April 03, 2014

முஸ்லீம் இயக்கங்களின் கொள்கை அரசியலுக்கு முன்பும் பின்பும்

முஸ்லீம் இயக்கங்களின் கொள்கை அரசியலுக்கு முன்பும் பின்பும் 
பல்லினச்சமூக மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு முஸ்லீம் தன்னுடைய இஸ்லாமிய கோட்பாட்டில் உறுதியுள்ள நிலையில் அரசியல்வாதியாக செயல்பட முடியும் என்பது நெருப்பின் மீது நடப்பதற்க்குச் சமம் ஒன்று அரசியலைத்துறக்கவேண்டும் அல்லது இஸ்லாத்தின் கோட்பாடுகளில் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யதுதான் ஆகவேண்டும்         

தமிழக முஸ்லீம் அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கும் அடிக்கல் நாட்டுவது தொடங்கி மாற்றுமத பன்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது இறுதியில் சாமியார்களின் கால்களில் விழுவதுமாக இறுந்து இப்போது கோயிலிலுக்குச் சென்று  வழிபடுமளவிற்க்கு கீழ்த்தரமாக வந்துவிட்டதையெல்லாம்  இதறக்கு ஆதாரமாக சொல்லலாம் 
                        ஜமாத்தே இஸ்லாமி
 கேரளாவிலும் இலங்கையிலும் வட மாநிலங்கல் சிலவற்றிலும் வலுவான நிலையில் உள்ளதும் தமிழகத்தில் சாதாரன முஸ்லீம்களால் அதிகம் அறியப்படாததுமான ஜமாத்தே இஸ்லாமி அதன் நிறுவனர் மவ்தூதி காலம்முதலே இந்திய அரசியலை ஹராம் என்றும் ஓட்டுப்போடுவது என்பது (தாகூத்) தீய சக்திகளை தேர்ந்தெடுக்கும் வேலை என்றும் இந்திய அரசின்கீழ் வேலைபார்ப்பதும் அது தரும் கல்வியை கற்பதும் நமக்கு ஹராமானது மொத்தத்தில் ஜனநாயகம் என்பது ஷிர்க் என்ற நிலைபாட்டில்தான் இருந்தது
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற குர்ஆனின் கூற்றுப்படி ஒரு பரிபூரன இஸ்லாமிய ஆட்சியைத் தவிர வேறெந்த ஆட்சியிலும் பங்கப்பெறுவதும் அதற்க்கு கட்டுப்படுவதும் இறைநிராகரிப்பு என்று அரசியல் கட்சி ஆரம்பிக்கும்வரை சொல்லிக்கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமி இறுதியில் இதுவரை ஜனநாயகம் ஒரு இறைநிராகரிப்பு என்று நாங்கள் சொல்லிவந்தது மார்க்க அடிப்படையில் தவறு என்று விளங்கியதால் அந்த வாதத்தை வாபஸ் பெறுகிறோம் என்று சொல்லி நிறுத்தாமல் இதுநாள் வரை எந்த ஜனநாயக முறையை ஷிர்க் என்று சொன்னார்காளோ அந்த ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து உங்களின் பொன்னான வாக்குகளை எங்களுக்குப் போடுங்கள் என்று ஓட்டுப்பொருக்கிகளாக வலம் வருவதுதான் மிகப்பெரிய வேதனை தான்
                               வெல்பயர் கட்சி
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தினால் இந்திய அளவில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் வெல்பயர் பார்ட்டி அதுநாள் வரை அதிகாரம் அல்லாஹ்வுக்கே  என்று கோஷமிட்ட ஜமாத்தே இஸ்லாமி தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்ததும் இதற்க்கு நேரெதிராக நடக்கத் தொடங்கிவிட்டது ஆம் அய்யர் ஒருவரால் காயத்ரி மந்திரம் உச்சரிக்கப்பட்டுதான்  அவர்களின் கட்சியே ஆரம்பிக்கப்பட்டது தொடக்கமே இப்படி என்றால் மீதத்தைச் சொல்லவே தேவையில்லை 
                        த மு மு க 
முழுக்கமுழுக்க தவ்ஹீத்வாதிகளின் உழைப்பால் வளர்த்தெடுக்கப்பட்ட தமுமக ஆரம்ப காலத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை மக்களுக்கு கொண்டு செல்ல உறுதுனையாக இருந்த தமுமுக அதில் உள்ள சிலரின் உள்ளத்தில் ஷைத்தான் போட்ட அரசியல் ஆசையினால் எந்தக்கொள்கை பிரச்சாரம் தம்மை நீர்விட்டு வளர்த்ததோ அந்தக் கொள்கை தான் எங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று எழுதிக்கொடுக்குமளவிற்க்கு துனிந்து  இன்று அதே தவ்ஹீத் கொள்கையை  நஞ்சாய் வெறுக்குமளவிற்க்கு அவர்களைக் கொன்றுசென்றுள்ளது இந்த அரசியல் ஆசை இந்த கேடுகெட்ட அரசியல் ஆசை வந்ததற்க்கு பிறகு நிகழ்ந்த தமுமுக வின் சில கொள்கை மாற்றங்கள்
தான் வளரக்காரணமான கொள்கைதான் தன்னுடைய வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று சொல்லவைத்தது
அல்லஹ்வின் மீது ஆனையாக அரசியலுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொன்னவர்கள் அந்த சத்தியத்தை மீறியது
எங்களின் நோக்கம் சமுதாய சேவைதானே தவிர பதவிகளைப் பெறுவதல்ல என்றவர்கள் அற்பமான வாரியப்பதவியை வாங்கிகொண்டது
 கந்தூரிக்கும் மவ்லிதிற்க்கும் எதிராக எழுதிய தமுமுக அறிவிப்புப் பலகைகளும் அடிக்கப்பட்ட நோட்டீஸ்களும் இவைகளுக்கு வசூல் செய்வதற்க்கும் வாழ்த்துச் சொல்வதற்க்கும் பயன்படத்தொடங்கியது
சுன்னத்வல் ஜமாத்தினர் கூட சகித்துக்கொள்ளமுடியாத அளவிற்க்கு ஜோதிபாசவின் படத்திற்க்கு அஞ்சலி செலுத்தியது திருவாடுதுறை ஆதினத்திடம் ஆசி வாங்கியது
சமுதாய மானம்காக்கப் புறப்பட்ட இவர்கள் தங்களின் கூட்டனிக்கட்சிகளின் தலைவர்களை வானலாவப் புகழ்ந்து சமுதாய மானத்தைச் சந்தி சிரிக்கவைத்தது
சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் முஸ்லீம்களின் குரல் ஒலிக்கவேண்டும் என்று கட்சி ஆரம்பித்து முஸ்லீம்களின் குரல்வலையை நெறிக்கத்துடிக்கும் பஜக வின் தலைவருடன் மேடையில் கைகோர்த்தது aஅர்களுடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறப்பு விழா கொண்டாடியது
மாற்றுமதக் கலாச்சாரமான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியது
தன்னுடைய தொகுதியில் உள்ள ராமேஸ்வரத்தை இந்துக்களின் புனிதத்தமாக அறிவிக்கவேண்டும் என்று சொல்லி ஷிர்க்கிற்க்குத் தூபம் போட்டது
மற்ற கட்சிகளுக்கு நாங்களும் ஒன்றும் சலைத்தவர்கள அல்ல என்று இறுதியில் சமுதாயத்தில் கட்அவுட் கலாச்சாரத்தைப் புகுத்தியது
இவ்வுலக அற்ப பதவிகளுக்காக தங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய தவ்ஹீத் கொள்கைதான் தங்களின் முதல் எதிரி என்று நினைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் பதவி வெறிக்காக இதே நிலையைத் தொடர்ந்தால் இன்று தவ்ஹீத் கொள்கையைதான் எங்களின் வளர்ச்சிக்குத் தடை என்று எழுதிக்கொடுத்தவர்கள் நாளை ஜமாலியின் கொள்கைக்குட்பட்ட இஸ்லாத்தைக்கூட இது எங்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று எழுதிக்கொடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை 


