December 19, 2011

ஆரம்பமே அபத்தமான கம்யூனிஸக் கொள்கை (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்) (தொடர் 3)

ஏக இறைவனின் திருப்பெயரால்
சகோதர சகோதரிகளே கம்யூனிஸம் எனும் சித்தாந்தம் பொருள் முதல் வாதம் மற்றும் கருத்து முதல் வாதம் எனும் இரண்டு தத்துவங்களின் கூட்டுக்கலவையில் உண்டாக்கப்பட்டதுதான் (இந்த இரண்டு தத்துவங்களையும் தனித்தனியாக சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்)
இவையிரண்டுமே கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்கள்தான் என்றாலும் அவையிரண்டும் பரஸ்பரம் முரன்பட்ட தத்துவங்களாகும் ஏனென்றால் கருத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டானது என்று ஏற்றுக்கொண்டால் பொருள் முதல் வாதம் தவறானது என்று ஆகிவிடும் அதேபோல் பொருளில் இருந்துதான் பிரபஞ்சம் உண்டானது என்று ஏற்றுக்கொண்டால் கருத்து முதல் வாதம் தவறானதென ஆகிவிடும் மார்க்ஸ் முதலில் இவையிரண்டையுமே சரிகண்டார் பின்னர் பல வருடங்கள் தொடர்ந்து ஆய்வு? செய்து அவைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக சில குறைகளைக் கண்டறிந்த மார்க்ஸ் இறுதியாக எங்கள்ஸுடன் சேர்ந்து பொருள் முதல் வாதத்திலிருந்து அடிப்படைகளையும் கருத்து முதல்வாதத்திலிருந்து சட்டங்களையும் எடுத்து வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதம் எனும் புதிய தத்துவத்தை உண்டாக்கி அதை ஜெர்மன் சித்தாந்தம் (the german ideology)

எனும் நூலின் மூலம் பிரகடனப்படுத்தினார்கள் அந்த நூல்தான் இன்று வரை கம்யூனிஸ சித்தாந்தத்தின் வேத நூலாக உள்ளது அந்த நூலில் பிரபஞ்சம் உருவானதைப் பற்றிய தங்களின் (கண்டுபிடிப்பு)  நிலைபாட்டை விளக்கியுள்ளார்கள் அந்த விளக்கத்தைப் பார்த்துவிட்டு அது எந்தளவிற்க்கு அறிவியலுக்கெதிரானது என்பதைப் பார்ப்போம் அவர்களின்  விளக்கம் நிறத்தில் சிகப்பு கொடுக்கப்பட்டுள்ளது

வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதம்
இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையாக அதன் தொடக்கம் முதலே நிலைநிற்பது பொருள் (matter) மட்டுமேயாகும் இயக்கம் தான் பொருளின் அடிப்படைக்குனம் பொருள் இல்லாமல் இயக்கமோ இயக்கம் இல்லாமல் பொருளோ இல்லை இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் முரண்பட்ட தன்மையின் மூலம்தான் பிரபஞ்சத்தில் பரிணாமமே உண்டானது எதிர் எதிர் சக்திகளின் மோதல்தான் வளர்ச்சிக்குக் காரணம் இயற்கையே இதற்க்குள்ள ஆதாரமாகும் பார்லிச் செடி வளர்ச்சியடைவது விதையாக இருந்த அதன் நிலையை எதிர்ப்பதால் தான் இந்த எதிர்ப்புதான் முரண்பட்ட கோட்பாடு (dialectics)      இந்த முரண்பட்ட இயற்கை குனம் மட்டும் இல்லையென்றால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது 

   இயற்கையாகவே  உள்ள முரண்பாடான குனங்களின் மோதலே பிரபஞ்சத்தினதும் இயற்கையினதும் வளர்ச்சிக்குக் காரணம் இதுதான் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் பிரபஞ்சத்தைப் பற்றிய நிலைபாடு
