December 03, 2011

மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்

ஏக இறைவனின் திருப்பெயரால்
சமீபகாலமாக தமிழ் இனைய உலகில் மாவொய்ஸ்ட் சிந்தனை கொண்ட கம்யூனிஸ்ட்கள் இஸ்லாத்தைத் தவறாக விமர்சித்து வருகின்றனர் தங்களின் கொள்கையை முன்னிருத்தி இஸ்லாத்தை விமர்சிக்க முன்வராதவர்களை முஸ்லீம்கள் நேரடிவிவாதத்திற்க்கு அழைத்தாலும் வரமாட்டோம் இனையத்தில்தான் எழுதுவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் கொள்கை எந்தளவிற்க்குத் தவறானது என்பதை தெளிவுபடுத்தவே இந்தத் தொடர் வெளியிடப்படுகிறது

 
மதம் முதலாளித்துவம் மார்க்ஸிஸம்
மதம் முதலாளித்துவம் மார்க்ஸிஸம் என்று தற்க்கால உலகைமூன்றாகப் பிரிக்கக் காரணம் 19 நூற்றான்டின் துவக்கத்தில் உலகில் ஏற்பட்ட தொழில் புரட்சி தான் காரணம் இம்மூன்றில் மதங்களைப் பொறுத்தவரை இஸ்லாத்தைத் தவிர மற்றுள்ள எந்த மதத்திலும் பொருளாதாரம் உட்பட மனித வாழ்விற்க்கான சட்டதிட்டங்கள் என்று எதையும் சொல்லாமல் வெறும் தங்களின் மத கடவுள் கொள்கையை மட்டுமே போதித்துவிட்டு நின்று கொள்வதால் அதைப் பற்றி இங்கே விவாதிக்க வேண்டியதில்லை அதேபோல் முதலாளித்துவமும் முழுக்க முழுக்க பொருளாதாரக் கொள்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு  உருவானதும் மனிதனின் ஆத்மீக விவகாரங்களில் தலையிடாததுமாக இருப்பதால் அதையும் இங்கே விவாதிக்கத் தேவையில்லை தேவையேற்ப்பட்டால் சில இடங்களில் பார்ப்போம் மூன்றாவதாக மார்க்ஸிஸம் மார்க்கஸிஸத்தைப் பொறுத்தவரை இன்று பலரும் நினைப்பது போல் அது தொழிலாளர்களின் கொள்கையை மட்டும் சொல்லும் கொள்கையல்ல கடவுள் மறுப்பு பொதுவுடமைவாதம் போன்ற கொள்கைகளையெல்லாம் உள்ளடக்கியது தான் மாரக்ஸியம் 1516 ம் ஆண்டு வெளிவந்த சர் தோமஸ் மூர் என்பவர் எழுதிய உட்டோப்பியா எனும் கற்பனைத் தீவை பற்றிய கதையை உன்மையாக்க நடந்த முயற்ச்சியே சோசலிச சொர்க்கம் என்ற கம்யூனிஸத்தின் லட்சியம் ஹெகல் மற்றும் போயர்பாக் என்பவர்களின் தத்துவங்களான வர்க்கப் போராட்டங்கள் மூலமே இந்தப்பிரபஞ்சம் உண்டானது போராட்டங்களே இப்பிரபஞ்சம் நிலைநிற்பதற்க்கான காரணம் மனிதன் மரம் செடிகொடிகளைப் போன்ற ஒரு இனம் தானே தவிர வேறில்லை போன்ற தத்துவங்கள் தான் மார்க்ஸிஸத்தின் அடிப்படைக் கொள்கை மார்க்ஸிஸத்தைப் பொறுத்தவரை அதை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அதில் முதலாவது இந்த பூமி உட்பட உள்ள பிரபஞ்சத்தைப் பற்றிய அதன் நிலைபாடு இரண்டாவது மனித வரலாற்றைப் பற்றியதும் மூன்றாவதாக அதன் பொருளாதாரக் கொள்கைப் பற்றியதுமாகும் இந்த மூன்றையும் மார்க்ஸும் எங்கல்சும் ஒன்றுடன் ஒன்றை இனைத்து விளக்கியுள்ள விதத்தைப் பார்க்கும் போது அவர்களிருவரின் அறிவையும் ஆய்வையும்? நினைத்து மலைத்துப் போவோம்இந்த மூன்றையும் பிரிக்க முடியாத விதத்தில் ஒன்றாகப் பினைத்துத் தான் அவர்களிருவரும் கம்யூனிஸம் எனும் புரட்சிகரக் கொள்கையை தொகுத்துள்ளார்கள்  அவர்களின் இந்தக் கொள்கைகள் எல்லாம் எவ்விதம் தவறானது (பரிணாமவியல் உட்பட இதை ஏற்கனவே சக