November 05, 2011

விதியைப் பற்றிய தீர்வு இஸ்லாத்தில் இல்லையென்றால் வேறு எங்கே உள்ளது?

ஏக இறைவனின் திருப்பெயரால்
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லீமல்லாதவர்களால் ஒரு மதம் என்ற நிலையில் அறியப்பட்டாலும் முஸ்லீம்களால் இஸ்லாத்தை ஒரு வாழ்க்கைநெறி அல்லது வாழ்க்கைக்குரிய வழிகாட்டும் மார்க்கம் என்று சொல்லப்படுவதற்க்குக் காரணம் மற்றுள்ள மதங்களைப் போல் வெறும் வணக்கவழிபாடுகளை மற்றும் போதித்து விட்டுப்போகாமல் மனிதர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட விஷயங்களான ஆன்மிகம் அரசியல் பொருளாதாரம் கொடுக்கல்வாங்கள் குற்றவியல் போன்ற ஜனனம் முதல் மரணம் வரை மனிதன் சந்திக்கின்ற சகலவிதமான துறைகளுக்கும் அறிவுப்பூர்வமான தீர்வை பல நூற்றான்டுகளூக்கு  முன்பே பகுத்து வழங்கியிருப்பதால்தான். இஸ்லாம் கூறும் தீர்வு எவ்வளவு அறிவிப்பூர்வமானது என்றால் ஒரு விஷயத்தில் இஸ்லாம் அறுதியிட்டுச் சொல்லும் தீர்வுகளை அது ஆன்மீகமாகட்டும் அரசியலாகட்டும் பொருளாதாரமாகட்டும் இது போன்ற வேறெந்த துறைகளாகட்டும் அவைகளுக்கு இஸ்லாம் வழங்கிய தீர்வு இன்னின்ன காரணங்களால் தவரானது அல்லது பொருந்தாதது அதைவிட அழகிய தீர்வு எங்களுடைய கொள்கைகளில் எங்களது மதத்தில் இருக்கின்றது என்று கூறி கொள்கையை முன்வைத்து இஸ்லாத்தை விமர்சிப்பதற்க்கு யாரும் முன்வரவில்லை வெறுமென பெண்ணடிமை கடுமையான சட்டம் பழமைவாதம் என்று கூக்குரலிடுபவர்களாகவே இஸ்லாத்தை விமர்சிப்பவர்க்ள உள்ளனர் இஸ்லாமிய சட்டதிட்டங்களை அதைவிட சிறந்த சட்டதிட்டங்களை எடுத்துக்காட்டி விமர்சிக்கமுன்வராதவர்களுக்கு இஸ்லாமில் கூறப்பட்டுள்ள விதியைப்பற்றிய கொள்கையை  தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதிக்கொண்டு விதியைப்பற்றி இஸ்லாம் முரன்பாடாகக் கூறிவிட்டது இதிலிருந்தே இஸ்லாம் முஹம்மது நபியின் கற்பனையில் உதயமான கொள்கைதான் என்று பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம் மற்றுள்ள மதங்களைச் சேர்ந்தவர்களும் விதியைப்பற்றிய நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் விதியைப் பற்றிய இஸ்லாமியக்கண்ணோட்டத்தை விமர்சிக்க முன்வருவதில்லை (விதி பற்றி அவர்களின் நம்பிக்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது) ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கம்யூனிஸக்கொள்கையில் உள்ளவர்களுமே விதி பற்றிய இஸ்லாமியக் கொள்கையை விமர்சிக்கின்றனர் இவர்கள் கூறுவதுபோல விதியைப் பற்றி இஸ்லாம் இரண்டு விதமாகக் கூறியிருப்பது உண்மைதானா என்றும் இந்த விதி விஷயத்தில் இஸ்லாம் கூறும் தீர்வைவிட சிறந்த தீர்வு இவர்களிடம் உள்ளதா அல்லது இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் தீர்வை விட மிகச்சிறந்த தீர்வு ஏதாவது இருக்கமுடியுமா என்பதையும் பார்ப்போம்

விதியைப் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு