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் முரன்பாடான தன்மை மூலமாகத்தான் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் உண்டாகின்றது நட்சத்திரக் கூட்டங்களும் கோள்களும் எல்லாம் இந்த அடிப்படைத் தன்மையின் சந்ததிகளாகும் பிரபஞ்சத்தின் எந்தவொரு பொருளுக்கும் அதனுடைய சொந்தமான நிலைநிற்ப்பு எனும் உரிமை கொண்டாட முடியாது பரந்து விரிந்த  இந்தச் சூரியகுடும்பம் நட்சத்திர மண்டலத்தின் ஓரங்கமாகும் எனும்போது சூரிய குடும்பம் நட்சத்திர மண்டலங்களை விட்டும் சுயமாக நிலைநிற்க்கும் தன்மை கொண்டது என்று உரிமை கொண்டாட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது அப்பொழுது சூரியனின் முகவரியைத் தீர்மானிப்பது நட்சத்திர மண்டலங்களேயாகும் அந்தச் சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களில் ஒன்றான பூமி தன்னுடைய நிலைநிற்பிற்க்காக சூரியக்குடும்பத்தைச் சார்ந்து நிற்க்கவேண்டியிருக்கிறது எனும்போது பூமியில் உள்ள பொருட்களின் முகவரியென்ன? பரந்துவிரிந்த இப்பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டத்தில் ஓரங்கமான சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்ற கிரகங்கள் ஒன்றில் உள்ள ஒரு பொருள் என்பது மட்டுமே மனிதனுடைய முகவரியாகும்
அப்பொழுது பூமியில் உள்ள பொருட்களான மனிதர்களுக்கும் பிரபஞ்சத்தின் பொதுவான விதியே பொருந்திப்போகும் பிரபஞ்சத்தின் பரிணாமத்திற்க்குக் காரணம் முரண்பட்ட தன்மை கொண்டவைகளின் மோதல்தான் எனும்போது பூமியும் அதே விதிகளின் அடிப்படையில்தான் நிலைநிற்க்கின்றது
இவைகளின் நிலை இப்படியிருக்க உயிரணங்களின் நிலைமையோ? உயிரணங்களுக்கு ஜடப்பொருள்களிலிருந்து சுய நிலைநிற்ப்பு உண்ட என்றால் எப்படி உண்டாகும் பொருட்களின் முரண்பட்ட தன்மையினால் ஏற்பட்ட மோதலில் இருந்து ஏதோ ஒரு நிமிடத்தில் உருமாறிய பொருளின் தன்மையில் சற்று முன்னேறிய  யதார்த்தப் பொருள்தான் உயிர். உயிர்களின் பரிணாமத்திற்க்கும் அடிப்படைக் காரணம் முரண்பாடான தன்மையே இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான உயிரணங்களில் ஒன்றுதான் மனிதன்  எனவே மனிதனின் முகவரி இவை மட்டுமே அதாவது முரண்பாடான தன்மைகளின் தொடர் மோதல்களுக்கிடையில் உள்ள பரஸ்பர தொடர்பில் நிலைநிற்க்கும் பிரபஞ்சத்தில் சற்று முன்னேறிய ஒரு பொருள் .
எனவே பொருள்களின் பொதுவான விதிதான் மனிதர்களுக்குமான விதியாகும் மனித சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் எல்லாமே இந்த வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதக் கொள்கைக்கு உடன்பட்டதாகவே இருக்கின்றது எனவே மனிதர்களின் நாகரீக வளர்ச்சிக்குக் காரணாமன விதிகள் எதுவோ அதுதான் பிரபஞ்சம் உண்டானதற்க்கும் உயிரணங்களின் பரிணாமத்திற்க்கும் அடிப்படையான விதியாகும்
இதுதான் பிரபஞ்சம் எப்படி உண்டானது அதில் உள்ளவைகள் எப்படி உண்டானது என்பதற்க்கான விஞ்ஞானக் கம்யூனிஸத்தின்? தந்தைகளான மார்க்ஸினதும் எங்கள்ஸினதும் விளக்கம்
மொத்தத்தில் பிரபஞ்ச உருவானவிதம் பற்றிய அவர்கள் கூறும் சாராம்சம் இதுதான் 
1.   பிரபஞ்சம் பொருளில் இருந்துதான் துவங்கியது
2.   பொருளின் முரண்பாடான குனத்தினால்தான் பிரபஞ்சத்தில் பரிணாமம் உண்டானது
3.   எதிர் எதிர் சக்திகளின் மோதல்தான் முன்னேற்றத்திற்குக் காரணம்
4.   ஆகாய பூமி மரம் செடிகொடி உயிரிணங்கள் எல்லாம் இந்த அடிப்படையில் உண்டானதுதான்
