மறுமையில் வெற்றி பெற அமல்கள் மற்றும் பொதுமா?
- ஏக இறைவனின் திருப்பெயரால்
- நாம் அன்றாட கடைபிடிக்கின்ற இறைவன் நம் மீது கடமையாக்கி இறுக்கின்ற வணக்க வணக்க வழிபாடுகளான தொழுகை நோன்பு ஜகாத் மற்றும் ஹஜ் போன்ற காரியைங்களை நாம் செய்யும் நோக்கமெல்லாம் அது இறைக்கட்டளை என்பதுடன் நாம் மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கத்தைப் பெற வேண்டும் என்று தான் இறைவன் நம் மீது கடமையக்கி இறுக்கின்ற வணக்க வழிபடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கூலிகளை நமக்கு வழங்கவுள்ளான் யார் அதிகமான இறைக்கட்டளைகளை நிறைவேற்றி அதிகமான நன்மைகளைப் பெறுகிறார்களோ அவர்கள் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் இதை இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூருகின்றன்
யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்
ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
(அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்
அல்குர்ஆன் 101 6 7 8 9 10 11
இப்படி மறுமை வெற்றியை தீர்மானிக்கக்கூடிய நன்மையான காரியைங்களை ஒருவர் செய்வதன் மூலம் மட்டுமே சொர்க்கத்தை பெற முடியுமா என்றால் ஒருபோதும் நன்மையான
காரியங்கள் மட்டுமே மறுமை வெற்றியைத் தீர்மானிக்கப் போதுனமானதில்லை நன்மையான காரியங்களுடன் இறைவனின் தனிப்பெருங்கருனை இருந்தால் மட்டுமே மறுமையில் ஒருவர் வெற்றி பெற முடியும் என்பதை இறைத்தூதர் நபி (ஸல்)அவர்கள் கூருகிறார்கள்
. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
-
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார் புஹாரி 6464
. அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)' என்று கூறினார்கள்
புஹாரி 5673
அருட்கொடைகளுக்கு வணக்க வழிபாடுகள் ஈடாகாது
. நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்
குர்ஆன் 14 34
சாதரனமாக நாம் ஒரு வேலைக்கு வழங்கப்படும் கூழியைத்தான் உழைப்புக்கேற்ற ஊதியம் என்போம் இதையே இறைக்கட்டளையை நாம் நிறைவேற்றும்போது இறைவன் நமக்கு மறுமையில் வாக்களித்திருக்கின்ற இன்பங்களுக்கும் பரிசுகளுக்கும் பொருத்திப்பார்போமென்றால் அந்த எண்ணிலடங்கா இன்பங்களுக்கு இந்த உழைப்பு ஈடாகுமா என்றால் இந்த அற்ப உலகத்தில் இறைவன் நமக்கு வழைங்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்குக் கூட அவை ஈடாகாது என்பதுதான் சரியாகும் ஏனென்றால்
இந்த உலகத்தில் ஐம்பது வயது வரை வாழக்கூடிய ஒருவர் தனது வாழ்நளின் பெரும்பகுதியான நாற்பத்தி ஒன்பது வயது வரைக்கும் மிகவும் ஆரோக்கியமாகா வாழ்ந்து விட்டு தனது ஐம்பதாவது
- வயதில் நோய்வாய்ப்பட்டார் என்று வைத்துக்கொள்வோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஒரு சிருநீரகம் செயலிலந்து விட்டது என்றால் மாற்று சிருநீரகம் போருத்துவதற்க்கு அவர் தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணம் கூட போதுமனாதாக இல்லாமல் போகலம் அந்த அளவிற்க்கு ஒரு சிருநீரக்த்தின் விலை இருக்கும் அவரின் மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் யாரவது சிரு.நீரகம் தரமுன்வந்தால் கூட அதைப்பொருத்துவதற்க்கு ஆகும் செலவுமே ஏராளம் அப்படிப் பொருத்தினால் கூட அவர் பழைய நிலையில் ஓடியடி நடக்க உழைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது நடைபினமாக வாழ்.ந்து விட்டுப் போகலாம் அவ்வளவுதான் இப்போழுது சி.ந்தித்து பாருங்கள் அவர் தனது நாற்பத்தி ஒன்பது வயது வரைக்கும் சல்லிக்காசு
செலவில்லமால் சிரநீரகத்தை சீராக இயக்கி சுகமாக வாழவைத்த அந்த இறைவனின் அருட்கொடைக்கு நம் வாழ் நாளில் மிக சொற்பமான நேரத்தில் செய்யப்ப்ட்ட வண்க்கவழிபாடுகள் ஈடாகுமா என்பதை அதேபோல் ஒருவருக்கு திடிரென மூச்சுத்தினரல் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால் அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர் சுவாசிப்பற்க்காக கொடுக்கப்ப்ட்ட ஆக்ஸிஜனுக்குக் கூட சிலிண்டர் இவ்வளவு என்று பணம் கொடுக்கவேண்டி வரும் இதைச்சிந்தனை செய்வோம் என்றால் நம்முடைய வாழ்/நாளில் இவ்வளவு காலம் எந்தச்செலவுமின்றி காற்றைச் சுவசிக்கத்தந்த அந்த இறைவனின் அருட்கொடைகளுக்கு நமது வணக்க வழிபடுகள் ஈடாகுமா என்று
நாம் ஒருவருக்கொருவர் இறைவனின் கருனையை வேண்டுதல்
முஃஸ்லீம்களாகிய நாம் ஒருவரையொருவர் ச/ந்தித்துதக் கொள்ளும்போது சொல்லிக்கொள்கிற சலாமில் கூட தன்னுடைய கருனையை வேண்டுமறுதான் இறைவன் கட்டளையிடுகின்றான்
இறைவன் முதல் மனிதரான ஆதம் அலை அவர்களைப் படைத்து அவர்களை வானவர்களிடம் அனுப்பிவைத்து அவர்களுக்கு முகமன் சொல்லச்சொல்கிறன் அவர்களும் மலக்குகளிடம் சலாம் சொல்கிறார்கள் அதற்க்கு மலக்குகள் பதில் சொல்லும்பொழுது உங்கள்மீது சாந்தியும் இறைவனின் கருனையும் உண்டாகட்டும் என்று தான் பதில் சொன்னார்கள்
. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, 'நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களின் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்' என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். 'சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்களின் மீது நிலவட்டும்)' என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) 'இறைவனின் கருணையும்' என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். எனவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழம்லும்) குறைந்து கொண்டேவருகின்றன.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 6227
-
நபி ஸல் அவர்களின் பிரார்த்தனை
நபி ஸல் அவர்கள் யாருக்காவது பிரார்த்தித்தால் அவருக்கு இறைவனின் கருனையை வேண்டித்தான் பிரார்த்திப்பர்கள்
அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்.
அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன்.
எவரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களின் மீது கருணை புரிவாயாக!" என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூ அவ்ஃபா(ரலி) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். அப்போது 'இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். புஹாரி 4166
-
. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
-
நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்" என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), 'ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?' என்று கேட்டார்கள். 'ஆம் (இது அப்பாதின் குரல் தான்)" என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்" என்று பிரார்த்தித்தார்கள்.
- புஹாரி 2655
அதே போல் நபி ஸல் அவர்கள் யாருக்காவது எதிராக பிரார்தித்தாலும் இறைவா இவரை உன் கருனையைலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று தான் பிரார்த்திப்பர்கள்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
-
நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்தபோது அவற்றை அழிக்கும்படி உத்திரவிட்டு
- அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறி சொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். உடனே, 'அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷிகளை) அப்புறப்படுத்தவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை" என்று கூறினார்கள். புஹாரி. 3352
'நபி(ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, 'அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கிவிட்டார்கள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். 'தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார் புஹாரி. 4441.
-
நபி ஸல் அவர்களுக்குக்கூட இறைவனின் கருணைதான் அவசியம்
மறுமையில் வெற்றி பெற வணக்கவழிபாடுகளோடு இறைவனின் கருணை எந்த அளவிற்க்கு முக்கியமானாதென்பதை புரிய நபி ஸல் அவர்கள் தங்களைப் பற்றி கூறிய செய்தியே சிறந்த
சான்றகும் .
அபூ ஹுரைரா(ரலி) அவாக்ள் கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது(; மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)' என்று கூறினார்கள்.
மக்கள், 'தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறிவிட்டு, 'எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்' என்று கூறினார்கள ் புஹாரி. 5673
மேலும் இறைவனின் கருணையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நபி ஸல் அவர்கள் தனது மரணத்தருவாயில் பிரார்த்திப்பதைப் பாருங்கள்
. ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன் புஹாரி 5674
இறைக்கருணை இருந்தால் சிறிய செயலுக்குக்கூட சொர்க்கம்
இறைவன் ஒருவருக்குக் கருணை புரிய நாடிவிட்டால் அவரின் சிறிய செயலுக்குக்கூட சொர்க்கத்தை தருவான் என்பதை கீழ்க்கானும் நபிமொழிகளிகலிருந்து அறியலாம்
'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 173
மேலும் அல்லாஹ்வின் கருனையைப் பற்றி நபி ஸல் கூறுகையில்
. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது' என்று (கருணையைத்) தனக்கு.த்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான்.
இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் புஹாரி 7404
எனவே நாமும் அந்த கருனையாளனிடம் தொழுகையிலும் மற்ற மற்ற பிரார்த்தனையிலும் இறைவனின் கருணையை அதிகமதிகம் வேண்டக்கூடியவர்களாக ஆகவேண்டும் அதன் மூலம் மறுமையில் வெற்றிபெற்றவர்களாக நாம் அனைவரையும் அ/ந்தக் கருணையலார்களுக்கெல்லாம் கருனையாளனான அல்லாஹ் ஆக்கியருள்புரிவானாகா
அல்லாஹ் மிக அறிந்தவன்
No comments:
Post a Comment