இஸ்லாத்தில் தீர்வு சொல்லப்பட்டுள்ள எந்த விஷயமாக இருந்தாலும் அந்தத் தீர்வு மிக அறிவுப்பூர்வமாகவே இருக்கும் அறிவுப்பூர்வமானது என்றால் குறிப்பிட்ட விஷயத்திற்க்கு இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் தீர்வைவிட நடைமுறைக்குச் சாத்தியமான தொலைநோக்குப் பார்வையுடை தீர்வை  வேறெந்த மதங்களோ சித்தாந்தங்களோ கொண்டிருக்கவில்லை என்பதை அந்தக் கொள்கையையும் இஸ்லாமியக் கொள்கையையும் ஒப்பிட்டு வாதம் பிரதிவாத அடிப்படையில் நிரூபிப்பது இப்படி அனைத்து விஷயங்களிலும் ஒரு தீர்க்கமான முடிவை முன்வைத்து மற்றுள்ள எல்லாக் கொள்கையையும் விட இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள முடிவுதான் சரியானது என்று தர்க்கரீதியாக நிரூபிக்கும் இஸ்லாம் விதியைப்பற்றிய விஷயத்தில் மட்டும் முஸ்லீம்களைத் தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தூண்டவில்லை என்பதுடன் விதியைப்பற்றிய விஷயத்தில் சச்சரவு செய்யக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறுகிறது ஏனென்றால் இஸ்லாமிய அடிப்படைகளுள் நின்று கொண்டு ஒருகோணத்தில் சிந்தித்தால் விதி உள்ளது போலவும் மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாததுபோலவும் தோன்றும் காரணம் இறைநிராகரிப்பாளர்களைப் பார்த்து குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் அறிவு ரீதியாகச் சிந்தித்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றான்
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்ப வரோ17இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?  திருக்குர்ஆன் 32.4.
அதேநேரம் குர்ஆனின் வேறு பல இடங்களில் இறைநிராகரிப்பாளர்கள் ஓரிரைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் மறுமையில் நரகவாசிகளாக ஆவதற்க்குத் தானே காரணம் என்று சொல்கின்றான்
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான். திருக்குர்ஆன் 6.39.
 விதி விஷயமாக இஸ்லத்தின் இருவிதமான நிலைகளையும் விளக்கும் விதமாகத்தான் கீழ்க்கானும் செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்
நபி(ஸல்) அவர்கள் ('பகீஉல் ஃகர்கத்' மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதனைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், 'தம் இருப்பிடம் நரகத்திலா அல்லது கொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிடமாட்டோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொருவருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகை செய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழி காணப்படும்' என்று கூறிவிட்டு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர்...' எனும் (திருக்குர்ஆன் 92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள் .அறிவிப்பவர் அலி(ரலி) நூல்புஹாரி 4949.
ஆக இஸ்லாம் தன்னுல் கொண்டுள்ள எல்லாக் கொள்கையையும் தர்க்கரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் பகுத்தறிவுரீதியாகவும் மிகச்சரியானது என்று  நிருபித்தாலும் விதியைப்பற்றி மட்டும் பகுத்தறிவுரீதியாக நிரூபிக்காததற்க்குக் காரணம் பகுத்தறிவுரீதியாக என்னதான் சிந்தித்தாலும் விதி என்ற ஒன்றுக்கு விடை கண்டுபிடிக்க முடியாது என்பதால் தான் ஆக விதிபற்றிய இஸ்லாமிய நிலைபாடு அதற்க்கு புத்தறிவுரீதியாக பதிலேதுமில்லை என்பதுதான் அதற்க்காக விதியின் மேல் பழியைப்போட்டுவிட்டு உட்காரச்சொல்லவில்லை நடந்தவை விதியின் அடிப்படையில் நடந்து முடிந்து விட்டது என்றும் இனி நடப்பவைகளை நாம் சிந்துத்துச் செய்யவேண்டும் என்பதும் அதேநேரம் நாம் சிந்தித்துச் செய்யும் செயலும் இறைவனின் முன்னேற்பாடே என்று நம்புவதுதான்
விதிவிஷயத்தில் பகுத்தறிவாளர்களிடம் பதில் இருக்கிறதா?