5.   மனிதர்களும் சற்று முன்னேறிய ஒரு பொருள்தான் என்பதால் அவனுக்கு பொருள் என்னும் அந்தஸ்த்தைத் தவிர தனியாக வேறந்த சிறப்பும் இல்லை
இனி மார்க்ஸினதும் எங்கள்ஸினதும் மூலைகளில் உதித்த இந்த கம்யூனிஸச் சித்தாந்த அடிப்படை எவ்வாறு அறிவியலுக்கெதிரானது என்பதைப் பார்ப்போம்

மார்க்ஸிடம் ஒரு கேள்வி
இப்பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்க்கும் இயக்கத்திற்க்கும் பின்னால் ஒரு மாபெரும் சக்தியான கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பதை மறுக்கவேண்டும் என்ற கொள்கையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுதான் மார்க்ஸ் பொருளில் இருந்துதான் பிரபஞ்சத்தின் துவக்கம் உண்டானது என்ற கொள்கையை முன்வைத்தார் இது எந்தளவிற்க்கு அறிவற்ற அறிவியலுக்கெதிரான ஒரு கோட்பாடு என்பதை விளங்குவதற்க்கு பொருளைப்பற்றிய ஒரு அறிவியல் அடிப்படை தெரிந்திருந்தாலே போதுமானதாகும் அதாவது இயற்கையானாலும் (கடவுளுக்குப் பகரமாக மார்க்ஸ் கண்டுபிடித்த வார்த்தை) சரி மனிதனானாலும் சரி ஒரு பொருளை வேறொரு பொருளாக மாற்றலாம் அல்லது பல பொருட்களை ஒன்றினைத்து ஒரு பொருளை உண்டாக்கலாம் அதேபோல் ஒரு பொருளை உடைத்து பல பொருட்களை உண்டாக்கலாமே தவிர இல்லாமையிலிருந்து ஒரு பொருளை உண்டாக்கவும் முடியாது ஒரு பொருளை இல்லாமலாக்கவும் முடியாது மொத்தத்தில் இயற்க்கைக்கும் சரி மனிதனுக்கும் சரி ஒபொருளை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது இதுதான் பொருள்களைப் பற்றிய அறிவியல் அடிப்படை இதை மனதில் நிறுத்திக் கொண்டு மார்க்ஸின் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதக் கொள்கைக்கு வருவோம்
ஒரு வாதத்திற்க்கு (வாதத்திற்க்கு மட்டும் தான்) காரல் மார்க்ஸின் தத்துவத்தின் படி பொருளில் இருந்துதான் பிரபஞ்சமும் அதில் உள்ள மனிதர்கள் உட்பட  எல்லாப் பொருட்களும் உண்டானது என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட இவை உண்டாகக் காரணமான அந்த மூலப்பொருள் எப்படி உண்டானது என்ற கேழ்வி எழும் இதற்க்கு விசித்திரமான ஒரு பதிலை இவர்கள் சொல்வார்கள் அந்தப் பதில் என்ன தெரியுமா கண்ணுக்கே தெரியாத அனுவளவு பொருளில் இருந்துதான் பிரமான்டமான இப்பிரபஞ்சம் உருவானது (தயவு செய்து அந்த அனுவளவு பொருள் எப்படி வந்தது என்பதை மட்டும் கேட்காதீர்கள்) இதுவும் ஒரு அறிவற்ற பதில் தான் ஏனென்றால் அனுவளவு உள்ள ஒரு பொருளை அதே அளவுள்ள வேறொரு பொருளாக மாற்றத்தான் இயற்கைக்கு முடியுமே தவிர நம் கற்பனைக்குக் கூட எட்டாத இம்மாமெரும் பிரபஞ்சமாகவும் அதில் உள்ள பொருட்களாகவும் மாற்றுவதற்க்கு பிரபஞ்சம் ஒன்றும் பலூன் அல்ல (பலூனுக்கும் காற்று வேண்டும்) மாறாக இயற்கைக்கு முடியுமானவை இதுதான் உதாரணமாக சூரிய ஒளி கடல்நீரை ஆவியாக மாற்றும் காற்றானது அந்த ஆவியை மேல்நோக்கி கொண்டுசெல்லும் அங்கே அவை குளிரூட்டப்பட்டு மலைகளைப் போன்ற அளவிளான மேகங்களாக மாறி நிற்க்கும் பின்னரும் அதை கடுமையாகக் குளிரூட்டப்பட்டு மழையாக மண்ணில் வீழும் அதாவது ஒரு பொருளை பல வடிவத்தில் மாற்றும் அவ்வளவுதான் (அதற்க்கும் ஆற்றல் வேண்டும்)
