November 19, 2011

நிரந்தர தீர்வு இஸ்லாத்தில் தீண்டாமை தொடர் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்
முந்தைய தொடரில் இந்து மதமும் யூதகிருஸ்தவ மதங்களும் நாத்திகத்தின் பரிணாமவியல் கோட்பாடும் எப்படியெல்லாம் தீண்டாமையைத் தூன்டுகின்றன என்று பார்த்தோம் அந்தத் தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும்
இனி இஸ்லாம் எவ்வாறு தீண்டாமையை ஒழித்தது என்று பார்ப்போம்
தீண்டாமை எனும் கொடிய விஷத்தைப் பொருத்த வரை அது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒன்றல்ல மனித வரலாறு தொடக்கம் முதலே தீண்டாமையும் இருந்துவந்துள்ளது எனவே தான் இந்த நவீன காலத்தில் வந்து தீண்டாமைக்குத் தீர்வு சொல்கிறோம் என்பது உன்மையான தீர்வாகாது என்கிறோம் ஒரு பிரச்சினை உருவாகும்போதே அதற்க்குத் தீர்வும் சொல்லவேண்டும் அதேநேரம் அந்தத்தீர்வானது எக்காலத்திற்க்கும் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் அது முக்காலும் அறிந்த படைத்த இறைவனால் மட்டுமே முடியும் அந்த வகையில் தீண்டாமை  என்றைக்கு உருவானதோ அன்றைக்கே அதற்க்குரிய தீர்வையும் இஸ்லாம் வழங்கியுள்ளது ஆம் ஆதம்(அலை) அவர்கள் முதல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் இஸ்லாம் எனும் மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக அல்லாஹ் வழங்கியதே அந்தத்தீர்வு.

November 12, 2011

நிரந்தர தீர்வு இஸ்லாத்தில் தீண்டாமை


ஏக இறைவனின் திருப்பெயரால்  
ஒரு மனிதன் தன்னைப் பேரன்ற சக மனிதன் ஒருவனை பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதுவதுதான் தீண்டாமை என்பதாகும் தீண்டாமையின் அளவுகோலைப் பொருத்தவரை நம் நாட்டில் காணப்படும் வெறும் இரட்டை குவளை முறைகள் அல்லது காலில் செருப்பணிந்து செல்வதற்கு விதிக்கப்டும் தடைகள் மற்றும் அல்ல வாழ்வின் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஒரு மனிதன் இன்னெரு மனிதனை தாழ்ந்தவனாகக் கருதுகின்றானோ அவையெல்லாமே தீண்டாமைதான் தீண்டாமைக்கானக் காரணங்களைப் பொருத்தவரை நாட்டுக்கு நாடு அவை வித்தியாசப்படும் மேலை நாடுகளைப் பொருத்தவரை நிறத்தின் அடிப்படையிலும் நம்முடைய இந்தியாவை பொருத்தவரை ஜாதியின் அடிப்படையிலும் அந்த காரணம் இருக்கின்றன தீண்டாமை இன்றோ நேற்றோ தோன்றிய ஒன்றல்ல மனித சமுதாயம் பல்கிப் பெருகி கூட்டம் கூட்டமாக மனிதர்கள் வாழத் தெரடங்கிய போதிருந்தே தீண்டாமை என்ற தீய குணமும் மனிதர்களுக்குள் வளரத்தெரடங்கி இன்றைய நவீன அறிவியல் காலம் வரை மனித சமுதாயத்தில் வேறூன்றி இருப்பதைப் பார்க்கிறோம் உதாரணமாக  மிகச்சமீபத்தில் நடந்து மக்கள் மறந்து விட்ட ஏழு பேரை பழிவாங்கிய பரமக்குடி துப்பாக்கிச் சூட்டையும் சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சி எஸ் கர்ண்ண அவர்கள் தான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்க்காக சக நீதிபதிகள் தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரியப்படுத்திய நிகழ்ச்சியுமே தீன்டாமை எனும் விஷம் எப்படி அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை பரவியுள்ளது என்பதறக்குச் சான்றாகும் எனவே மற்றுள்ள மதங்கள் எப்படி கடவுளின் பெயரால் தீண்டாமை எனும் தீமையை மனிதர்களின் மனங்களில் விதைக்கின்றன என்றும் இவைகள் கடவுளின் பெயரால் தீண்டாமையை நியாயப்படுத்தும் அதேவேளை கடவுள் மறுப்பு கொள்கையான நாத்திகக் கொள்கை தீண்டாமையை அழிக்க உதவியதா அல்லது தீண்டாமையை வளர்க்க உதவியதா என்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வான இஸ்லாம் தீண்டாமையை எவ்வாறு ஒழித்து கட்டியது என்பதையும் பார்ப்போம்

November 05, 2011

விதியைப் பற்றிய தீர்வு இஸ்லாத்தில் இல்லையென்றால் வேறு எங்கே உள்ளது?

ஏக இறைவனின் திருப்பெயரால்
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லீமல்லாதவர்களால் ஒரு மதம் என்ற நிலையில் அறியப்பட்டாலும் முஸ்லீம்களால் இஸ்லாத்தை ஒரு வாழ்க்கைநெறி அல்லது வாழ்க்கைக்குரிய வழிகாட்டும் மார்க்கம் என்று சொல்லப்படுவதற்க்குக் காரணம் மற்றுள்ள மதங்களைப் போல் வெறும் வணக்கவழிபாடுகளை மற்றும் போதித்து விட்டுப்போகாமல் மனிதர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட விஷயங்களான ஆன்மிகம் அரசியல் பொருளாதாரம் கொடுக்கல்வாங்கள் குற்றவியல் போன்ற ஜனனம் முதல் மரணம் வரை மனிதன் சந்திக்கின்ற சகலவிதமான துறைகளுக்கும் அறிவுப்பூர்வமான தீர்வை பல நூற்றான்டுகளூக்கு  முன்பே பகுத்து வழங்கியிருப்பதால்தான். இஸ்லாம் கூறும் தீர்வு எவ்வளவு அறிவிப்பூர்வமானது என்றால் ஒரு விஷயத்தில் இஸ்லாம் அறுதியிட்டுச் சொல்லும் தீர்வுகளை அது ஆன்மீகமாகட்டும் அரசியலாகட்டும் பொருளாதாரமாகட்டும் இது போன்ற வேறெந்த துறைகளாகட்டும் அவைகளுக்கு இஸ்லாம் வழங்கிய தீர்வு இன்னின்ன காரணங்களால் தவரானது அல்லது பொருந்தாதது அதைவிட அழகிய தீர்வு எங்களுடைய கொள்கைகளில் எங்களது மதத்தில் இருக்கின்றது என்று கூறி கொள்கையை முன்வைத்து இஸ்லாத்தை விமர்சிப்பதற்க்கு யாரும் முன்வரவில்லை வெறுமென பெண்ணடிமை கடுமையான சட்டம் பழமைவாதம் என்று கூக்குரலிடுபவர்களாகவே இஸ்லாத்தை விமர்சிப்பவர்க்ள உள்ளனர் இஸ்லாமிய சட்டதிட்டங்களை அதைவிட சிறந்த சட்டதிட்டங்களை எடுத்துக்காட்டி விமர்சிக்கமுன்வராதவர்களுக்கு இஸ்லாமில் கூறப்பட்டுள்ள விதியைப்பற்றிய கொள்கையை  தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதிக்கொண்டு விதியைப்பற்றி இஸ்லாம் முரன்பாடாகக் கூறிவிட்டது இதிலிருந்தே இஸ்லாம் முஹம்மது நபியின் கற்பனையில் உதயமான கொள்கைதான் என்று பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம் மற்றுள்ள மதங்களைச் சேர்ந்தவர்களும் விதியைப்பற்றிய நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் விதியைப் பற்றிய இஸ்லாமியக்கண்ணோட்டத்தை விமர்சிக்க முன்வருவதில்லை (விதி பற்றி அவர்களின் நம்பிக்கைக்கும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது) ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கம்யூனிஸக்கொள்கையில் உள்ளவர்களுமே விதி பற்றிய இஸ்லாமியக் கொள்கையை விமர்சிக்கின்றனர் இவர்கள் கூறுவதுபோல விதியைப் பற்றி இஸ்லாம் இரண்டு விதமாகக் கூறியிருப்பது உண்மைதானா என்றும் இந்த விதி விஷயத்தில் இஸ்லாம் கூறும் தீர்வைவிட சிறந்த தீர்வு இவர்களிடம் உள்ளதா அல்லது இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் தீர்வை விட மிகச்சிறந்த தீர்வு ஏதாவது இருக்கமுடியுமா என்பதையும் பார்ப்போம்