இஸ்லாமியப் பதிவர்களால் எழுதப்பட்டுள்ளது)  இந்தத் தவறானக் கொள்கையை நிலைநாட்டுவதற்க்காக அவர்கள் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எத்தனை கோடி மக்களை ஈவுஇரக்கமின்றி கொன்று குவித்து அந்த நிலங்களையெல்லாம் இரத்தமாக்கினார்கள் என்றும் மார்க்ஸியக் கொள்கை அடிப்படையிலான ஆட்சி  சில பதிற்றாண்டுகளைக் கூடத் தாக்குப்பிடிக்கமுடியாமல் எப்படி சொந்த மன்னான ரஷ்யாவிலிருந்தே துடைத்தெறியப்பட்டது என்பதையும் அதேபோல் கம்யூனிஸம் ஆட்சி செய்த செக்கோஸ்லாவ்யாவிலும் ருமேனியாவிலும் ஹங்கரியிலும் ரஷ்யாவின் கைவசம் இருந்த கிழக்கு ஜெர்மனியிலுமிருந்தெல்லாம் எவ்வாறு தொழிலாளிகளின் கைகளாலேயே விரட்டியடிக்கப்பட்டது என்பதையும் பொருளாதாரத்தில் எல்லோரும் சமம் என்ற பொதுவுடமைக் கொள்கை நடைமுறைக்குச் சாத்தியமா என்றும் அது ஒரு போதும் சாத்தியமில்லை என்பதறக்கு 1917 நவம்பர் ஆறாம் தேதி லெனின் தலைமையில் தொடங்கி பல்லாண்டுகாலம் ரஷ்யாவில் நடந்த சோசலிச ஆட்சியே எவ்வாறு சாட்சியானது என்றும் இன்று சீனா க்யூபா போன்ற நாடுகளில் நடக்கும் ஆட்சிகள் உண்மையான கம்யூனிஸ ஆட்சியா என்றும் உட்டோப்பியா என்ற கற்பனையில் தொடங்கிய மார்க்ஸிஸம் எவ்வாறு நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரு உட்டோப்பியாகவே மாறியது  போன்ற மார்க்ஸியம் சம்பந்தமான அனைத்தையும் இனிவரும் தொடர்களில் ஆய்வு செய்வோம் இறைவன் நாடினால்
என்னுரை
கம்யூனிஸத்தைப் பொறுத்தவரை அதை விமர்சிப்பதற்க்கு அதனிடம் கொள்கை கோட்பாடுகள் என்று பெரிதாக ஒன்றுமில்லை காரணம் மனித ஆன்மாவிற்க்கு அதனிடம் எவ்விதப் பெறுமதியுமில்லாதால் மனித ஆத்மீகவாழ்க்கை சம்பந்தமான தாய் தந்தை மனைவி மக்கள் உற்றார் உறவினர் அன்டை வீட்டார் போன்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்வது இன்னும் இதைப் போன்ற  எந்தச் சட்டதிட்டத்தையும் அது சொல்லாதது முக்கிய காரணமாகும் அதனுடன் மற்றுள்ள மதங்களைப் போலவோ இசங்களைப் போலவோ பன்னெடுங்கால வரலாறு ஒன்றும் கம்யூனிஸத்திற்க்கு இல்லை முந்தாம் நாள் பெய்த மழையில் நேற்று முளைத்து இன்று அழிந்துவிட்ட ஒன்றாக இருப்பதும்  மற்றொரு காரணம் கம்யூனிஸத்தைப் பற்றி விமர்சிக்கமுடியுமான மிக்பெரும் விஷயம் ஒன்று இருக்குமானால் அது அவர்கள் நடத்திய படுகொலைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்  இதைப் பற்றி ஆய்வு செய்து நேரத்தை வீனடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் செங்கொடி வினவு போன்ற உழைப்பாளிகளின் (கம்யூட்டரிலும் இனையத்திலும்) தொடர் விமர்சனத்தால் இதை எழுதவேண்டியதாகிவிட்டது எனவே நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பொறுத்து  தொடர்கள் வெளியாகும் பின்னர் தோழர்களுக்கு ஒரு கோரிக்கை பின்னூட்டம் என்ற பெயரில் நீன்ட ஆக்கத்தையே எழுதாமல் சொல்லவரும் கருத்தை தெளிவாகப் புரியும்படியும் இரத்தினச் சுருக்கமாகவும் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்பொழுது தான் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்
நேர்மார்க்கம்