ஒரு உதாரணத்தின் மூலம் இன்னும் எளிதாக மார்க்ஸின் கோட்படு எப்படி அறிவியலுக்கெதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம் உதாரணமாக இப்பிரபஞ்சம் உருவாகி ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகின்றது என்று வைத்துக்கொள்வோம் பிரபஞ்சத்தின் ஓரங்கமான பூமியில் மரம் செடிகொடி மனிதர்கள் விலங்குகள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சாதனங்கள் என்று எதுவுமே இல்லாத நிலையில் பிரபஞ்சத்தின் எடை 100 டன் என்று வைத்துக்கொள்வோம் பின்னர் ஒரு 100 வருடங்கள் கழித்து பூமியில் மனிதர்கள் உட்பட உயிரணங்கள் எல்லாம் பல்கி பெருகிவிட்டது உயிரணங்களின் எடை 10 டன் இப்பொழுது உயிரனங்கள் தோன்றுவதற்க்கு முன்பிருந்த பிரபஞ்சத்தின் எடையான 100 டன்னுடன் உயிரனங்களின் எடையான 10 டன்னையும் கூட்டினால் மொத்தம் 110 டன் வருமா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதுதான் அறிவியலும் அறிவும் கூறும் விடையாகும் ஏனென்றால் தன்மீது இன்று நாம் காணும் ஒன்றுமே இல்லாமல் உருவான பிரபஞ்சத்தில் பல வருடங்களுக்குப் பிறகு எத்தனை கோடி டன் எடையுள்ள உயிரனங்கள் உண்டானாலும் பலகோடி டன் எடையுள்ள பொருட்களை நாம் உண்டாக்கினாலும் அதனால் பிரபஞ்சத்தின் எடை கூடவோ இதெல்லாம் இல்லாமல் இருந்தால் அதின் எடை குறையவோபோவதில்லை காரணம் உயிரனங்களின் உடல்கள் உட்பட எல்லாப் பொருட்களின் உற்பத்தியும் பிரபஞ்சத்தின் பாகமான பூமியில் இருந்த மூலப்பொருட்களில் தொடங்கி அவை அழிந்த பிறகு மீண்டும் அதிலே சேர்வததால் தான்
இன்று பலநாடுகள் பலடன் எடைகளைக் கொண்ட செயற்கைகோள்களைத் தயாரித்து பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றவிட்டுருக்கின்றார்கள் இனி பூமியின் எல்லைகளைத் தான்டி செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களுக்குக் கூட பலடன் எடைகளைக் கொண்ட பொருட்கள் மனிதர்களால் அனுப்பப்பட்டுள்ளன இப்படியெல்லாம் செய்தாலும் பிரபஞ்சத்தின் எடை கூடிவிடுமா அல்லது குறைந்து விடுமா என்றால் ஒருபோதும் இல்லை என்பதுதான் உன்மை இப்படி வேன்றுமென்றால் சொல்லலாம் இங்கிருந்து ஒரு பொருள் அங்கு செலுத்தப்பட்டுள்ளது அங்கிருந்து ஒருபொருள் இங்கு வந்துள்ளது இதனால் பிரபஞ்சத்தின் நிறையில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை மாறாக பிரபஞ்சத்தின் ஒருபாகமான பூமியில் இருந்து அதன் மற்றொரு பாகத்திற்க்கு ஒரு பொருளை அனுப்பமளவிற்க்கு மனிதன் விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கின்றான் அவ்வளவுதான் பல்லாயிரம் ஆண்டுகள் உழைப்பிற்க்குப் பிறகு புத்தியுள்ள மனிதனின் நிலை இதுதான் இயற்கைக்கு மாபெரும் புத்தியும் சக்தியும் இருக்கின்றது என்று கடவுளை மறுப்பதற்க்காக மார்க்கஸும் எங்கள்ஸும் கடவுளுக்குப் பகரமாக முன்னிருத்தும் இயற்கைக்கும் இதே அளவுகோள்தான் இயற்கைக்கும் இல்லாமையிலிருந்து எந்தவொன்றையும் உற்பத்தி செய்யமுடியாது பலபொருட்களைக் கூட்டி ஒரு பொருளை உண்டாக்கும் ஒரு பொருளை உடைத்து பல பொருட்களை உண்டாக்கும் அல்லது ஒரு பொருளை வேறொரு பொருளாக மாற்றும் அவ்வளவுதான் அதற்க்குள்ள ஆற்றலே தவிர இல்லாமையிலிருந்து அதாவது மூலப்பொருளே இல்லாமல் ஒரு கொசுவையோ ஒரு குண்டூசியவோ கூட அதனால் உண்டக்கமுடியாது இதுதான் பொருட்களைப் பற்றிய அறிவியல் அடிப்படை
