September 19, 2011

சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் தொடர் 2


ஏக இறைவனின் திருப்பெயரால்
சென்ற தொடரில் சத்தியத்தை மனமுரண்டாக மறுப்பவர்களைப் பற்றி பார்த்தோம் அந்தத் தொடரைக் காண இங்கே க்ளிக் செய்யவும் இந்த தொடரில் சத்தியத்தைத் தெரிந்து கொண்டே மக்களிடம் சொல்லாமல் மறைப்பவர்களைப் பற்றிப் பார்ப்போம்
மார்க்கத்தைக் கற்றுள்ள சிலர் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டும் தாங்கள் பணி புரியும் பள்ளி நிர்வாகத்திற்கும் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சியும் தமது வயிற்றுப் பிழைப்புக்காகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லாமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்வோரையும் பார்க்கிறோம் சத்தியப்பாதையில் இருப்பவர்கள் இவர்களிடம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய கருத்துக்களை மறைக்காமல் அப்படியே மக்களிடம் எடுத்துக்கூறுங்கள் என்று சொன்னால் கொஞ்சம் கொஞ்சமாக? எடுத்துச் சொல்வோம் ஒரேடியாக மக்கள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்தைச் சொன்னால் வீனான பரச்சினைகள் தான் வரும் இதன் மூலம் சமுதாய ஒற்றுமை சீர்குலையும் என்று நொண்டிச் சாக்குச் சொல்வார்கள் முதலில் இவர்கள் கூறும் காரணம் மார்க்க அடிப்படையில் சரிதானா என்று பார்த்துவிட்டு இவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவனின் தூதரும் கூறும் கடும் எச்சரிக்கைகளைப் பார்ப்போம் முதலில் இவர்கள் சொல்வதைப் போல மார்க்கத்தை மறைக்காமல் அதன் தூய வடிவில் எடுத்தச்சொன்னால் அதுவும் மக்கள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்தைச் சொன்னால் சமுதாயம் பிளவுபடுமா என்று சொன்னால் கண்டிப்பாக பிளவு படத்தான் செய்யும் ஆனால் அதற்க்காக நபி(ஸல்) அவர்களும் மற்ற நபிமார்களும் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு சமுதாய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் கருத்தக்களைச் சொல்லாமல் விட்டு விட்டார்களா அல்லது சில விஷயங்களை மறைத்துள்ளார்களா என்று இறைவேத்த்திலும் அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய இறைத்தூதர்களின் செய்திகளிலும் தேடிப் பார்த்தோம் என்று சொன்னால் கண்டிப்பாக அவர்கள் சமுதாய ஒற்றமையைக் கருத்தில் கொள்ளவே இல்லை மாறாக சத்தியத்திற்க்கு முன்னால் சமுதாய ஒற்றமை தடையாக வந்தபோதெல்லாம் சத்தியத்தைப் போட்டு உடைத்ததைத்தான் காணமுடிகிறது இறைத்தூர் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றை அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்
மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதைப் பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவு களாக முழுமையடைந்தது. ''என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக இருந்து சீர் திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றி விடாதீர்!'' என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறினார்          திருக்குர்ஆன் 7 142
மூஸா(அலை)அவர்களுக்கு இறைவன் வேதம் வழங்குவதற்க்காக குறிப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்திற்க்கு வரச்சொன்னான் மூஸா(அலை) சென்றதற்க்குப் பின் தன் சகோதரர் ஹாருன்(அலை) அவர்களை  தமது சமுதாயத்திற்க்குப் பொருப்பாளாராக விட்டுச் சென்றார்கள் அப்படி அவர்கள் விட்டுச் சென்றதற்க்குப் பின் அந்தச் சமுதாயத்தில் இருந்த சாமிரி என்ற  பொற்கொல்லன் அந்தச் சமுதாயத்தாரிடம் இருந்த ஆபரணங்களை உருக்கி காளைக் கன்றின் சிற்பத்தை உருவாக்கி இதுதான் உங்கள் இறைவனும் மூஸா(அலை) அவர்களின் இறைவனுமாகும் எனவே இதைவணங்குங்கள் என்று கூறி அந்தச் சமுதாயத்தவர்களில் பெரும்பாலோனரை ஓரிரைக் கொள்கையிலிருந்து இனைவைப்பவர்களாக மாற்றிவிட்டான் இப்பொழுது அந்தச் சமுதாயம் பிளவு பட்டு பலபேர் இனைவைப்பவர்களாகவும் சிலபேர் மட்டும் ஓரிரைக் கொள்கையிலேயே நீடிப்பவர்களாகவும் இருந்ததைக் கண்ட ஹாருன்(அலை) அவர்கள் ஓரிரைக் கொள்கையிலிருந்து தடம் புரண்டு இனைவைப்பவர்களாக மாறிவிட்டவர்களை மீண்டும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கிறார்கள் இவர்கள் கூறுவதைப் போன்று சமுதாயம் பிளவு பட்டுநிற்கும் இந்த நேரத்தில் சமுதாய ஒற்றுமைதான் முக்கியம் என்று கருதி அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல் சத்தியத்தை மறைத்து கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை மாறாக ஓரிரைக் கொள்கையிலிருந்து தடம் புரண்டு போனவர்களை ஓரிரைக் கொள்கையின் பால் அழைப்பதற்க்காக சத்தியத்தை எடுத்துச் சொல்லி அவர்களிடம் கடுமையாகப் போராடியிருக்கின்றார்கள் எந்த அளவுக்கென்றால் ஹாருன்(அலை)அவர்களை அவர்கள் கொல்லவும் தயாராகிவிட்டார்கள் இதை ஹாருன்(அலை) மூஸா(அலை) அவர்களிடம் கூறியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்
கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பிய போது ''எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) ''என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.            அல்குர்ஆன் 7 150
இனி சத்தியத்தைக் கூறும் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் சமுதாய ஒற்றுமைக்கு என்ன அளவுகோள் வைத்திருந்தார்கள் என்பதை புஹாரியில் வரும் ஒரு ஹதீஸின் மூலம் அறியலாம்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, 'பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்க, மக்கள் 'ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்' என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், 'நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?' என்று கூறினான். அப்போதுதான் 'அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...' என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது              .               புஹாரி 4770.
இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள் என்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து (வஹி) இறைக்கட்டளை இறங்கிய மாத்திரத்தில் அனைவரும் காணும் வகையில் ஸஃபா குன்றின் மீது ஏறி தன் உறவினர்களின் குடும்பப் பெயர்களைக் கூறி அழைத்து அதன் மூலம் தன் பெரிய தந்தையையே தனது மார்க்கத்தின் பரம எதிரியாகப் பெற்றுக்கொன்டார்கள் என்று சொன்னால் இந்த ஆலிம்கள் கூறும் சமுதாயத்தில் என்றுமே இருந்திராத அந்தச் சமுதாய ஒற்றுமை போய்விடும் என்பதை விட நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தின் முன்பு சமுதாய ஒற்றுமை என்ன தன் குடும்ப ஒற்றமையைக் கூடக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை சத்தயத்தை எடுத்துச் சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்வும் தன் தூதருக்கு அவ்வாறுதான் கட்டளையிடுகின்றான்
உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!      அல்குர்ஆன் 15.94.
இன்னும் நபி இப்ராஹிம்(அலை)அவர்கள் தன் தந்தைக்கும் தன் சமுதாயத்திற்க்கும் எதிரே களமிறங்கியதும் இன்னும் பல நபிமார்கள் வரலாறிலும் சமுதாய ஒற்றுமை குடும்ப ஒற்றுமையை விட சத்தியக்கருத்துக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கிறோம் ஆகவே சத்தியத்திற்க்கு முன்னால் சமுதாய ஒற்றுமைக்கு மார்க்கத்தில் எள்ளளவும் மதிப்பில்லை என்பதை சந்தேகமில்லாமல் அறியலாம் இனி ஒற்றுமையையும் அது போல வேறு பல காரணங்களைச் சொல்லியும் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே சத்தியத்தை மறைப்பவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் கூறுவதைப் பாருங்கள்
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்
மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.    அல்குர்ஆன் 2 159 160
இதில் அல்லாஹ் கூறுவது மக்களுக்கு அவர்கள் நேரான பாதையில் நடந்து இம்மை மறுமையில் வெற்றி பெறுவதற்க்கான சான்றுகளையும் நேர்வழியையும் தன்னுடைய வேதத்திலும் வேதத்தை விளக்க வந்த தூதர்களின் போதனைகளிலும் தெளிவு படுத்தி விட்டான் ஆனாலும் மக்களில் பெரும்பாலோனர் நேரான வழியில் நடக்காததற்க்குக் காரணம் அல்லாஹ் அருளிய வேதத்தைக் கற்றறிந்தவர்கள் அதைச் சரியாக மக்களுக்கு எடுத்துச் சொல்லாததும் அதில் பெரும்பாலானவைகளை மறைதத்தும் தான் காரணம் இது போன்றவர்களைத் தான் அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நல்ல மனிதர்களும் சபிக்கிறார்கள் அல்லாஹ்வின் சாபம் என்றால் நாம் சாதரனமாக மற்றவர்களைச் சபிப்பது போல் அல்ல மாறாக மறுமையில் கடும் தண்டனையைத்தான் அல்லாஹ் சாபம் என்கிறான் ஆம் அல்லாஹ்வின் சாபத்தைவிட ஒரு பெரிய தண்டனை தான் என்ன அதுவே மிகப் பெரிய தண்டனைதான் ஆனால் தாங்கள் இதுவரை மறைத்த சத்தியக்கருத்துக்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தித் திருந்திக்கொன்டோரைத் தவிர என்று அல்லாஹ் கூறுகின்றான் எனவே இது போன்ற கடும் எச்சரிக்கைகளைக் கண்ட பிறகாவது ஒற்றமை போன்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சத்தியத்தை மறைப்பவர்கள் திருந்திக் கொள்ளவேண்டும் இன்னும் இது போன்ற சத்தியத்தை மறைக்கக்கூடிவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் மற்றோர் இடத்தில் கூறுவது
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில்1 அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!
