August 26, 2011

மறுமையில் வெற்றி பெற அமல்கள் மற்றும் பொதுமா?

 1. ஏக இறைவனின் திருப்பெயரால்
 • நாம் அன்றாட கடைபிடிக்கின்ற இறைவன் நம் மீது கடமையாக்கி இறுக்கின்ற வணக்க வணக்க வழிபாடுகளான தொழுகை நோன்பு ஜகாத் மற்றும் ஹஜ் போன்ற காரியைங்களை நாம் செய்யும் நோக்கமெல்லாம் அது இறைக்கட்டளை என்பதுடன் நாம் மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கத்தைப் பெற வேண்டும் என்று தான் இறைவன் நம் மீது கடமையக்கி இறுக்கின்ற வணக்க வழிபடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கூலிகளை நமக்கு வழங்கவுள்ளான் யார் அதிகமான இறைக்கட்டளைகளை நிறைவேற்றி அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களோ அவர்கள் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் இதை இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூருகின்றன் 

 • யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
  யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்
  ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
  (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்
  அல்குர்ஆன் 101 6 7 8 9 10 11


  இப்படி மறுமை வெற்றியை தீர்மானிக்கக்கூடிய நன்மையான காரியைங்களை ஒருவர் செய்வதன் மூலம் மட்டுமே சொர்க்கத்தை பெற முடியுமா என்றால் ஒருபோதும் நன்மையான
  காரியங்கள் மட்டுமே மறுமை வெற்றியைத் தீர்மானிக்கப் போதுனமானதில்லை நன்மையான காரியங்களுடன் இறைவனின் தனிப்பெருங்கருனை இருந்தால் மட்டுமே மறுமையில் ஒருவர் வெற்றி பெற முடியும் என்பதை இறைத்தூதர் நபி (ஸல்)அவர்கள் கூருகிறார்கள்

  . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
 •  
  நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். 
  என ஆயிஷா(ரலி) அறிவித்தார் புஹாரி 6464 


  . அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார்
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)' என்று கூறினார்கள்
    புஹாரி 5673


  அருட்கொடைகளுக்கு வணக்க வழிபாடுகள் ஈடாகாது

  . நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்
    குர்ஆன் 14 34


  சாதரனமாக நாம் ஒரு வேலைக்கு வழங்கப்படும் கூழியைத்தான் உழைப்புக்கேற்ற ஊதியம் என்போம் இதையே இறைக்கட்டளையை நாம் நிறைவேற்றும்போது இறைவன் நமக்கு மறுமையில் வாக்களித்திருக்கின்ற இன்பங்களுக்கும் பரிசுகளுக்கும் பொருத்திப்பார்போமென்றால் அந்த எண்ணிலடங்கா இன்பங்களுக்கு இந்த உழைப்பு ஈடாகுமா என்றால் இந்த அற்ப உலகத்தில் இறைவன் நமக்கு வழைங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்குக் கூட அவை ஈடாகாது என்பதுதான் சரியாகும் ஏனென்றால்
  இந்த உலகத்தில் ஐம்பது வயது வரை வாழக்கூடிய ஒருவர் தனது வாழ்நளின் பெரும்பகுதியான நாற்பத்தி ஒன்பது வயது வரைக்கும் மிகவும் ஆரோக்கியமாகா வாழ்ந்து விட்டு தனது ஐம்பதாவது 
 • வயதில் நோய்வாய்ப்பட்டார் என்று வைத்துக்கொள்வோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஒரு சிருநீரகம் செயலிலந்து விட்டது என்றால் மாற்று சிருநீரகம் போருத்துவதற்க்கு அவர் தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணம் கூட போதுமனாதாக இல்லாமல் போகலம் அந்த அளவிற்க்கு ஒரு சிருநீரக்த்தின் விலை இருக்கும் அவரின் மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் யாரவது சிரு.நீரகம் தரமுன்வந்தால் கூட அதைப்பொருத்துவதற்க்கு ஆகும் செலவுமே ஏராளம் அப்படிப் பொருத்தினால் கூட அவர் பழைய நிலையில் ஓடியடி நடக்க உழைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது நடைபினமாக வாழ்.ந்து விட்டுப் போகலாம் அவ்வளவுதான் இப்போழுது சி.ந்தித்து பாருங்கள் அவர் தனது நாற்பத்தி ஒன்பது வயது வரைக்கும் சல்லிக்காசு
  செலவில்லமால் சிரநீரகத்தை சீராக இயக்கி சுகமாக வாழவைத்த அந்த இறைவனின் அருட்கொடைக்கு நம் வாழ் நாளில் மிக சொற்பமான நேரத்தில் செய்யப்ப்ட்ட வண்க்கவழிபாடுகள் ஈடாகுமா என்பதை அதேபோல் ஒருவருக்கு திடிரென மூச்சுத்தினரல் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர் சுவாசிப்பற்க்காக கொடுக்கப்ப்ட்ட ஆக்ஸிஜனுக்குக் கூட சிலிண்டர் இவ்வளவு என்று பணம் கொடுக்கவேண்டி வரும் இதைச்சிந்தனை செய்வோம் என்றால் நம்முடைய வாழ்/நாளில் இவ்வளவு காலம் எந்தச்செலவுமின்றி காற்றைச் சுவசிக்கத்தந்த அந்த இறைவனின் அருட்கொடைகளுக்கு நமது வணக்க வழிபடுகள் ஈடாகுமா என்று

