October 24, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை தொடர் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாற்றின் ஒரு பகுதியினை முந்தைய தொடரில் பார்த்தோம் அதில் கடாபியின் பிறப்பும் கல்வியும் புரட்சிகரச் சிந்தனை ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள் போன்ற சிலவிஷயங்களைப்  பாரத்தோம் அந்தத்தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும் அதன் தொடர்ச்சியாக இந்த்த்தொடரை வெளியிடுகிறோம்
கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்
பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத 
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இஸ்லாத்திற்கெதிரான கடாபியின் கொள்கைகள்
கடாபியைப்பொருத்த வரை சிறுவயது முதலே அவருக்கு உண்டான கம்யூனிஸத்தின் தாக்கம் அவரின் இறுதிவரை பிரதிபலித்தது அதனால் தான் கம்யூனிஸத்தின் சில கொள்கைகளை இஸ்லாத்திற்க்குள் நுழைக்க முயன்றார் அதுபோல் குர்ஆன் வசனங்களுக்கு  தன்இஷ்டப்படி வியாக்கியானம் செய்தார் குர்ஆனில் பல வார்த்தைகளை நீக்கவேண்டும் என்று சொன்னார் லிபியாவில் தான் வைத்ததுதான் சட்டம் என்பதுடன் தான் சொல்வதுதான் இஸ்லாம் என்ற நிலையையும் உண்டாக்க நினைத்தார் அதற்கெதிராக குரல் கொடுத்த பல ஆலிம்களை தூக்குமேடைக்கு அனுப்பினார் பலருக்கு உடல் உறுப்புக்களை வெட்டி ஊனமாக்கினார் 1970 ல் ஹிஸ்புத்தஹ்ரீர் இயக்கத்தவர்கள் பலைரைக் கொன்றார் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தவர்களைக் கொன்று குவித்த இஸ்லாத்திற்கெதிராக பலசட்டங்களை இயற்றிய அப்போதைய எகிப்து அதிபர் கமால்நாசரின் தீவிர ஆதரவாளராகவே கடாபி விளங்கினார் ஆனால் இஸ்ரேல் விஷயத்தில் கமால்நாசரைப் போலவோ அவரைத்தொடர்ந்து வந்த அன்வர்சதாத் போலவோ கடாபி முஸ்லீம்களை வஞ்சிக்கவில்லை அவர் எப்பொழுதுமே இஸ்ரேலை எதிர்க்கக்கூடியவராகவும் இஸ்ரேல் விஷயத்தில் முஸ்லீம்கள் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது என்ற கொள்கையுள்ளவராகவே கடாபி இருந்தார் அதனால் தான் அன்றைய அமெரிக்க வெளியுறவுச்செயலாளராக இருந்த கான்டலிசரைஸ் தன்னைச் சந்திக்க லிபியா வந்தபோது இஸ்ரேல் என்ற நாடு இருக்கககூடாது பாலஸ்தீன் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்
கிரீன்புக் எனும் லிபியாவின் தலையெழுத்து
அல்லாஹ் மூமின்களைப் பற்றி அவர்களுக்கு வாய்ப்பழித்தால் பூமியில் இறையாட்சியை நிலைநாட்டுவார்கள் என்று கூறுகின்றான் ஆனால் கடாபியைப் பொருத்தவரை அல்லாஹ் அவருக்கு நாற்பதாண்டுகளுக்கு மேல் லிபியவின் அதிகாரத்தைக் கொடுத்தான் ஆனால் கடாபி அங்கே இஸ்லாமிய ஆட்சியை நிறுவவில்லை மதுபானம் வட்டி போன்ற சிலவற்றை ஒழித்ததைத் தவிர வேறோன்றும் கடாபி செய்யவில்லை செய்யாதது மட்டுமல்ல 1975 ம் ஆண்டு கிரீன்புக் என்ற ஒன்றை 
எழுதிவைத்துக்கொண்டு அதுதான் லிபியாவின் சட்டப்புத்தகம் அரசியல்சாசனம் என்று எல்லாமாக அதை ஆக்கினார் தனி ஒருமனிதரால் எழுதப்பட்டு பல்லாண்டுகளாக ஒருநாட்டின் தலையெழுத்தையே தீர்மானித்து என்று சொன்னால் அது கடாபி எழுதிய கிரீன்புக்காகத்தான் இருக்கும்

