June 03, 2014

முஸ்லீம்களுக்கு எதிரான ஊடகபயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி


இன்றைய ஊடகங்கள் அவை அச்சாகட்டும் காட்சி ஊடகமாகட்டும் பெரும்பாலும் அவை எல்லாமே ஏதாவது பக்கச்சார்புடையவைகளாத்தான் உள்ளது அதனால் தான் தனக்கு வேண்டாத நாட்டுக்கோ கட்சிக்கோ தலைவர்களுக்கோ அல்லது மதத்திற்க்கோ சாதகமான செய்திகளையெல்லாம் இருட்ட்டிப்புச் செய்வதும் எதிர்மறையான விடயங்கள் கிடைத்துவிட்டால் அதை தலைப்புச்செய்தியாகவும் ப்ளாஸ் நியுஸாகவும் வாரக்கனக்கில் ஆக்கி பொதுமக்களின் கவனத்தை அதன்பால் ஈர்ப்பதைப் பார்க்க முடிகிறது

இப்படி மேல் சொன்ன எல்லாத் தரப்பினருக்கும்  ஊடகத்துறையில் எதிரிகள் இருப்பதுபோலவே இவர்களுக்குப் பக்கச்சார்புடையவர்களும் உள்ளனர் அதனால் தான் தமக்கெதிராக ஒட்டுமொத்த ஊடகங்களும் சேர்ந்து பரப்புறை செய்யும் சில விடயங்களைத் தவிர மற்றவைகளை தங்களது பக்கச்சார்பு ஊடகங்களாலும் எழுத்தாளர்களாலும் அறிவுஜீவிகளாலும் முறியடிக்கவோ அல்லது அந்தச் செய்தியை நீர்த்துப் போகவோ செய்யமுடிகிறது

ஆனால் முஸ்லீம்களுக்கு இதுபோன்ற நிலை உலகில் எங்குமே இல்லை என்னும் அளவுக்கு உலகில் உள்ள 95 சதவீத ஊடகங்கள் முஸ்லீம்களுக்கு எதிராகத்தான் உள்ளது அதனால்தான் ஒட்டுமொத்த மீடியாக்களும் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்க்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான பொய்யான செய்திகளை வெகுஜன மக்களிடம் எளிதாகப் பரப்பி விடுகின்றனர் சாதாரன மக்களும் அதை அப்படியே நம்பி விடுகின்றனர்

இந்த நிலை மாறவேண்டும் என்றால் உலகில் உள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் குறிப்பாக மாற்றுமதத்தவர்களுடன் முஸ்லீம்கள் கலந்து வாழக்கூடிய நாடுகளில் உள்ள மொழிகளில் நமக்கென்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வேண்டும் அந்தந்த மொழிகளில் உள்ள முன்னனி மீடியாக்கள் அளவுக்கு இல்லையென்றாலும் மூன்றாம் நான்காம் நிலையிலாவது அவை பிரபலமானாதாக இருக்கவேண்டும் இனி இதைவிட முக்கியமாக உலக அளவில் நியூஸ் ஏஜென்ஸிகளும் இருக்கவேண்டும் காரணம் பிபிசி போன்ற பலம் வாய்ந்த சில மீடியாக்களைத் தவிர மற்ற மீடியாக்கள் எல்லாமே இதுபோன்ற நியூஸ் ஏஜென்ஸிகளிடமிருந்து தான் செய்திகளை வாங்குகின்றன
                    