   நாம் ஒருவருக்கொருவர் இறைவனின் கருனையை வேண்டுதல்

  முஃஸ்லீம்களாகிய நாம் ஒருவரையொருவர் ச/ந்தித்துதக் கொள்ளும்போது சொல்லிக்கொள்கிற சலாமில் கூட தன்னுடைய கருனையை வேண்டுமறுதான் இறைவன் கட்டளையிடுகின்றான்
  இறைவன் முதல் மனிதரான ஆதம் அலை அவர்களைப் படைத்து அவர்களை வானவர்களிடம் அனுப்பிவைத்து அவர்களுக்கு முகமன் சொல்லச்சொல்கிறன் அவர்களும் மலக்குகளிடம் சலாம் சொல்கிறார்கள் அதற்க்கு மலக்குகள் பதில் சொல்லும்பொழுது உங்கள்மீது சாந்தியும் இறைவனின் கருனையும் உண்டாகட்டும் என்று தான் பதில் சொன்னார்கள்  

 • . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
  அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, 'நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்' என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். 'சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)' என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) 'இறைவனின் கருணையும்' என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழம்லும்) குறைந்து கொண்டேவருகின்றன.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 6227
 •  
   நபி ஸல் அவர்களின் பிரார்த்தனை 

 •  நபி ஸல் அவர்கள் யாருக்காவது பிரார்த்தித்தால் அவருக்கு இறைவனின் கருனையை வேண்டித்தான் பிரார்த்திப்பர்கள் 

 •  அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்.
  அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன்.
  எவரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களின் மீது கருணை புரிவாயாக!" என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூ அவ்ஃபா(ரலி) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். அப்போது 'இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். புஹாரி 4166
 •  
  . ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
 •  
  நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்" என்று கூறினார்கள். 
  ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன: 
  நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), 'ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?' என்று கேட்டார்கள். 'ஆம் (இது அப்பாதின் குரல் தான்)" என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்" என்று பிரார்த்தித்தார்கள்.
 •                                                                                            புஹாரி 2655 

  அதே போல் நபி ஸல் அவர்கள் யாருக்காவது எதிராக பிரார்தித்தாலும் இறைவா இவரை உன் கருனையைலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று தான் பிரார்த்திப்பர்கள்

   இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
 •  
  நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்தபோது அவற்றை அழிக்கும்படி உத்திரவிட்டு 
 • அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறி சொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். உடனே, 'அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷிகளை) அப்புறப்படுத்தவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை" என்று கூறினார்கள். புஹாரி. 3352
  'நபி(ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, 'அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கிவிட்டார்கள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். 'தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார் புஹாரி. 4441.
 •  
  நபி ஸல் அவர்களுக்குக்கூட இறைவனின் கருணைதான் அவசியம் 


  மறுமையில் வெற்றி பெற வணக்கவழிபாடுகளோடு இறைவனின் கருணை எந்த அளவிற்க்கு முக்கியமானாதென்பதை புரிய நபி ஸல் அவர்கள் தங்களைப் பற்றி கூறிய செய்தியே சிறந்த
  சான்றகும் .

 • அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார்
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)' என்று கூறினார்கள்.
  மக்கள், 'தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறிவிட்டு, 'எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்' என்று கூறினார்கள         ் புஹாரி. 5673


  மேலும் இறைவனின் கருணையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நபி ஸல் அவர்கள் தனது மரணத்தருவாயில் பிரார்த்திப்பதைப் பாருங்கள் 

  . ஆயிஷா(ரலி) கூறினார்
  நபி(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன் புஹாரி 5674 


  இறைக்கருணை இருந்தால் சிறிய செயலுக்குக்கூட சொர்க்கம்

  இறைவன் ஒருவருக்குக் கருணை புரிய நாடிவிட்டால் அவரின் சிறிய செயலுக்குக்கூட சொர்க்கத்தை தருவான் என்பதை கீழ்க்கானும் நபிமொழிகளிகலிருந்து அறியலாம்

  'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 173
  மேலும் அல்லாஹ்வின் கருனையைப் பற்றி நபி ஸல் கூறுகையில்

 • . இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
  அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது' என்று (கருணையைத்) தனக்கு.த்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான்.
  இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி 7404
   எனவே நாமும் அந்த கருனையாளனிடம் தொழுகையிலும் மற்ற மற்ற பிரார்த்தனையிலும் இறைவனின் கருணையை அதிகமதிகம் வேண்டக்கூடியவர்களாக ஆகவேண்டும் அதன் மூலம் மறுமையில் வெற்றிபெற்றவர்களாக நாம் அனைவரையும் அ/ந்தக் கருணையலார்களுக்கெல்லாம் கருனையாளனான அல்லாஹ் ஆக்கியருள்புரிவானாகா
 • அல்லாஹ் மிக அறிந்தவன்August 18, 2011

பத்ரை நோக்கி

ஏக இறைவனின் திருப்பெயரால்

 • ரமலான் 17ம் நாள் பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு பயான்களை ஏற்பாடு செய்திருப்பார்கள் காரணம் அன்றுதான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரானா ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போர் தினம் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் பூன்டோடு ஒழித்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொன்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரைஷிகுப்பார்களுடன் நாம் தோற்க்கடிக்கப்பட்டால் உலகில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் யாருமே எஞ்சியிருக்கமாட்டார்கள் என்ற நிலைமையில் (நபி ஸல்) அவர்களின் தலைமையில் வெறும் முண்ணுற்று பதிமூண்று ஸஹாபாக்களை மட்டுமே கொண்ட இஸ்லாமியப் படை மோதி இறைவனின் மாபெரும் கிருபையால் மிகப் பெரும் வெற்றி கொண்ட தினம் பத்ர்போரைப் பொருத்தவரை இரண்டு அணிகள் மோதிக்கொண்டன என்பதை விட இரண்டு கொள்கைகள் மொதிக்கொண்டன என்பதுதான் சரியாகும் ஒன்று வணக்கத்திற்க்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்ற கொள்கையைக் கொண்ட நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மற்றொன்று அல்லாஹ்வுடன் மற்ற பலரையும் அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த குரைஷிக்காபிர்களான அபூஜஹ்லும் அவனது படையினரும் என்ன குரைஷிக்காபிர்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்களா? ஆம் அவர்களும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்கள்தான் அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்