SDPI பாப்புலர் பிரன்ட்&கேம்பஸ் பிரன்ட்& உமன்ஸ் பிரன்ட்& இமாம் கவுன்ஸில்&etc 


ஆரம்பத்தில் MNP யாகவும் வெளியில் விடியல்வெள்ளி என்றும் அறியப்பட்டு இருந்த இவர்கள் தங்கள் இயக்கத்திற்க்கு ஆள் பிடித்தபோது குரானிலும் ஹதீஸிலும் வரக்கூடிய சில செய்திகளுக்கு தவறான அர்த்ததைச் சொல்லி இவர்கள் செய்வது எல்லாம் மார்க்கம் காட்டிய அடிப்படையில்தான் என்று நம்பவைத்தனர் பாபர் மசூதி இடிப்பு கோவைக்கலவரம் போன்றவற்றினால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் சிந்தனைப்போக்கும் மாறியிருந்த நிலையில் சிந்தனையை விட உனர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த சில இளைஞர்கள் இவர்கள் விரித்த மாய வலையில் விழுந்தனர் தனக்கான எந்தக் கொள்கையுமே இல்லாமல் தன்னுடைய எதிரிகளின் கொள்கைகளைச் சொல்லியே வளர்ந்த ஒரே இயக்கம் நமக்குத் தெரிந்து இவர்களாகத்தான் இருக்கும் 

எனவே கொள்கை அடிப்படையில் இவர்களை எதைச் சொல்லி விமர்சிப்பது என்று நானும் நீண்ட நேரம் சிந்தித்துப் பார்த்தும் கூட ஒரு குறிப்பையும் எடுக்க முடியவில்லை காரணம் இவர்கள் அன்று MNP யாக இருந்து இன்று SDPI யாக பரினமித்தது வரை இவர்களுக்கென்று மார்க்கத்திலும் சரி அரசியலிலும் சரி எந்தவொரு நிலையான கொள்கையும் இருந்ததில்லை 
மார்க்க மஸாயில்களைப் பொறுத்தவரை பவல் அடியார் சொன்னதுபோல் அந்தந்த இடத்திற்க்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்வார்கள் உதாரனமாக தவ்ஹீத்வாதிகளிடம் தவ்ஹீத்வாதிகளைப் போலும் சன்னத்வல் ஜமாத்தினரிடம் சுன்னத்வல் ஜமாத்தினரைப் போலும் இஹ்வானிய சிந்தனை உள்ளவர்களிடம் இவர்களும் அந்த சிந்தனை உள்ளவர்கள் போலும் கான்பித்துக் கொள்வார்கள்

மார்க்த்தில்தான் இப்படி ஆனால் அரசியலைப் பொருத்தவரை இவர்கள் ஓரளவுக்குத் தெளிவான நிலைபாட்டில்தான் உள்ளனர் அதாவது எல்லாக் கட்சிகளிடமும் சீட் கேட்பது எந்தக்கட்சி சீட் தந்தாலும் அவர்களை ஆதரிப்பது அப்படி யாரும் தரவில்லை என்றால் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று தனியாகப் போட்டி போட்டியிடுவது 

இப்படி கொள்கை குன்றுகாளாகத் திகழும் இவர்களை எப்படி கொள்கையைச் சொல்லி விமர்சிப்பது என்பதால் தான் எந்த விமர்சனமும் செய்யவில்லை


No comments:

Post a Comment