                         அல்ஜசிரா
உலக அளவில் மீடியாத்துறையில் முஸ்லீம்களின் இயலாமை நிலைக்கு சற்று ஆறுதல் வழங்கும் வகையில் அமைந்தது தான் அல்ஜசீரா எனும் மீடியா இது மிகச்சமீபமாக 1996 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் தன்னுடைய சேவையைத் துவங்கியது என்றாலும் இன்று உலகில் அதிகமான மக்களால் உற்றுநோக்கப்படும் முக்கியமான 5 செய்திச் சேனல்களில் அல்ஜசீராவும் ஒன்றாகும் இது ஈராக் மற்றும் ஆப்கானில் அமெரிக்க நடத்திய ஆக்கிரமிப்புப் போரைப் பற்றி வேறெந்த மீடியாக்களும் வெளியிடாத சில தகவல்களை வெளியிட்டு அமெரிக்காவிற்கு கோபத்தை மூட்டியது அமெரிக்காவின் வெளியுறவுச்செயலாளராக இருந்த ஹிலாரி கூட அல்ஜஸிராவைப் பற்றி கூறும்போது இதுவரை நம்மிடமிருந்த மீடியாவின் கட்டுப்பாடு சிறிது சிறிதாக நம் கையை விட்டு நழுவுவதாக நினைக்கிறேன் என்றார்

உன்மையில் இங்கிலாந்தின் பிபிசி அமெரிக்காவின் CNN போன்ற செய்தி ஜாம்பவான்கள் மறைக்கும் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களை வெளி உலகுக்கு கொண்டு செல்வதிலும் மேற்படி மீடியாக்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் இஸ்லாத்திற்கெதிரான எதிர்மறையான அவதூறுகளையும் பொய்களையும் கலைந்து அந்தச் செய்தியின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வதில் அல்ஜஸிரா ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது சமுதாயம் சார்ந்த செய்திகளை அல்ஜஸீராவிடமிருந்து பெற்று எங்கெல்லாம் முஸ்லீம் ஊடகங்கள் வெளியிடுகிறதோ அங்கும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ( உதாரணமாக கேரளா போன்று) கேரள முஸ்லீம் ஊடகங்கள் பற்றிய முந்தைய பதிவு தூது ஆன்லைன் போன்ற தளங்கள் கேரள பத்திரிக்கைகளில் வருவதைத் தான் மொழிபெயர்த்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது
                              இறுதியாக
இன்றைய முஸ்லீம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி உலகெங்கும் முஸ்லீம்களும் ஊடகத்துறையில் குறிப்பிடும் அளவுக்கு பங்கு பெற வேண்டும் இப்போது முஸ்லீம் இயக்கங்களுக்கு வார மாத இதழ்கள் உள்ளது போல் ஜனரஞ்சகமான தினசரிகளையும் செய்தி சேனல்களையும் துவங்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் அதில் சினிமா போன்ற ஆபாச செய்திகளைத் தவிர்த்து விட்டு நேர்மையான நடுநிலையுடன் கூடிய செய்திகளையும் வெளியிடுவதின் மூலம் மாற்று மத மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ள வெகுஜன ஊடகமாக அதை மாற்றமுடியும் அல்ஜஸிரா இப்படித்தான் குறுகிய காலத்தில் வளர்ந்தது இதைச் செய்ய தவறும் பட்சத்தில் இன்று அதிகமான மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லீம்கள் பற்றியும் வெறுப்பையும் கருத்தியல் ரீதியாக தவறான புரிதல்களையும் விதைத்து விட்ட மீடியாக்கள் தடையின்றி இந்த வேலையைத் தொடர்ந்து செய்து நாளை ஒட்டுமொத்த மாற்ற மதத்தவர்களிடமும் இப்படிப்பட்ட கருத்துக்களை விதைத்துவிடும் அப்படி நடக்கும் பட்சத்தில் அது முஸ்லீம்களுக்கு மிகப்பெரும் பின்னடைவாகவும் நம்மவர்களின் வாழ்வாதாரத்தைதேயே கேள்விக்குறியக்கிவிடும் அளவுக்கு மோசமானாதக ஆக்கிவிடும்


எனவே முஸ்லீம்களுக்கு எதிரான ஊடகபயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக அளவில் நம்முடைய சமுதாயமும் அந்தத் துறையில் முன்னேறுவதுதான் ஒரே வழி             

No comments:

Post a Comment