6 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.அப்துல் ஹக்கீம்,
  துவக்கமே மிக நன்றாக உள்ளது.
  தொடர்ந்து அதிரடியாக எழுதுங்கள்.

  இப்பதிவில்,
  உள்ள படங்கள் தெரியவில்லை;
  சில எழுத்துப்பிழைகளையும், மேலும்... //(பரிணாமவியல் உட்பட இதை ஏற்கனவே சக இஸ்லாமியப் பதிவர்களால் எழுதப்பட்டுள்ளது)//...இது போன்ற சொற்றொடரில் உள்ள இலக்கண பிழைகளையும்
  ...சரி செய்யுங்கள்.

  பெரிய பாராக்களை உடைத்து படிக்க இலகுவாக சிறிய பாராக்களாக எழுதுங்கள் சகோ.

  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தொடர். இறைநாடினால் விரைந்து எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளது. நன்றி சகோ.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஹக்கீம்,

  அல்ஹம்துலில்லாஹ்...ஆணித்தரமான ஆதாரங்களுடன் இவர்களின் கிழிந்து போன முகத்திரையை இன்னும் கிழியுங்கள்....

  சகோதரர், நீங்கள் கருத்துக்களை கூறும் போது அவை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் பதிவின் கடைசியில் மேற்கொள் காட்டி அந்த லிங்க் கொடுத்துவிடுங்கள் சகோதரர். மூலத்திற்கு சென்று சரிபார்க்க விரும்புவோர் சரிபார்த்து கொள்ளட்டும்.

  தொடருங்கள்...இன்ஷா அல்லாஹ் கை கொடுக்கின்றோம்...

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 3. Va Alaikkum vassalaam
  சகோ முஹம்மதுஆஷிக் அவர்கேள படங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது மற்றுள்ளவைகைள அடுத்தடுத்த பதிவுகளில் சரிசெய்துகொள்கிறேன் உங்களின் தொடர் வருகைக்கு நன்றி
  jazakkallahu hairan
  by neermarkkam

  ReplyDelete
 4. Va Alaikkum vassalaam
  சகோ Aashiq Ahamed அவர்கேளளே ஆதாரங்கள் எல்லாமே இனையத்திலிருந்து எடுப்பதில்லை அதனால் தான் இனைப்பு குடுக்கவில்லை இனி மேல் கொடுக்கின்றேன் ஊக்கமளிப்பதற்க்கு நன்றி
  jazakkallahu hairan
  by neermarkkam

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் நண்பர் அப்துல் ஹக்கிம்,

  நீங்கள் எழுத நினைப்பதை ஆழமாகவும் ஆற்றொழுக்காகவும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். தொடரும் உங்கள் பதிவுகளில் நான் மறுப்பெழுதும் அளவுக்கு உள்ளீடு இருந்தால் நிச்சயம் தொடர்கிறேன்.

  செங்கொடி

  ReplyDelete
 6. சகோதரர் செங்கொடி அவர்களே அடுத்த தொடரில் உங்களுக்காவே ஒரு பகுதியை எழுதுகின்றேன் அதைப் பார்வையிட்டுவிட்டு உங்களின் மறுப்பை எழுத ஆரம்பியுங்கள்

  ReplyDelete