October 24, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை தொடர் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாற்றின் ஒரு பகுதியினை முந்தைய தொடரில் பார்த்தோம் அதில் கடாபியின் பிறப்பும் கல்வியும் புரட்சிகரச் சிந்தனை ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள் போன்ற சிலவிஷயங்களைப்  பாரத்தோம் அந்தத்தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும் அதன் தொடர்ச்சியாக இந்த்த்தொடரை வெளியிடுகிறோம்
கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்
பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத 
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

October 23, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை


ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை  இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்
புரட்சிகரச் சிந்தனை
முவம்மர் கடாபி சிறுவயது முதலே புரட்சிகரச் சிந்தனை உள்ளவராக விளங்கினார் தான் பிறப்பதற்க்குச் சில வருடங்கள் முன்பு வரை தன் தாய்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டமும் அதில் உமர் முக்தார் போன்றோரின் தியாக வரலாறையெல்லாம் வாய்வழியாகக் கேட்டதும் ரஷ்ய கம்யூனிஸப்புரட்சியைத் தேடிப்பிடித்து படித்ததும் அக்காலகட்டத்தில் பாலஸ்தீன மன்னில் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் தங்களின் தந்திரத்தாலும் இங்கிலாந்தின் நூறுசதவித முழு ஆதரவுடனும் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற அரபு நாடுகளுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தததுமே அவரின் புரட்சிகரச் சிந்தனைக்கு வித்திட்டது எனலாம்

October 20, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 4 (இறுதித்தொடர்)


ஏக இறைவனின் திருப்பெயரால்
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் என்ற இந்தத் தலைப்பின் கீழ் இதுவரை மார்க்க அறிஞர்களுல் தாங்கள் இவ்வளவு காலமும் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் பொருந்தாத காரணத்தைச் சொல்லி சத்தியத்தை மறுப்பவர்களைப் பற்றி தொடர் ஒன்றிலும் தொடர் ஒன்றைக் காண இங்கே க்ளிக் செய்யவும் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே பலபல காரணங்களைச் சொல்லி சத்தியத்தை மறைப்பவர்களைப் பற்றி தொடர் இரண்டிலும் இரண்டாம் தொடரைக் காண இங்கே க்ளிக் செய்யவும் மார்க்க அறிஞர்களுல் சிலர் மார்க்கத்தின் மூலாதாரங்கள் எவை எவை என்பதிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால் மார்க்கத்தை எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல் எவ்விதமான பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடாமல் உள்ள மார்க்க அறிஞர்களைப்  பற்றி தொடர் மூன்றிலும் பார்த்தோம் தொடர் மூன்றைக்காண இங்கே க்ளிக் செய்யவும் இனி இறுதியாக நான்காம் வகையினரான என்னுடைய உம்மத்தில் (சமுதாயம்) எல்லாக் காலத்திலும் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும் என நபி(ஸல்) அவர்களால் முன்ன்றிவிப்புச் செய்யப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய உன்மையான மார்க்க அறிஞர்களைப் பற்றிப் பார்ப்போம் சுமார் 20 25 வருடங்களுக்கு முன்னால் தமிழுழக  முஸ்லீம்கள் மார்க்க விஷயத்தில் எந்த நிலையில் இருந்தார்கள் என்று பின்னோக்கிச் சிந்தித்துப் பார்த்தால்

October 17, 2011

தமிழ்மணமே மன்னிப்புக்கேள்

ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ் மணத்தைப் பற்றி வலைப் பதிவர்களுக்கும் சரி தமிழ் இனைய உலகில் தொடர்புள்ளவர்களுக்கும் சரி சொல்லித் தெரியவேண்டியதில்லை அந்த அளவிற்க்கு தமிழ் மணத்திற்க்கு தமிழ் திரட்டிகளில் முக்கியமான இடம் உண்டு அப்படிப் பட்ட தமிழ்மணம் அல்லது அதில் உள்ள நிர்வாகிகளில் சிலர்சமீபகாலமாக இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனையை தங்களின் சில செயல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் அதில் ஒன்று எதிர்க்குரல் என்ற தளத்தை நடத்தி வரும் சகோ ஆஷிக் அஹ்மத் அவர்கள் தமிழ் மணத்திடம் ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது முஸ்லிம்கள் சாதரணமாகச் சொல்லக்கூடிய முகமனான உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்று சொல்லியிருக்கின்றார் அதைப் பிடிக்கவில்லையென்றால் அதற்க்கு தமிழ் மணம் என்ன பதில் சொல்லவேண்டும்

