம்புவதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்களிளை மறுக்கும் நிலை  ஏற்படுகிறது
உதாரனமாக நன்மை தீமை மற்றும் நோய்  போன்ற அல்லாஹ்விடமிருந்து மட்டும் வரக்கூடிய காரியங்கள் மனிதர்கள் மூலமும் நிகழும் என்ற பாரதூரமான நம்பிக்கை இதன் மூலம் ஏற்படுகிறத வெளிப்படையாக புறச்சாதனங்கள் மூலம்  இதுபோன்றவை நடந்தால் அதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரம் பார்க்க தேவையில்லை ஆனால் புறச்சாதனங்கள் ஏதுமின்றி நடப்பதாக ஹதீஸ்களில் உள்ளது நாம் இதை கற்பனையாக சொல்லவில்லை புஹாரி உட்பட உள்ள ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சில ஹதீஸ்களில் இப்படிதுதான் வந்துள்ளது இப்னு ஹிப்பானில் வரக்கூடிய ஒரு ஹதீஸில் கண்ணேறு மூலம் ஒரு நபர் குளித்துக்கொண்டிருக்கும் இன்னொரு நபரின் உடல் வனப்பைப் பார்த்து வியந்த்ததால் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டதாக வருகிறது முஸ்லீம் 4422 என்ற என்னில் வரக்கூடிய இன்னொரு ஹதீஸில் ஒரு சிறுமியின் முகத்தில் படர்தாமரயைப் பார்த்து நபி ஸல் அவர்கள் இவளுக்கு கண்ணேரு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதாக வந்துள்ளது இது புஹாரியிலும் உள்ளது  இதெற்கெல்லாம் மேலாக விதியை வெல்லக்கூடிய ஒன்று இறுந்தால் அது கண்ணேறகத்தான் இருக்கும் என்றளவிற்கெல்லாம் ஹதீஸ்கள் உள்ளது எனவேதான்  அகீதாவிற்க்கு மாற்றமாக வரக்கூடிய இதுபோன்ற செய்திகளை ஏற்க்க்கூடாது என்று சொல்கிறோம்
                                                                          
இது சம்பந்தமாக நம்மை விமர்சிப்பவர்களிடம் சில கேள்விகள்                
 அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தாலே போதும் அந்த ஹதீஸ்களை நாம் ஏற்றுகொற்றவேண்டும் என்பவர்கள் சனதின் அடிப்படையில் மட்டுமே ஆதாரப்பூர்வமானாமக அறியப்பட்டுள்ள எல்லா ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்வார்களா என்றால் கண்டிப்பாக ஏற்று கொள்ளமாட்டார்கள் காரணம் விரல்விட்டு எண்ணக்கூடிய சனது சரியாக உள்ள சில ஹதீஸ்களின் கருத்து தவறாக உள்ளது                               

உதாரணமாக  உண்மைக்கு மாற்றமாக முஸ்லீமில் உள்ள ஒரு ஹதீஸில் நபி ஸல் அவர்கள் நபியாவதற்க்கு முன்பே ஹிஜ்ரத் சென்றாதாக வந்துள்ளது       
சில ஹதீஸ்களில் கருத்துக்கள் தலைகீழாக அறிவிக்கப்பட்டுள்ளது உதாரணமாக உம்மி மக்தூம் ரலி அவர்கள் பாங்கு சொல்லும் வரை உண்ணலாம் என்று செய்தியை பிலால் ரலி அவர்கள் பாங்கு ணொல்லும் வரை என்று தலைகீழாக அறிவிக்கப்பட்டுள்ளது           

  அதேபோல் ஒரே சம்பவத்திற்க்கு விளக்கமாக உள்ள சில ஹதீஸ்கள் பரஸ்பரம் எதிரெதிர் கருத்துக்களை சொல்லக்கூடியதாக உள்ளது இவை பெரும்பாலும் அஸ்பாபுன்னுஸுல் என்று சொல்லக்கூடிய குர்ஆன் வசணங்கள் இறங்கிய காரண காரியங்களை விளக்க்க்கூடிய ஹதீஸ்களில் அதிகமாக காணலாம்         

எனவே அறிவிப்பாளர் வரிசை மட்டுமே சரியாக உள்ளது என்பதால் குர்ஆனுக்கும் எதார்த்த்திற்க்கும் மாற்றமாக வரக்கூடிய தவறான ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை                  

ஆகவே குராபிகளையும் மிஞ்சக்கூடிய வமையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இப்படி சொன்னீர்களே ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அப்படி சொன்னீர்களே என்று குருட்டுத்தனமாக விமர்சிக்காமல் யதார்த்தமாக சிந்தித்து உண்ணையை விளங்குவோம் இன்ஷா அல்லாஹ்                

அல்லாஹ் மிக அறிந்தவன்