 "வானங்களையும், பூமியையும்
படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர்
கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள்.
"அல்லாஹ்வையன்றி நீங்கள்
பிரார்த்திப்பவற்றைப் பற்றிக்
கூறுங்கள்!'' என்று கேட்பீராக! "அல்லாஹ்
எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால்
அவனது தீங்கை அவர்கள்
நீக்கி விடுவார்களா? அல்லது அவன்
எனக்கு அருளை நாடினால் அவர்கள்
அவனது அருளைத் தடுக்கக்
கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப்
போதும். சார்ந்திருப்போர்
அவனையே சார்ந்திருப்பார்கள்''
என்று கூறுவீராக    அல்குர்ஆன் 39 38

 அவர்களைப் படைத்தவன் யார்
என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ்
என்று கூறுவார்கள்.
எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?  அல்குர்ஆன் 43 87

"வானங்களையும், பூமியையும்
படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர்
கேட்டால் "மிகைத்தவனாகிய
அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக்
கூறுவார்கள்.  அல்குர்ஆன் 43 9

 ஆகிய வசனங்களில் மக்கா முஷ்ரிக்குகளும் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டவர்கள் தான் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி விட்டான் ஆக இருதரப்புமே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் தான் பின்னர் எதற்க்காக யுத்தம் செய்யவேண்டும் என்றால் ஒருகாரணம் தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திப்பதா அல்லது அவனுடன் மற்றுள்ளவர்களையும் சேர்த்துப் பிரார்த்திப்பதா என்பதுதான் ஆம் இன்று முஸ்லீம்கள் எனறு சொல்லிக்கொள்ளும் பலரும் கொண்டிருக்கும் அதே கொள்கையைத்தான் அன்றைய மக்கா முஷ்ரிக்குகளும் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு  லாத் மனாத் உஸ்ஸா போன்ற நிற்கும் சிலைகள் என்றால் இவர்கள் ஏர்வாடி நாகூர்  முத்துப்பேட்டை போன்ற கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதிகள் அவர்கள் இப்ராஹிம் இஸ்மாயில் (அலை) போன்ற நபிமார்களுக்கு சிலை வடித்து பூஜித்தார்கள் என்றால் இவர்கள் அப்துல்காதிர் ஜெய்லானி ஷாகுல்ஹமிது பாதுஷா தொடங்கி 
ஒரிரைக்கொள்கையை உலகுக்குச் சொல்ல வந்த நபி(ஸல்) அவர்கள் உட்பட பெரியார்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில்மவ்லிது பாடல்களை வடித்து அவர்களை
அல்லாஹ்வைவிட பெரியவர்களாகச் சித்தரித்து அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்களிடம் பிரார்த்திப்பதும் உதவி தேடுவதுமான மிகப்பெரிய ஷிர்க்கைச் செய்து கொண்டிருக்கிறார்கள் பத்ர் தினத்தன்று பள்ளிகளில் நடக்கும் பத்ர்போரைப் பற்றிய பயானில் வேடிக்கை என்னவென்றால் எந்த நோக்கத்திற்க்காக பத்ர் யுத்தம் நடைபெற்றதோ அந்த நோக்கத்தையே குழிதோண்டி புதைத்துவிட்ட இந்த மார்க்க அறிஞர்கள்? வந்து பத்ரைப் பற்றி பேசுவதுதான் எனவே அன்புள்ள இஸ்லாமியச் சகோதர சகோதரிகளே அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப்போல் அவர்கள் இனைவைத்தே தவிர அல்லாஹ்வை ஏற்பதில்லை என்ற வசனத்தின்படி வாழ்ந்து மறுமையில் நரகின் விரகுகளாகமல் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எந்த மார்க்கத்தைப் பின்பற்றச் சொன்னார்களோ அந்த மார்க்கத்தை நேரான முறையில் பின்பற்றி எந்த நோக்கத்திற்க்காக பத்ர் யுத்தம் நடைபெற்றதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்து மறுமையில் இறைப்பொருத்தத்தையும் சொர்க்கத்தையும் அடைவதற்க்காக நாமும் பத்ரின் கொள்கைகளை நோக்கி நடை போடுவோமாக அதற்கு அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரியட்டுமாக

                             அல்லாஹ் மிக அறிந்தவன்

                                                                                                 

August 15, 2011

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காக வகுக்கப்பட்டதா ?