October 15, 2011

காபா முன்பு சிவாலயமாக இருந்ததா Tamil Hindu தளத்திற்க்கு மறுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால்
சில நாட்களுக்கு முன்  Tamil Hindu.என்ற தளத்தில் காபா முன்பு சிவாலயமாக இருந்ததா என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தனர் சீதாராம் கோயல் என்ற வடஇந்தியர் ஒருவர் எழுதிய கட்டுரையை ஜடாயு என்பவர்  தமிழிழ் மொழிபெயர்த்திருந்தார் பொதுவாகவே Tamil Hindu. என்ற தளம் பாசிச சிந்தனைகொண்டவர்களால் நடத்தப்படும் தளமாகும் இத்தளம் முஸ்லீம்களையும் கிருஸ்தவர்களையும் கம்யூனிஸ்ட்களையும் விமர்சித்து எழுதுவதையே தன் வேலையாகக் கொண்டுள்ளது அதிலும் குறிப்பாக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து எழுதுவதையே தன் முழுநேர வேலையாகக் கொண்டுள்ளது இதெல்லாம் சாதரனமாக பாசிச சிந்தனை கொண்டவர்களால் செய்யப்படும் வேலைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கட்டுரையில் கட்டுரையாளர் ஆய்வு என்ற பெயரில் அளவுக்கதிகமாக கற்பனை செய்து இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு காபா (மக்காவில் உள்ள இறையில்லம்) சிவாலயமாக இருந்தது என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறந்த குலமான குரைஷிகுலத்தினர் காபாவில் பூஜைசெய்து கொண்டிருந்த ஹிந்துக்களாக (பிராமணர்கள்) இருந்தார்கள் என்றும் அதர்வன வேதத்தைத் திரித்துத்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதிக்கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்  இதில் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்பதைத் தவிர வேறெந்த விஷயத்தையும் நேரடியாக அவர் சொல்லவில்லை என்றாலும் மற்றுள்ளவர்கள் சொன்னதை இங்கே குறிப்பிட்டுள்ளதிலிருந்து அவரும் இந்தக் கருத்தைத் தான் நிறுவமுயன்றுள்ளார் என்பது தெரிகின்றது ஏனெனில் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்று சொல்லிவிட்டால் மக்காவில் வாழ்ந்தவர்கள் இந்துக்கள் தான் என்றாகிவிடும் அவர்கள் இந்துக்கள் என்றால் அங்கே பிறந்த நபி(ஸல்) அவர்களும் பிறப்பால் அவர்களைச் சேர்ந்தவர்கள் தான் என்று நிறுவி விட்டால் குர்ஆனையும்  இந்துக்களின் வேதமாகிய அதர்வன வேதத்திலிருந்துதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காப்பியடித்துவிட்டார்கள் என்ற கருத்தை உருவாக்கிவிடலாம் என்பது தான் காபா முன்பு சிவாலயமாக இருந்தது என்ற தலைப்பின் நோக்கம் இவற்றையெல்லாம் சொன்னாலும் கூட இவை எதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியாது என்று கட்டுரையாளரே சொன்னதிலிருந்து இவையெல்லாமே பாசிச சிந்தனை கொண்டவர்களின் வெற்று ஊகம்தான் என்பது புரிந்துவிடும் இருந்தாலும் இந்தக்கருத்து எந்த அளவிற்க்கு தவறானாது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்த மறுப்புக் கட்டுரை வெளியிடப்படுகின்றது

October 12, 2011

தவக்குல் கர்மானிக்கு நோபல் பரிசு அமெரிக்காவின் ராஜதந்திரம்


ஏக இறைவனின் திருப்பெயரால்
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின் அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட் அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய் என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும் இம்முறை இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால் அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில் புரிந்துவிடும்

October 05, 2011

உயிரனங்களின் படைப்பு மட்டுமே இறைவனின் இருப்பிற்க்கு ஆதாரமா?


ஏக இறைவனின் திருப்பெயரால்
மனித இனம் பூமியில் என்றைக்குத் தோன்றியதோ அன்று முதல் மனிதர்கள் உச்சரிக்கத் தொடங்கிய வார்த்தைதான் இறைவன் இந்தப் பூமிப்பந்தில் காலடி பதித்த முதல் மனிதன் தொடங்கி இன்றைய காலம் வரை வாழ்ந்து மரணித்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடான கோடி மனிதர்களில் படைத்த இறைவனைத் தெரியாத ஒரே ஒரு மனிதர் கூட இருந்திருக்க முடியாது என்று மிக உறுதியாகச் சொல்லலாம் அந்த அளவிற்க்கு இயற்கையிலேயே இறைவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது இறை நம்பிக்கையற்ற எந்த சமுதாயமோ நாடு நகரமோ சிறு கிராமமோ கூட மனித வரலாற்றில் கடந்து போனதில்லை இறை நம்பிக்கையற்ற சில மனிதர்கள் சில தலைவர்கள் சில பதிற்றான்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாமே தவிர மனித வரலாறு முழுவதுமே இறைவன் என்ற ஒருவனை ஏற்றுக்கொண்டதாகவே இருந்திருக்கின்றது ஒட்டு மொத்த மனிதர்களும் தங்கள் மதநம்பிக்கையின் அடிப்படையில் இறைவனை ஏற்றுக் கொண்டாலும் மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இறைவனை அறிமுகம் செய்கின்றன இந்த அறிமுகம் ஒவ்வொன்றும் பரஸ்பரம் எதிரெதிரானவையாகவும் இருக்கின்றது