இனி விதியைப்பற்றிய இஸ்லாமிய நிலைபாடை விமர்சிக்கக கூடிய எந்தவொரு விஷயத்தையும் பகுத்தறிவின் அடிப்படையில் சிந்தித்துத்தான் ஏற்றுக்கொள்வோம் என்று கூறி விதியை மறுக்கும் நாத்திகர்களிடம் விதி என்று சொல்லப்படும் உலகில் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கின்ற அனைத்துவிதமான நிகழ்வுகளுக்கும் தர்க்கரீதியான பகுத்தறிவுரீதியாக விளக்கம் உள்ளதா என்று பார்ப்போம் இதற்க்குத் தீர்வுகண்டாலே விதி என்று ஒன்று இருக்கின்றது என்றும் அந்த விதியைப்பற்றிய இஸ்லாமிய நிலைபாடே மிகச்சரியானதாகும் என்று புரிந்துவிடும் பொதுவாகவே கடவுள் மறுப்புக்கொள்கை உள்ள நாத்திகர்கள் விதி அதாவது இறைவனால் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டின்படி எதுவும் நடப்பதில்லை நம்முடைய சுயமுயற்ச்சியினால் தான் ஒவ்வொருகாரியமும் நடக்கிறது என்பதற்க்குச் சில சான்றுகளை முன்வைப்பார்கள் உதாரணமாக நான் இன்ன மதத்தில் தான் பிறந்தேன் ஆனால் பிற்காலத்தில் சிந்தித்து என் அறிவிற்க்குச் சரியெனப்பட்ட இந்த நாத்திகக் கொள்கையை ஏற்றுக்கொண்டேன் இதில் என்ன கடவுளின் முன்னேற்பாடு இருக்கிறது அதேபோல் என்வீட்டார் என் உரவுக்காரப்பெண் ஒருவரை திருமனம் செய்யச்சொல்லி வற்புறுத்தினார்கள் ஆனால் நான் எனக்குப் பிடித்த வேறொருபெண்ணைக் காதலித்து திருமனம் செய்து கொண்டேன் இதில் என் விருப்பம்தான் நிறைவேறியது இறைவனுக்கு இதில் என்ன பங்குள்ளது அதேபோல் என்னுடைய வசிப்பிடம் என்னுடைய வேலை பழக்கவழக்கம் நன்பர்கள் உட்பட வேறுசில செயல்களையும் சுட்டிக்காட்டி இப்படி அனைத்தையும் நான்தானே தேர்வு செய்கிறேன் இவ்வளவு ஏன் எனக்குத் தோன்றும்போது தற்கொலை செய்து கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் என்னுடைய வாழ்க்கையையே முடித்துக்  கொள்ளவும் என்னால் முடியும் இப்படி என் வாழ்க்கையின் அனைத்து விதமான விருப்பு வெறுப்புகளையும் நான்தானே தேர்வு செய்கிறேன் இதில் இறைவனின் பங்கு என்று ஒன்றுமில்லையே என்கிறார்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த உதாரணங்கள் சரியானது போலத் தோன்றினாலும் நாம் விரும்பும் அனைத்தையும் நம்மால் செய்து விட முடியாது என்பதுடன்  நம் வாழ்வில் நடந்ந்துள்ள மிகப்பெரும்பாலான காரியங்கள் நம்விருப்பப்படி நடந்தது இல்லை என்பதுதான் நிதர்சனமான உன்மை உதாரணமாக நம்முடைய தாய் தந்தையரைத் தீர்மானிப்பது முதல் எந்த நாட்டில் எந்த ஊரில் எந்த நிறத்தில் எப்போது பிறக்கவேண்டும் என்பதையும் உடல்ஊனம் ஏதும் இல்லாமலும் எந்த மொழி தாய்மொழியாக இருக்கவேண்டும் என்பது உட்பட நம் வாழ்வில் நடக்கின்ற ஆயிரக்கணக்கான காரியங்கள் நம் விருப்பப்படி நடப்பதில்லையே என்ற கேள்விக்கு இவர்களிடம் எந்தப்பதிலும் இல்லை அதுபோல் நம் பூமி உட்பட பிரபஞ்சத்தின் எந்தவொரு இயற்கை நிகழ்வுகளும் மனிதர்களின் விருப்பப்படி அமையாமல் நூறு சதவீதம் ஏற்கனவே இறைவனால் திட்டமிட்டபடித்தான் நடக்கிறது இயற்க்கை நிகழ்வுகள் எந்தவொன்றுக்குமே தர்க்கரீதியான காரணங்களை நம்மால் கூறமுடியாது என்பதையெல்லாம் சிந்தித்தாலே விதியென்ற இறைவனின் முன்னேற்பாட்டின்படித்தான் உலகின் அனைத்து இயற்கை நிகழ்வுகளும் நம்முடைய அன்றாட செயல்களும் நடக்கிறது  என்பது தெளிவாகப் புரியும்.