அல்லாஹ் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளியிருந்(தும் அதை மறைத்)ததே இதற்குக் காரணம். வேதத்திற்கு முரண்படுவோர் (உண்மையிலிருந்து) தூரமான முரண்பாட்டிலேயே உள்ளனர்.
அல்குர்ஆன் 2 174 175 176
இன்னும் மார்க்க அறிஞர்கள் சத்தியத்தை மறைக்கக்கூடாது என்பது மட்டுமில்லாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்வது அவர்களின் கட்டாய கடமை என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்
அவர்களின் பாவமான கூற்றை விட் டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
திருக்குர்ஆன் 5 63
நபி(ஸல்) அவர்கள் இது போன்றவர்களைப் பற்றிகூறியது
யார் கல்வியைப் பற்றிக் கேட்கப்படுகின்றாறோ அவன் அந்தக் கல்வியை அறிந்திருக்கிற நிலையில்றவன் அதை மறைத்தால் அவனுக்கு மறுமையில் நெருப்பாலான கடிவாளம் இடப்படும்
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி) நூல் திர்மிதி 2573
அதுமட்டுமில்லாமல் சமுதாயம் இறைக்கட்டளையை மீறி தெளிவான வழிகேட்டில் வீழ்வதைக் கண்ட பிறகும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி மக்களை நேர்வழிக்கு கொன்டு வர முயற்ச்சிக்காமல் தன்னளவில் சரியாக நடந்து கொள்பவர்களையும் அவர்கள் சத்தியத்தை எடுத்துக் கூறாததால் இறைத் தண்டனை அவர்களையும் வந்தடையும் என்பதை பின் வரும் சனிக்கிழமைக்காரர்களைப் பற்றிய குர்ஆன் வசனவ்கள் தெளிவாக விளக்குகின்றன
''அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் ''உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.    திருக்குர்ஆன் 7 164 165
இந்தச் சம்பவம் நம்மை உணர்த்துவது அந்தச்சமுதாயத்திர் தீமை செய்தவர்கள் தீமையைக் கண்டும் அதை எடுத்தச் சொல்லாமல் தன்னளவில் நல்லவர்களாகா இருந்தவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தவர்கள் என மூன்று விதமானவர்கள் இருந்தார்கள் அந்த நிலையில் இறைத் தண்டனை அந்தச் சமுதாயத்திற்கு இறங்கியபோது நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தவர்களை மற்றும் காப்பாற்றுகிறான் என்றால் தீமையைக் கண்டும் தடுக்காதிருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரலாம் இவ்வளவிற்கும் அந்தச் சமுதாயம் செய்தது இனைவைப்பைப் போன்று கொடிய குற்றமல்ல சனிக்கிழமைகளில் மீன் படிக்கக்கூடாது அன்று முழுவதும் அவர்கள் வனக்கவழிபாடுகளில் ஈடுபட வேண்டும் அதைத் தான் அந்தச் சமுதாயத்தவர்கள் மீறினார்கள் அதைத் தடுக்காததற்கே  அந்தத் தண்டனை என்றால் இன்று நம்முடைய சமுதாயத்தில் காணப்படும் மிகப்பெரும் தீமைகளான அல்லாஹ்விற்க்கு இனைவைப்பது அவனல்லாதோரிடம் பிரார்த்தனை செய்வது அவர்களுக்கு நேர்ச்சை செய்வது இன்னும் இதுபோன்ற பாவங்களைத் தடுக்காமல் அற்ப காரணங்களைக் கூறி நன்மையை ஏவித் தீமையைத் தடுக்காமலிருக்கும் மார்க்கத்தை அறிந்த அறிஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன தண்டனையோ மேலும் தாம் கற்றறிந்த சத்தியக் கல்வியை மறைப்பதைப் பற்றிய இந்த இடத்தில் இரு நபித்தோழர்களின் ஒரு சிறிய வரலாற்றை நினைவுகூர்வது நன்றாக இருக்கும் (ஆதரத்திற்க்காக அல்ல) மேலே நாம் சுட்டிக் காட்டிய குர்ஆனின்
2 159 160 பற்றி அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்
'அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, 'நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப(வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர்திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அளவற்ற வனுமாவேன்" (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்         புஹாரி 118 ஹதீஸின் சுருக்கம்
அபூஹூரைரா (ரலி) அவர்களும் நாம் நம்மளவில் சரியாக நடந்துகொள்வோம் சத்தியத்தை (ஹதீஸ்) எடுத்துச்சொல்லி ஏன் வீனான பிரச்சினைகளை விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களிலேயே அதிகமான ஹதீஸ்களை அறிவித்திருக்கும் அபூஹூரைரா (ரலி அவர்கள் அறிவித்த 5374 ஹதீஸ்கள் நமக்கு கிடைத்திருக்குமா என்று சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டே மறைக்கக்கூடியவர்கள் சிந்திக்கட்டும் அடுத்து முஆது பின் ஜபல் (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவிக்க அவர்கள் கூறும் காரணமும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்
தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காக தம் மரணத் தருவாயில்தான் இந்த ஹதீஸை முஆத்(ரலி) அறிவித்திருக்கிறார்கள்.
நூல் புஹாரி 128
இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்கள் முஆது(ரலி) அவர்களுக்கச் சொன்னவுடன் முஆது(ரலி) அவர்கள் இந்தச் செய்தியை மக்களுக்கு அறிவித்து விடட்டுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு மக்கள் இது மற்றும் போதும் என்று மற்ற வணக்கவழிபாடுகளில் அசட்டையாக இருந்துவிடுவார்கள் (இதற்கு அடுத்த ஹதீஸில் மக்கள் மற்ற வணக்கவழிபாடுகள் செய்யாமல் இருந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறேன்) என்று காரணம் கூறியிருக்கின்றார்கள்கள் என்றால் இந்தச் செய்தி எவ்வளவு மகத்தான செய்தி என்று அறியலாம் ஆனாலும் முஆது(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறிய காரனமான மக்கள் மற்ற வணக்கவழிபாடுகளில் பொடுபோக்காக நடந்து கொள்வார்களோ என்று அஞ்சி இந்த ஹதீஸை அறிவிக்காமல் இருந்திருக்கிறார்கள் ஆனாலும் கல்வியை மறைத்த குற்றத்திலிருந்து மறுமையில் இறைவனிடம் தப்பிப்பதற்க்காக தன்னுடைய மரணத்தருவாயில் தான் இந்த ஹதீஸை அறிவித்திருக்கிறார்கள் என்றால் நபித்தோழர்கள் தமக்குத் தெரிந்த சத்தியக் கல்வியைப் பரப்புவதில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள் கல்வியை மறைப்பதற்க்கு எந்த அளவிற்க்கு அஞ்சியிருக்கிறார்கள் என்பதை இவ்விரு உதாரணங்கள் மூலம் அறியலாம் நபித்தோழர்களும் ஹதீஸ்கள் நூற்களாக கொடுக்கப்படும் வரை அதைத் தலைமுறை தலைமுறையாக இரண்டு நூற்றான்டுகள் வரை பாதுகாத்து வந்த நன்மக்களும் இன்று சத்தியக்கல்வியைக் கற்று அது மக்களின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் அதை எடுத்துச் சொல்லவேண்டாம் என்று இவர்கள் நினைப்பதைப் போல அந்த நன்மக்களும் நினைத்திருந்தால் இன்று நம் கைவசம் உள்ள லட்சக்கனக்கான ஹதீஸ்கள் நம்மை வந்தடைந்திருக்குமா என்று மார்க்க அறிஞர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் சிந்தித்து இனியாவது மார்க்த்தை அதன் தூயவடிவில் எடுத்துரைக்க வேண்டும்  மேலும் நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிஞர்களுக்கச் சொல்லியுள்ள ஓர் அழகிய உதாரனத்தை இந்த இடத்தில் சொல்வது மிகவும் நல்லது
'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல் புஹாரி 79
நபி(ஸல்) அவர்கள் மார்க்க அறிஞர்களுக்குக கூறிய இந்த உதாரனத்தை மார்க்த்தைக் கற்றுள்ள மார்க்க அறிஞர்கள் ஒவ்வொருவரும் நாம் நபி(ஸல்) அவர்கள் கூறிய மார்க்கத்தைக் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் நல்ல நிலங்களைப் போல உள்ளோமா அல்லது மழையை உறிஞ்சிக்கொண்டு ஒரு பயனுமளிக்காத தரிசு நிலங்களைப் போல உள்ளோமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக
அல்லாஹ் மிக அறிந்தவன்
             

No comments:

Post a Comment