ஹதீஸை நிராகரித்த கடாபி

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி ஒருகாலம் வரும் அப்போது வயிறுபுடைக்க உண்ட ஒருவன் (திமிர்பிடித்தவன்) ஒருவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றது அதுவே போதும் என்பான் என்ற நபிமொழி கடாபிக்குத்தான் பொருந்துமோ என்று என்னத்தோன்றுகிறது ஆம் கடாபி குர்ஆன் மட்டும் போதும் ஹதிஸ் தேவையில்லை என்ற கொள்கையுடையவராக இருந்துள்ளார் அதுபோல் முஹம்மது நபி அவர்களின் பேரைக்கேட்கும்போது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்று கூறுவது ஷிர்க் என்று கூறினார் அதுபோல் மக்காவில் உள்ள கஃபாவை அல்லாஹ் மனிதர்களுக்குப் பொதுவானதாக ஆக்கியிருக்கின்றான் என்று கூறி முஸ்லீமல்லாதவர்களையும் கஃபாவில் அனுமதிக்கவேண்டும் என்று சொன்னார் பின்னர் வந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இவ்வாண்டுக்குப்பின் இனைவைப்பாளர்கள் யாரும் கஃபாவை நெருங்கக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கின்றான் அதனால் முஸ்லீம்களைத் தவிர வேறுயாரும் மக்காவில் பிரவேசிக்கககூடாது என்று மாற்றிச்சொன்னார் இப்படி இஸ்லாத்தையும் குர்ஆனையும் தான்தோன்றித்தனமாக வியாக்கியானம் செய்தார் அதனால்தான் அரபுலகமும் உலக முஸ்லீம்களும் அவரை எதிர்த்தனர்