விதியை நம்புவதால் ஏற்படும் நன்மைகள்
விதியை நம்பச் சொல்லும் இறைவன் தான் விதியை உண்டாக்கியது எதனால் என்ற காரணத்தையும் தன்னுடைய திருமறையில் தெளிவுபடுத்துகின்றான்
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான் திருக்குர்ஆன் (57:23)
இதனடிப்படையில் இஸ்லாம் கூறும் விதிக்கொள்கையை நம்பக்கூடிய ஒரு மனிதர் தனக்கு எவ்வளவுதான் பேறும்புகழும் பணமும் அந்தஸ்த்தும் அதிகாரமும் வந்தாலும் இவையெல்லாமே இறைவனால் நமக்கு வழங்கப்பட்டதுதான் நம்மை விட திறமைசாலிகள் பலர் இருந்தாலும் நமக்கு இறைவன் வழங்கியிருக்கின்றான் என்றால் நம்முடைய அறிவால் ஆற்றலால் கிடைத்தவையல்ல என்று நினைத்து தனக்கு கீழ்நிலையிலுள்ளவர்களை தாழ்வாகக் கருதாமல் இருக்கவும் தன்னை ஒரு பெறும் அறிவாளியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் கருதிக்கொண்டு கர்வம் கொள்ளாமல் இருக்கவும் உதவும் அதேபோல் ஒருகாரியத்தில் தன்னுடைய முழு முயற்ச்சியைச் செலுத்தியும் அந்தக் காரியம் கைகூடவில்லை என்றாலும் இறைவன் நமக்கு நாடியது அவ்வளவுதான் ஒருவேளை இதைவிடச் சிறந்த்தை இறைவன் நமக்கு வழங்கக் கூடும் என்று என்னி மனஆறுதலடையவும் இஸ்லாமிய விதி நம்பிக்கை உதவும் இவை தர்க்க ரீதியான சில காரணங்கள் மட்டுமே இஸ்லாமிய விதிக்கொள்கையை நம்புவதால் மனித குலத்திற்க்கு என்னற்ற நன்மைகள் விளையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
விதியை மறுப்பதால் ஏற்படும் தீமைகள்
இனி விதியெல்லாம் ஒன்றுமில்லை நம்முடைய சுயமுயற்ச்சியின் அடிப்படையில் தான் நம்முடைய எல்லாச் செயல்களும் அமைகின்றன என்று நம்புபவர்கள் தனக்கு செல்வம் பதவி புகழ் அந்தஸ்த்து அதிகாரம் கிடைத்துவிட்டால் நம்முடைய அறிவினால்தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்று என்னிஎன்னியே தன்னை மிகப்பெரும் சக்தியாகக் கருதிக்கொண்டு மற்றுள்ளவர்களைத் துச்சமாகக் கருதத் துனிவதைப் பார்க்கிறோம் (எல்லோரும் அல்ல) அதேபோல் இதற்க்கு நேர்மாறாக தன்னுடைய முழு முயற்ச்சியையும் பிரோயோகித்தும் அந்தக்காரியம் கைகூடவில்லையென்றால் நம்மால் சாதிக்கமுடியவில்லையே என்று என்னிஎன்னி மனம் நொந்து இறுதியில் தற்கொலைக்கு ஆளாகும் நிலைமையையும் பார்க்கிறோம் உதாரணமாக உலகின் வரலாற்றையே புரட்டிப் போட்டவர் என்று கம்யூனிஸக் கொள்கையாளர்களால் வர்ணிக்கப்படும் லெனின் கூட தான் நோய்வாய்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தபோது நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஸ்டாலினிடம் எனக்கு விஷம் வாங்கிக் கொடு குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினாராம் லெனின் மிகப் பெரும் புரட்சியாளராக இருந்தும் கூட விதியை நம்பாததால் கை கால்கள் செயலிலந்த ஒரு சிறிய நோய்க்குப் பயந்து எவ்வளவு மோசமான முடிவை எடுத்துள்ளார் அதேநேரம் அவர் விதியை நம்பியிருந்தால் அவ்வளவு புரட்சி செய்தவர்அந்த ஒரு சிறிய நோயைப் பொருட்படுத்தியிருக்காமாட்டார் என்பதுதான் உன்மை இவை இஸ்லாம் கூறும் விதிக் கொள்கையை மறுப்பதால் ஏற்படும் தீமைகளில் தர்க்கரீதியான சில உதாரணங்கள் மட்டுமே எனவே நடந்தவைகளை விதியின் அடிப்படையில் நடந்து முடிந்துவிட்டது என்றும் நடக்க இருப்பவைகளை சிந்தித்துச் செயல்படுமாறும் தூண்டக்கூடிய இஸ்லாம் கூறும் அழகியவிதிக் கொள்கையை நம்புவதுதான் மனிதகுலத்திற்க்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment