October 05, 2011

உயிரனங்களின் படைப்பு மட்டுமே இறைவனின் இருப்பிற்க்கு ஆதாரமா?


ஏக இறைவனின் திருப்பெயரால்
மனித இனம் பூமியில் என்றைக்குத் தோன்றியதோ அன்று முதல் மனிதர்கள் உச்சரிக்கத் தொடங்கிய வார்த்தைதான் இறைவன் இந்தப் பூமிப்பந்தில் காலடி பதித்த முதல் மனிதன் தொடங்கி இன்றைய காலம் வரை வாழ்ந்து மரணித்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடான கோடி மனிதர்களில் படைத்த இறைவனைத் தெரியாத ஒரே ஒரு மனிதர் கூட இருந்திருக்க முடியாது என்று மிக உறுதியாகச் சொல்லலாம் அந்த அளவிற்க்கு இயற்கையிலேயே இறைவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது இறை நம்பிக்கையற்ற எந்த சமுதாயமோ நாடு நகரமோ சிறு கிராமமோ கூட மனித வரலாற்றில் கடந்து போனதில்லை இறை நம்பிக்கையற்ற சில மனிதர்கள் சில தலைவர்கள் சில பதிற்றான்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாமே தவிர மனித வரலாறு முழுவதுமே இறைவன் என்ற ஒருவனை ஏற்றுக்கொண்டதாகவே இருந்திருக்கின்றது ஒட்டு மொத்த மனிதர்களும் தங்கள் மதநம்பிக்கையின் அடிப்படையில் இறைவனை ஏற்றுக் கொண்டாலும் மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இறைவனை அறிமுகம் செய்கின்றன இந்த அறிமுகம் ஒவ்வொன்றும் பரஸ்பரம் எதிரெதிரானவையாகவும் இருக்கின்றது
அதுமட்டுமில்லாமல் அந்தந்த மதங்களின் பெயரால் உண்டாக்கப்பட்ட மூட நம்பிக்கைகள் சில மதங்களில் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஜாதிய அடிப்படைகள் இன்னும் சில மதங்களில் அந்த மதத்தின் தலைமைக்குக் கட்டுப்பட்டே அந்த அரசாங்கம் செயல்பட வேண்டுமென்ற அளவுக்கு ஐரோப்பாவையே ஆட்டிப்படைத்த மதத்தலைமை பீடங்கள் இன்னும் அறிவியல் வளர்ச்சிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கும் எதிரான சில மதங்களின் போக்கு இதுபோன்ற சில காரணங்களைக் கண்டு மனம் நொந்த சில மனிதர்கள் மதங்கள் எல்லாமே இப்படித்தான் என்று நினைத்து இஸ்லாமிய மார்க்கம் உட்பட எல்லா மதங்களையும் அந்த மதங்கள் எந்த அச்சானியில் சுழழ்கிறதோ அந்த அச்சானியான இறைநம்பிக்கையையும் சேர்த்தே வெறுக்கத் தொடங்கினர் விளைவு இறைமறுப்பு எனம் புதியதோர் கொள்கை உலகில் உருவானது இறைமறுப்புக் கொள்கையைச் சொன்னால் மட்டும் போதுமா இறைவன் இறுக்கின்றான் என்று சொல்லக்கூடியவர்கள் அதற்க்கு ஆதாரமாகச் சொல்லக் கூடிய விஷயங்களையும் மறுக்க வேண்டும் அல்லது அதற்க்கு தகந்த பதில் அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ஆளானார்கள் அந்த அடிப்படையில் ஒரு சாதரன இறை நம்பிக்கை உள்ளவர் அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இறைவன் இருக்கின்றான் என்பதற்க்கு அல்லது இறைவனை அவர் வணங்குவதற்க்கு அவர் சொல்லக் கூடிய முழு முதற்க்காரணம் இறைவன் என்னைப் படைத்தான் என்பதுதான் எனவே முதலில் மனிதனைக் கடவுள் படைத்தான் என்பதை மறுக்கவேண்டும் என்று கிளம்பியவர்கள் மனிதன் உட்பட அனைத்து உயிரனங்களையும் இறைவன் படைக்கவில்லை உயிரனங்களனைத்தும் தற்செயலாக உருவானவைதான் ஒரு நுன்னுயிரில் தொடங்கி காலநேர இயற்கை மாற்றங்களுக்கேற்ப ஒன்றிலிருந்து ஒன்றாக பரிணமித்துப் பரிணமித்து பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதன் தோன்றியதாக ஒரு விசித்திரமான பரிணாமக்கோட்பாட்டை?  முன்வைத்தார்கள் ஆக கடவுளை மறுப்பதற்க்கு அவர்கள் முன்வைத்த மிக மிக முக்கிய காரணம் இறைவன் மனிதனைப் படைக்கவில்லை மனிதன் சுயமாக உண்டானவன் என்பதுதான் இனி விஷயத்திற்க்கு வருவோம் பரிணாமவியல் கோட்பாடு எந்த அளவிற்க்கு பகுத்தறிவிற்க்கு எதிரானது எவ்வளவு அபத்தங்கள் நிறைந்தது என்பதையெல்லாம் மாற்றிவைத்து விட்டு இறைவன் இறுக்கின்றான் என்பதற்க்கு உயிரனங்களின் படைப்பு மட்டம்தான் ஆதாரமா அல்லது வேறு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா ஒரு வாதத்திற்க்கு (வாதத்திற்க்கு மட்டும் தான்) இவர்கள் சொல்லக் கூடிய பரிணாமக்கோட்பாட்டின்படி உயிரனங்கள் தற்செயலாகத் தோன்றியவைதான் என்று வைத்துக் கொண்டாலும் கூட அதுவே இறைவன் இல்லை என்பதை நிரூபிப்பதற்க்குப் போதுமா என்பதையும் இஸ்லாம் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபிப்பதற்க்கு வேறு என்னென்ன ஆதாரங்களை முன்வைக்கிறது என்பதையும் பார்ப்போம் பரிணாமக் கோட்பாட்டிற்க்கெதிராக இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்கள்  எல்லாமே தங்களுடைய மத நம்பிக்கையை மட்டுமே பதிலாகத் தந்துகொண்டிருக்கும் வேலையில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவன் என்பவன் ஒருவன் இறுக்கின்றான் அவன்தான் மனிதனைப் படைத்தான் என்பதை தர்க்க ரீதியாகவும் மிக அறிவுப்பூர்வமாகவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் இறைவன் தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மனிதர்களுக்கு வழங்கிய இறுதி வேதமான திருக்குர்ஆனில் தன்னுடைய இருப்பிற்க்கான பல ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டுகின்றான் அவைகளில் இரண்டை மட்டும் இப்போது பார்ப்போம்
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.     திருக்குர்ஆன் 2 164
இந்த வசனத்தில் தன் இருப்பிற்க்கு முதல் ஆதாரமாகச் சொல்வது வானம் பூமி படைக்கப்பட்டதைத்தான் இந்த வசனத்தில் மட்டுமல்ல இன்னும் பல வசனங்களில் வானம் பூமி படைக்கப்பட்டதைச் சிந்தித்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இறைவன் கூறுகின்றான் அப்படியென்றால் வானம் பூமி படைப்பைப் பற்றிச் சிந்தித்தால் இறையிருப்பை புரிந்து கொள்ள முடியுமா என்றால் கண்டிப்பாக புரிந்து கொள்ளமுடியும்
வானம் படைக்கப்பட்டதைப் பற்றிச் சிந்தித்தல்
நாம் வாழக்கூடிய பூமி இன்னபிற கோள்கள் அடங்கிய அன்டசராசரங்களிலேயே மிகப் பெரியதும் மிக ஆச்சர்யமானதும் தான் இந்த வானம் ஆம் மனிதன் நிலவில் கூட கால் பதித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் கூட அறிவியல் விஞ்ஞானிகளுக்கு ஓர் புரியாத புதிராகவே தான் வானம்  இருந்து கொண்டிருக்கின்றது ஏனென்றால் பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகளுக்கப்பால் உள்ள கிரகங்களைக் கூட மனிதன் ஆய்வு செய்து இது பூமியிலிருந்து இவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்று தோராயமாகச் சொல்லிவிட்டான் ஆனால் வானத்தைப் பொருத்தவரை விஞ்ஞானிகள் அதன் தூரத்தை என்ன வானம் என்று ஒன்று இருக்கின்றதா இல்லையா என்று கூடச் சர்ச்சை செய்யுமளவுக்கு அதன் தூரம் மனிதக் கற்ப்பனைக்கு அப்பாற்ப்பட்டுள்ளது அதனால் தான் நாம் கண்ணால் பார்க்கக் கூடிய வானத்தைக் கூட வானம் என்றெல்லாம் ஒன்றுமில்லை நம் கண்ணிர்க்கு அப்படித் தெரிகின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ஏனென்றால் புதியபுதிய சூரியக்குடும்பங்களையும் பல கோள்களையும் அடிக்கடி கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும் விஞ்ஞானிகளுக்கு வானத்தைப் பற்றி ஒரு அங்குல அளவுக்குக் கூட எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை வானத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு உள்ள தூரம் பல்லாயிரம் கோடி ஒளி ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் குத்துமதிப்பாகச் சொல்லும் அளவே நமக்கு தலையைச் சுற்றவைக்கிறது ஆக மனிதக்கற்பனைக்களுக்குப்பால் வானம் இருந்தாலும் அது வெற்றுச்சூனியம் ஒன்றுமல்ல உன்மையிலேயே வானம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது அதுவும் எந்த முரன்பாடும் இல்லாமல் மிக நேர்த்தியாக இருக்கின்றது என்பதைச் சிந்தித்து இவற்றையெல்லாம் படைத்த மகாசக்தி ஒருவன் இருக்கின்றான் அவன்தான் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுவதை ஏற்றுக்கொள்வதற்க்கு மிகப்பெரும் பகுத்தறிவல்ல சாதாரன அறிவே போதும் ஆனால் பகுத்தறிவாளர்கள் தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்
பூமி படைக்கப் பட்டதைப் பற்றிச் சிந்தித்தல்
நாம் வாழக்குடிய இந்த பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தாலும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் புரிந்துகொள்ளலாம் அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றத்தால் பூமியில் இருந்து கொண்டு விஞ்ஞானிகள் நம் சூரியக்குடும்பத்தின் உள்ளேயும் அதற்க்கு வெளியேயும் பல கோள்களையெல்லாம் ஆராய்ந்தாலும் கூட நாம் வாழக்கூடிய பூமியைப் பற்றி ஆய்வு இன்னும் தீர்ந்தபாடில்லை அந்த வகையில் பூமியைப் பற்றி மிகச்சமீபத்தில் வெளியான ஒரு செய்தியை மட்டும் பார்ப்போம் அதுவே பூமியின் படைப்பின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளப் போதமானதாகும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின் என்பவர் சாதரனமாக நாம் ஒரு பொருளுக்கு விலை நிர்னயிப்பதுபோல இந்த பூமிக்கு ஒரு விலையைத் தோராயமாக மதிப்பிட்டுள்ளார் அவர் பூமிக்கு மதிப்பிட்டுள்ள விலை எவ்வளவு தெரியுமா 210 ஆயிரம் லட்சம் கோடி இதை எந்த அடிப்படையில் கணக்கிட்டுள்ளார் என்றால் உயிரனங்கள் வாழ்வதற்க்குத் தகுதியானதாக பூமி இருப்பதால் இந்த விலையாம் பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களான செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களின் விலையை இவர் மதிப்பிட்டுள்ளதிலிருந்தே இவை தெளிவாகப் புரியும் அவைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா வெறும் ஏழு லட்சம் அதற்க்கும் குறைவுதானாம் அது மட்டுமல்ல வான்வெளியில் 1235க்கும் அதிகமான கிரகங்கள் உள்ளனவாம் அவைகளெல்லாம் உயிர்கள் வாழ்வதற்க்கு தகுதியானதாக இல்லாததால் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லையாம் இவர் பூமிக்கு நிர்னயித்துள்ள விலையைப் போன்று ஒருகோடி மடங்கு சேர்த்துச் செலவு செய்தாலும் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை உண்டாக்க முடியாது அப்படிப் பட்ட கிருக்குத்தனமான கற்பனையைக் கூட செய்யமுடியாது என்பது தனிவிஷயம் பூமியின் மதிப்பே இந்த விலை என்றால் விஞ்ஞானிகளின் அனுமானப்படி கண்ணிமைக்கும் நேரம் கூட நிற்க்காமல் அனுவளவும் தன் அச்சிலிருந்து விலகாமல் கோடானகோடி ஆண்டுகளாகச் சுற்றிச்சழன்று கொண்டிருக்கும் பூமியின் சுழற்ச்சிக்கு என்ன விலை மதிப்பிட வேண்டும் கற்பனை செய்து பாருங்கள் எனவே பூமியைப் பற்றிய இந்தச் சிறிய உதாரனத்தைச் சிந்தித்தாலே பூமியையும் வான்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோளங்களையும் படைத்துச் சுற்றச் செய்யும் ஒரு இறைவன் இருக்கின்றான் என்பதை எந்தச் சந்தேகமுமின்றி புரிந்து கொள்ளலாம்
இறைவன் இருப்பதை உணர்வதற்க்கு மிகப்பெரும் ஆதாரம் உயிரனங்களின் படைப்பா அல்லது வானம் பூமயின் படைப்பா
இறைவன் தான் இருப்பதற்க்கு உயிரனங்களின் படைப்பும் ஒரு ஆதாரம்தான் என்றாலும் அவற்றைவிட பல இடங்களில் வானம் பூமியின் படைப்பையும் இன்னபிற இயற்கை நிகழ்வுகளையும்தான் சான்றாக முன்வைக்கின்றான் அப்படிப்பட்ட சான்றுகளில் மிக முக்கியமானவைதான் கீழ்க்காணும் இறைமறையின் இரண்டு வசனங்கள்
வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர் களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.     திருக்குர்ஆன் 36 81
வானங்களையும், பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விடப் பெரியது. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்                   திருக்குர்ஆன் 40 57
மனிதன் உட்பட உள்ள உயிரனங்களையெல்லாம் இறைவன் படைக்கவில்லை அவை ஒவ்வொன்றும் தற்செயலாகத் தோன்றிப் பரினமைத்தவைதான் எனவே இறைவன் என்று ஒன்றுமில்லை என்ற காரணத்திற்க்காக படைத்த இறைவனை மறுக்கப் புகுந்தவர்கள் இந்த வசனங்களில் இறைவன் கூறும் கருத்தான உயிரனங்களின் படைப்பு பெரிதா அல்லது வானம் பூமியின் படைப்பு பெரிதா என்ற விஷயத்திற்க்கு முதலில் விடை தேடியிருந்தால் வானம் பூமி படைக்கப்பட்டுள்ள விதம் பற்றியும் அவையிரண்டும் மிக நேர்த்தியாக யுகம் யுகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் நேர்மையோடு சற்று சிந்தித்துப் பார்த்திருந்தால் கண்டிப்பாக படைத்த இறைவனை மறுத்திருக்கமாட்டார்கள் ஏனென்றால் வானம் பூமி படைக்கப்பட்டு அவையிரண்டும் செயல்படத் தொடங்கிய பின்னர் பலகோடி ஆண்டுகளுக்குப் பின்தான் பூமியில் உயிரனங்கள் வந்திருக்கின்றது அதிலும் உயிரனங்களைப் பொருத்தவரை அவை பூமியில் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு மரணித்து மண்ணோடு மண்ணாகுபவைதான் அதில் மனிதனின் நிலை சொல்லத் தேவையே இல்லை எத்தனையோ மிருகங்கள் நீன்ட நாள் வாழ்வதிலும் உடல் வலிமையிலும் மனிதனைவிட மிகப்பெரும் நிலையில் இருக்கின்றன ஆக எப்படிப்பட்ட உயிரினங்களானாலும் அவை பூமியில் அதிகபட்சம் 100 அல்லது 150 வருடங்கள் வாழ்ந்து விட்டு மரணிப்பவைதான் இந்தச் சிறிய கால அளவில் கூட உயிர் வாழ்வதற்க்கு எத்தனை எத்தனைப் போராட்டங்கள் உலகில் உள்ள கடல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அரைமணிநேரம் கோரத்தாண்டவம் ஆடினாலே போதும் உயிரனங்கள் பூமியில் வாழ்ந்த்தற்க்கான சுவடே இல்லாமல் போய்விடும் இந்த அளவிற்க்கு பலவீனமாகத்தான் உயிரனங்களின் நிலை உள்ளது ஆனால் வானம் பூமியின் நிலை அதுவல்ல உயிரனங்களின் படைப்போடு ஒப்பிடுகையில் வானம் பூமியின் படைப்பு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவிற்க்கு மிகப்பிரமான்டமானவை எனவே இவற்றையெல்லாம் நடுநிலையோடு சிந்தித்து இறைமறுப்பு எனும் அறிவிற்க்குப் பொருந்தாத கொள்கையிலிருந்து மிக அறிவிப்பூர்வமாக இஸ்லாம் கூறும் இறைக்கோட்பாட்டை நாத்திகர்கள் ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
அல்லாஹ் மிக அறிந்தவன் 

No comments:

Post a Comment