ஏக இறைவனின் பெயரால்
அகில உலகுக்கும் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் தூதராக அனுப்பியள்ளேன் என்று பல இடங்களில் கூறுகின்றான் 


 (முஹம்மதே!)
நற்செய்தி கூறுபவராகவும்,
எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள்
அனைவருக்குமே
உம்மை அனுப்பியுள்ளோம். எனினும்
மனிதர்களில் அதிகமானோர் அறிய
மாட்டார்கள். 
34 28

 ஆனால் தற்காலத்தில் இஸ்லாத்தை விமர்சிக்கக்கூடிய சிலர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வகுத்தளித்த சட்ட திட்டங்கள் யாவும் அக்காலகட்டத்தில் அரேபியர்களின் வசதிகளுக்கேற்பவே முழுக்க முழுக்க அவர்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்காவே வகுக்கப்பட்டது என்றொறு 
குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் அவர்கள் இப்படிக் கூறுவதற்க்குக் காரனம் முஸ்லீம்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அடையாளங்களை பார்த்துத்தான் குறிப்பாக தொப்பி தாடி ஜிப்பா (முஸ்லீம்களில் சிலர் அணியும் முக்கால் அல்லது முழு நீலங்கிச் சட்டை) பலதாரமணம் தொடங்கி பேரித்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பதையும் இஸலாத்தின் இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற முஸ்லீம்கள் மக்காவிற்க்கு செல்வது உட்பட இன்னும் சில காரணங்களைச் சுட்டிக்காட்டி இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் அரேபியர்களுக்காவே வகுக்கப்பட்டது என்று வாதிடுகின்றனர் இவர்கள் சுட்டிக்காட்டக்கூடிய விஷயங்களில் தொப்பி ஜிப்பா போன்றவை உட்பட சில காரியங்கள் சில முஸ்லீம்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மற்றுள்ள இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் ஆனாலும் சரி வணக்க வழிபாடுகள் ஆனாலும் சரி அவையெல்லாமே உலக அழிவு நாள் வரை தோன்றக்கூடிய அகில உலகமக்கள் அனைவறையும் கருத்தில் கொண்டு அவர்கள் அன்றாடம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடுத்தொழுகக்கூடிய வகையில் மிக எளிமையானதாகவே அல்லாஹ் தன்தூதர் மூலம் உலகுக்கு அளித்துள்ளான் சரி இனி இவர்கள் கூறுவதுபோல் சில இஸ்லாமியச் சட்டங்கள் அரேபியர்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டதா என்று பார்ததால் பல இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் அரேபியர்களின் அன்றைய ஆச்சாரங்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட சில காரியங்களுக்கும் எதிராக உள்ளதை குர்ஆன் ஹதீஸில் வரக்கூடிய சில சட்டதிட்டங்களை காணும்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது அதுபோன்றவைகளில் ஒன்றுதான் முஸ்லீம்களுக்கு தினசரி ஐந்து நேரம் கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளுக்கு முன்பு செய்யும் உளூ (கை கால் முகம் உட்பட உடம்பின் சில பாகங்களை கழுவி அங்கசுத்தி செய்வது)

தொழுகைக்கு உளூ எவ்வளவு முக்கியம் என்றால் உளூ இல்லாமல் தொழப்படும் எந்த தொழுகையும் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை இந்த அளவுக்கு முக்கியமான உளுவை முறிக்கக்கூடிய காரணங்கள் சிலவற்றுள் ஒன்றாக முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஒட்டகக்கறி சாப்பிடுவதை குறிப்பிட்டுள்ளார்கள் இதை கீழ்க்காணும் ஹதீஸின் மூலம் தெளிவாக அறியலாம

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் (வந்து), "ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் உளூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் விரும்பினால் உளூச் செய்து கொள்க! இல்லையேல் உளூச் செய்யத் தேவையில்லை" என்று சொன்னார்கள். மீண்டும் அவர், "ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (மீண்டும்) உளூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ செய்துக் கொள்க!" என்றார்கள். அவர், "ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா?" என்று கேட்டார். அதற்கு, "ஆம் (தொழலாம்)" என்றார்கள். அவர், "ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா?" என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "கூடாது" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி).
குறிப்பு:
உணவில், ஒட்டக இறைச்சியைத் தவிர எதுவும் உளூவை முறிக்காது. ஸஹீஹ் முஸ்லீம் 539