கடாபியின் மூலம் மற்ற ஆட்சியாளர்கள் கற்க வேண்டிய பாடம்

லிபிய சுதந்திரத்திற்க்காகப் போராடி 1931 செப்டம்பர் 16ல் தூக்குமேடையேறிய லிபிய சுதந்திரப்போராட்ட வீரர் உமர்முக்தார் அவர்களின் வரலாற்றைப் பற்றி உமர்முக்தார் என்ற ஆங்கிலப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது அந்தப்படத்தின் இறுதிக்காட்சியில் உமர்முக்தார் அவர்கள் தூக்கிலிடப்பட்டு கொள்ளப்பட்டவுடன் தரையில் விழும் அவரின் மூக்குக்கண்ணாடியை ஒரு சிறுவன் போய் எடுப்பதைப்போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்
அந்தச் சிறுவன் மூலம் முவம்மர் கடாபியைத்தான் உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது என்று உலகம் முழுவதும் பரவலாக ஒரு கருத்துச் சொல்லப்படுமளவிற்க்கு உமர் முக்தாருக்குப்பின் லிபியாவை காப்பாற்றவந்தவர் கடாபி என்றெல்லாம் கூடச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது கடாபியைப் பொருத்தவரை எகிப்து துனிஷியா போன்றெல்லாம் மக்களை வாட்டிவதைக்காமல் அவரால் முடிந்த அளவு நல்லமுறையில் திறமையாகத்தான் ஆட்சி நடத்தினார் மக்களுக்கு பல சலுகைகளையும் பல இலவச திட்டங்களையும் வழங்கினார் லிபியமக்களைப் பொறுத்தவரை கோத்திரங்களாக இருந்ததால் சில கோத்திரத்தாரின் எதிர்ப்பு எப்போதுமே கடாபிக்கு இருந்தது அதனுடன் தன் சர்வாதிகாரப்போக்கும் தன்னை எதிர்த்து யாரும் மூச்சுவிட்டால் கூட அவர்களை சிறைபிடிப்பதும் ஈவுஇரக்கமில்லாமல் கொன்றதுதான் கடாபிக்கு இந்த நிலைமை ஏற்படக்காரணம் கடாபி லிபியவை ஓரளவுக்கு நல்லமுறையில் ஆட்சி நடத்தினாலும் அவரின் ஆட்சிமுறை அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தந்த அடிப்படையில் இருக்கவில்லை என்பது தின்னம் இறைவன் கூறியமுறைப்படி இவர் ஆட்சிநடத்தியிருந்தால் எதிர்ப்பே வராது என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட மறுமை எனும் நிரந்தர வாழ்வில் நீதியான ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் வாக்களித்திருக்கும் மிகப்பெரும் வெற்றி கிடைத்திருக்கும் என்பது உறுதி ஆனால் இப்பொழுது இரண்டுமே நஷ்டமடைந்ததுதான்  மிச்சம் இதைப்பார்த்தாவது முஸ்லீம் நாடுகளை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய முறைப்படி நாட்டை ஆளமுன்வரவேண்டும் நேற்று 23.10 11 அன்று லிபியாவில் நடந்த சுதந்திர அறிவிப்புக் கூட்டத்தில் லிபியா இனி இஸ்லாமிய ஷரிஆ முறைப்படி ஆளப்படும் என்று தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது
கடாபியின் கோரமுடிவு
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக லிபியாவை ஆட்சி செய்த கடாபி இறுதியாக அவரின் சொந்த ஊரான ஸிர்த்தில் வைத்தே புரட்சிப்படைகளின் கைகளால் மிகக்கொடுரமாக அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றார் அவர் கொல்லப்பட்டவிதம் தொடர்பாக பலவித கருத்துக்கள் சொல்லப்படுகின்றன எப்படியிருந்தாலும் அவரைப் பிடித்து 45 நிமிடங்களுக்குப் பிறகுதான் கொல்லப்பட்டுள்ளார் என்பதையும் அதுதொடர்பாக இனையதளங்களில் வெளியான வீடியோக்களையும் பார்க்கும்போது நீண்ட நேரம் அடித்து கழுத்தில் கயிறைக் கட்டியெல்லாம் இழுத்து கொடுரமாக அடித்தேதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது அவரின் கொலையைப் பொருத்தவரை எந்த விசாரனையும் இல்லாமல் சர்வதேச சட்டங்களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுத்தான் இதைசெய்திருக்கிறார்கள் என்பது உறுதி
இறுதியாக
இத்தனை வருடங்கள் லிபியாவை தன் கைபிடிக்குள் வைத்து ஆட்சி செய்த கேர்னல் கடாபியின் இறுதிநிலையைப் பார்க்கும்போது ஆட்சி அதிகாரம் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும் ஒரு இறைவசனம் தான் ஞாபகம் வருகிறது
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!  திருக்குர்ஆன் 3.26
அல்லாஹ் மிக அறிந்தவன்
கடாபியின் வரலாறு முடிந்தது

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அப்துல் ஹக்கீம்,
    மிகவும் ஆய்ந்து அறிந்து நிறைய விஷயங்களை அறியத்தந்து இருக்கிறீர்கள். அருமையான பதிவுத்தொடர். ஜசாக்கல்லாஹ் க்ஹைர்..!

    ReplyDelete
  2. வலைக்கும் வஸ்ஸலாம்
    சகோ ஆஷிக் பதியப்பட்ட தகவல்கள் எல்லாம் செய்தித்தாள்களிலும் இனையதளங்களில் உள்ளது தான் நான் என்னால் முடிந்தவரை தொகுத்துதந்திருக்கின்றேன் இன்னும் நிறைய தகவல்கள் கடாபியைப் பற்றி உள்ளன உங்களுடைய கடாபியின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டும் அருமை

    ReplyDelete