September 11, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 1


ஏக இறைவனின் திருப்பெயரால் 
. நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத் திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக்கொள்வார்கள்                 அல்குர்ஆன்  9 122
மேலே உள்ள குர்ஆன் வசனம் மூலம் மார்க்க்க் கல்வியை கற்பதற்க்கு அல்லாஹ் கூறும் காரனம் மக்களை எச்சரிப்பதற்க்காகவும் அதன் மூலம் மக்கள் நேர்வழியை அடையக்கூடும் எனபதற்க்காத்தான் அல்லாஹ்வின் இந்த கட்டளையின் அடிப்படையில் முஸ்லீம்களில் கனிசமான ஒரு தொகையினர் மார்க்கக் கல்வியைக் கற்றும் கற்றுக்கொடுத்தும் கொண்டு இருக்கின்றனர் ஆனால் மேலே நாம் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் கூறும் காரனத்திற்க்காக கற்கின்றார்களா என்றால் பெரும்பாலோனர் இதற்க்காக கற்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் சொல்லவும் முடியும் அப்படி என்றால் வேறு என்ன காரணம் இவர்கள் மார்க்கத்தைக் கற்பதற்க்கு  என்று இவர்கள் விளங்கி வைத்திருப்பெதெல்லாம் பள்ளிவாசல்களில்  தொழுகைக்கு இமாமத் செய்யவும் திருமணம் என்று சொன்னால் நிகாஹ் ஓதவும் ரபியுல்அவ்வல் மாதம் வந்து விட்டால் பள்ளியிலும் வீடுகளிலும் மவ்லீது ஓதவும் இறந்த வீடு திருமண வீடுகளில் சென்று அல்பாத்தஹா ஓதுவதற்காகவும் தான் இதுதான் தமிழகத்தில் பெரும்பாலான ஆலிம்களின் இன்றைய நிலை ஆனால் மார்க்க அறிஞர்களின் கடமையாக அல்லாஹ் கூறுவது 
 அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது       அல்குர்ஆன் 5 63
இந்த வசணத்தின் மூலம் மார்க்க அறிஞர்களின் கடமையாக அல்லாஹ் கூறுவது மனிதர்கள் பாவங்கள் செய்வதிலிருந்தும் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறும்போதும் அவர்களைத் தடுக்கவேண்டும் என்பதுதான் ஆனால் இன்று முஸ்லீம் சமுதாய ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் முஸ்லீம்கள் பாவம் செய்யும்போதும் இறைக்கட்டளையை மீறும் போதும் அவர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி ஸல் அவர்களும் சொன்ன அடிப்படையில் தடுக்கின்றார்களா என்றால் இல்லை அதுவும் மக்களிடம் காணப்படும் மிகப்பெரும் பாவமான அல்லாஹ்விற்க்கு இனைவைத்தல் அவனல்லாதோரிடம் பிராத்தித்தல் போன்ற பெறும் பாவங்களை கண்ட பிறகாவது தடுக்கின்றார்களா என்றால் இல்லை என்று சொல்வதுடன் இதுபோன்ற பாவங்களை செய்யுமாறு மக்களை ஊக்குவிப்பதும் அதை நியாயப்படுத்தவும்தான் செய்கிறார்கள் இதற்கெல்லாம் காரணம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் இவர்கள் கற்கவுமில்லை கற்றுக்கொடுக்கவுமில்லை என்பது தான்  இன்று தமிழகத்தில் உள்ள ஆலிம்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் எந்தவொரு ஆலிமாக இருந்தாலும் இந்த நான்கு வகையினுல் ஏதாவது ஒரு வகையினாரக வந்து விடுவார்கள் முதலாம் வகையினர் சத்தியம் இதுதான் என்று தெரிந்த பின்னும் தங்களுடைய கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்பதனாலும் தங்களுடைய வருமானம் போய்விடும் என்பதனாலும் தங்களுடைய தலைமைக்காகவும் நியாயமற்றக் காரணங்களைக் கூறி சத்தியத்தைக் கடுமையாக மறுப்பதும் சத்தியத்தை எடுத்துச் சொல்பவர்களுக்கெதிராக அவதூறைப் பரப்புவதும் அவர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள் இரண்டாம் வகையினர் சத்தியம் இதுதான் என்று தெளிவாக தெரிந்த பின்னும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் ஆசிரிய ஆலிம்களுக்கும் வேலை போய்விடும் போன்ற காரணங்களுக்கு பயந்துகொண்டு தனது மனதிற்க்கு விரோதமாக சத்தியத்தை மறைப்பவர்கள் மூன்றாம் வகையினர் சத்தியம் எது அசத்தியம் எது யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் குழப்பத்தில் உள்ளவர்கள் நான்காம் வகையினர் யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்விற்க்கு மட்டும் பயந்து மக்களை நிரந்தர நரகத்திலிருந்தும் பெரும் பாவங்களில் இருந்தும் காக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைப்பவர்கள் முதலில் முதலாம் வகையினறைப் பற்றிப் பார்போம்
சத்தியத்தை மறுப்பவர்கள் 
தமிழகத்தில் முஸ்லீம்களிடையே தவ்ஹீத் என்ற வார்த்தைகூட அறிமுகமில்லாத காலகட்டத்தில் முதன்முதலாக தவ்ஹீதை எடுத்துச் சொன்ன போது  மிக மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் இந்த ஆலிம்கள் தான் அதிலும் குறிப்பாக அரபு மதரஸாக்களிலே தலைமை ஆசிரியர்களாக இருந்த மிகப் பெரிய ஆலிம்களும் ஜமாத்துல்உலமாவில் உள்ள ஆலிம்கள்தான் அதிகம் இவர்கள் சாதாரன மக்களையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் தூன்டிவிட்டு கொலைவெறித்தாக்குதல் கூட நடத்தியிருக்கின்றார்கள் இன்றளவும் சில இடங்களில் தவ்ஹீத்வாதிகளுக்கு ஊர்விலக்கு சுன்னத்தான அடிப்படையில் தொழ பல பள்ளிகளில் தடை பிரச்சாரம் செய்யத் தடை என்றெல்லாம் உள்ளது தமிழகத்தில் முஸ்லீம்களுடையே புரையோடுப்போயிருந்த தர்கா வழிபாட்டைத்தான் தவ்ஹீத் ஆலிம்கள் முதன் முதலில் எதிர்த்தது அல்லாஹ்விற்கு இனைவைக்க கூடிய பெரும்பாவமான இந்தக் காரியத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது
 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.    அல்குர்ஆன் 4 48
இன்னும் திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ்விற்கு இனை வைப்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று கூறப்பட்டிருக்கின்றது
 தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.                                           அல்குர்ஆன் 4 116
இந்த இனைவைப்பைப் பற்றி நபி ஸல் கூறியது
. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது' என்று கூறினார்கள்
.        புஹாரி 4477
ஆக இவ்வளவு மகா பாவமான காரியத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்கள் நிரந்தர நரகத்திற்குரியவர்களாக ஆகிவிடக்கூடாது என்று தவ்ஹீத் ஆலிம்கள் களமிறங்கிய போது தர்கா வழிபாடு கூடும் அங்கு அடங்கியிருக்கும் மகான்களிடம் பிரார்த்திக்கலாம் என்று குர்ஆன் வசனங்களுக்கு தப்பும் தவறுமாக விளக்கம் கூறி அதை நியாயப்படுத்தினார்கள் இன்றளவும் அதற்காக வாதாடிக்கொண்டிருக்கிறார்கள்  அடுத்த்து மவ்லித் பாடல்கள் இந்த மவ்லித்களில் தான் எத்தனை எத்தனை ஷிர்க்கான வார்த்தைகள் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜெய்லானி அவர்களையும் நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா அவர்களையும் ஏன் நபி ஸல் அவர்களையும் கூட அல்லாஹ்விற்கு நிகராக புகழ்ந்து அழகு பார்க்கிறார்கள் அல்லாஹ்வை நேசிப்பதைவிட அவர்களை அதிகம் நேசிக்கறார்கள் இத்தகையோரை அல்லாஹ் தன் திருமறையில் {காபிர்கள்} இறைமறுப்பாளர்கள் என்று கூறுகின்றான்
(என்னை) மறுப்போர் என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள நினைக் கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்  அல்குர்ஆன் 18 102
இப்படியெல்லாம் அல்லாஹ் கூறிய பிறகும் இம்மாபெரும் பாவத்தை நியாயப்படுத்திக்கொண்டும் இன்னும் அல்லாஹ்வை மட்டும் வணங்கப்பட வேண்டும் என்று கட்டிய அவனது பள்ளிகளிலும் இன்னும் வீடுகளிலும் இதை தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இது போன்ற மார்க்க்க் காரியங்கள் ஒவ்வொன்றையும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் செய்ய விடாமல் அறிவின்றி தாங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுக்கக் கூடியவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கையை கேட்டு நரகத்திற்கு அஞ்சி இனியாவது அவர்கள் திருந்திக்கொள்ளட்டும்
. கியாமத் நாளில்1 முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது          அல்குர்ஆன் 16 25
''ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்துநம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும்உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! 'குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்ததுஎன்பதைக் கவனியுங்கள்    அல்குர்ஆன் 7 86
இன்னும் இதுபோன்றவர்களைப் பற்றி நபி ஸல் அவர்கள் கூறுவதைப் பாருங்கள்
 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:            என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
நூல் புஹாரி 100

அல்லாஹ் மிக அறிந்தவன்

No comments:

Post a Comment