ஆக ஒருவர் உளு செய்தபிறகு ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழுகயை நிறைவேற்ற வேண்டும் அதே நேரம் ஒருவர் உளு செய்த பிறகு ஆடு மாடு கோழி போன்றவைகளின் இறைச்சியை சாப்பிட்டால் அவர் மீண்டும் உளு செய்யாமலேயே தொழுகையை நிறைவேற்றலாம் இதை கீழ்க்காணும் ஹதீஸின் மூலம் அறியலாம்

அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களைத் தம் கரத்திலிருந்து ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டுவதைப் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த ஆட்டுச் சப்பையையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) கீழே போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை ஸஹீஹ் புகாரி 5408


  இதைக் கவனத்தில் கொண்டு இனி விஷயத்திற்க்கு வருவோம் உலகின் மிக மிகப் பெரும்பாலான பகுதிகளில் இல்லாததும் அந்தப் பகுதி மக்கள் தாங்கள் உணவாக வாழ்நாளில் ஒருமுறை கூட உண்ணாததும் தான் ஒட்டகமும் ஒட்டக இறைச்சியும் ஆனால் அரேபியர்களுக்கு அவை அப்படியல்ல அன்றைய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் காலந்தொட்டு இன்றைய இந்த நவீன காலம் வரையிலும் அரேபியர்களின் வாழ்வில் அன்றாடத்தேவைகளுக்காகவும் அவர்கள் உண்ணும் பிரதான அசைவ உணவாகவும் உள்ளதால் அவர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட ஒரு பிராணிதான் ஒட்டகம்

இந்த அளவிற்க்கு அரபிகளின் முக்கிய அசைவ உணவான ஒட்டகக்கறியைச் சாப்பிட்டால் உளு முறிந்து விடும் என்பதால் ஒருவர் உளு செய்துவிட்டு ஒட்டக இறைச்சியை சாப்பிட்டால் அதற்க்காக அவர் மீண்டும் உளு செய்துவிட்டுத்தான் தொழ வேண்டும் என்பதிலிருந்தும் உலகின் பல பாகங்களில் முக்கியமான அசைவ உணவாக உட்க்கொள்ளப்படும் ஆடு மாடு கோழி போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிட்ட ஒருவர் அவர் சாப்பிடுதற்க்கு முன்பு செய்த உளுவே போதும் மீண்டும் உளு செய்யவேண்டியதில்லை என்பதிலிருந்தே இது
அரேபியர்களுக்கு பாதகமாகவும் மற்றுள்ளவர்களுக்குச் சாதகமாகவும் இருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அறாயலாம் எனவே அன்புள்ளவர்களே கீழ்க்கானும் இறை வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல

 (முஹம்மதே!)
நற்செய்தி கூறுபவராகவும்,
எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள்
அனைவருக்குமே
உம்மை அனுப்பியுள்ளோம். எனினும்
மனிதர்களில் அதிகமானோர் அறிய
மாட்டார்கள். 
34 28

இஸ்லாமியச்சட்டதிட்டங்கள் அரபியர்களின் வசதிக்கேற்ப வகுத்தளிக்கப்பட்டதல்ல அவை உலக முடிவு நாள் வரைத் தோன்றக்கூடிய ஒட்டுமொத்த மனிதகுல நன்மையைக் கருத்தில் கொண்டே அகிலங்களின் இறைவனால் தொகுக்கப்பட்டு அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மூலம் உலகுக்கு வழங்கப்பட்டதே என்பதை ஐயமற அறியலாம்

அல்லாஹ் மிக அறிந்தவன்

இன்ஷா அல்லாஹ்
இன்னும் இது போன்ற சிலவற்றை அடுத்த தொடரில் காண்போம்


http://neermarkkam.blogspot.com