இதையெல்லாம் நாம் இங்கே கூறக்காரணம் மார்க்ஸின் தத்துவத்தின் படியே பொருட்களின் முரன்பாடான தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தில் இருந்துதான் இயற்கையாக பரிணமித்து பரிணமித்து நட்சத்திர மண்டலங்களான சூரிய குடும்பங்களும் பால்வெளியும் பூமியில் உள்ள மண் மலை கடல் மரம் செடிகொடிகள் மற்றும் உயிரனங்கள் எல்லாம் வந்தது என்று ஒரு வாதத்திற்க்கு ஏற்றுக்கொண்டாலும் கூட இவை அத்தனைக்குமான மொத்த மூலப்பொருள் முன்பே இல்லாமல் இவையெல்லாம் உருவாவதற்க்குச் சாத்தியமில்லை ஏனென்றால் இயற்கைக்கு ஒரு பொருளை இல்லாமையிலிருந்து ஆக்கவும் முடியாது அதேபோல் அழிக்கவும் முடியாது என்று மேலே பார்த்தோம் இனி கண்ணுக்கே தெரியாத அனுவளவு இருந்த ஒரு பொருள் விரிவடைந்து விரிவடைந்து  இம்மாபெரும் பிரபஞ்சமாகவும் அதில் உள்ள திட மற்றும் திரவப்பொருட்களாக மாறின என்பதும் அறிவியலுக்கெதிரான வாதமேயாகும் ஏனென்றால் அனுவளவு உள்ள ஒரு பொருளை அதே அளவுள்ள வேறொரு பொருளாக மாற்றத்தான் இயற்கைக்கு முடியும் என்பதையும் மேலே பார்த்தோம் எனவே மார்க்ஸின் பொருளின் முரணபட்ட தன்மையில் ஏற்பட்ட எதிர் எதிர் சக்திகளின் மோதலால்தான் இப்பிரபஞ்சம் உண்டானது என்ற தத்துவம் முற்றிலும் அறிவியலுக்கெதிரான ஒரு அறிவற்ற கற்பனைதான் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை
என்னுரை
மார்க்ஸிய தத்துவத்தை மிகப்பெரும் அறிவியலாகக் கருதிக்கொண்டு இஸ்லாத்தை அறிவியலுக்கெதிரான மார்க்கமாகச் சித்தரித்து அறிவியல் அறிவியல் விஞ்ஞானம் விஞ்ஞானம் என்று கூக்குரலிடும் மார்க்ஸியவாதிகளான செங்கொடியோ வினவோ மார்க்ஸின் இந்த தத்துவம் அறிவியல் அடிப்படையில் சரிதான் என்று நிரூபிக்கவேண்டும் என்றால் அவர்கள் செய்யவேண்டியது
1 இயற்கைக்கு இல்லாமையிலிருந்த (எந்த ஒரு மூலப்பொருளும் இல்லாமல்) ஒரு பொருளைச் சுயமாக உண்டாக்கமுடியும் என்பதை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கவேண்டும்
2 உயிரற்ற ஒரு பொருள் விரிவடைந்து விரிவடைந்து இம்மாபெரும் பிரபஞ்சமாகவும் அதில் உள்ள உயிருள்ள மற்றம் உயிரற்ற பொருட்களாக மாற முடியும் என்பதையும் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கவேண்டும்
3 பிரபஞ்சம் உருவாவதற்க்கான மூலப்பொருட்கள் முன்பே இருந்தது அதில் இருந்துதான் உயிருள்ள மற்றும் உயிரற்றவை எல்லாம் பரிணாமமடைந்தது என்று சொன்னால் அந்த மூலப்பொருட்கள் எப்படி வந்தது என்பதையும் அறிவியல் அடிப்படையில் தெளிவு படுத்தவேண்டும்
இதற்கொன்றும் அறிவியல் அடிப்படையில் விடையில்லை என்றால் மார்க்ஸ் கடவுள் விஷயத்தில் தவறாகச் சொல்லிவிட்டார் ஆனால் பொருளாதாரத்தில் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்(இதின் லட்சணம் பின்னர் விளக்கப்படும்) என்று மற்றுள்ள மார்க்ஸியவாதிகள் போல் ஒத்துக்கொள்ளவேண்டும்
பொதுவாகவே மற்றுள்ள கொள்கைகளை விமர்சிக்கவும் கம்யூனிஸ அரசுகள் செய்த சாதனைகளை விளக்கி தம்பட்டம் அடிக்கவும் பக்கம்பக்கமாக எழுதிதள்ளும் மார்க்ஸியவாதிகள் அவர்களின் கொள்கைகளை விளக்கச் சொன்னால் தங்களின் குட்டு வெளிப்படாமல் இருக்க ஒரு தந்திரத்தைக் கைகொள்வார்கள் அது என்னவென்றால் மற்றுள்ளவர்களுக்குப் புரியும்விதம் தெளிவாக விளக்காமல் படுகுழப்பமாகவே எழுதுவார்கள் அந்த விஷயத்தில் தங்களின்  ஆசான் மார்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுவார்கள் அதே தந்திரத்தைத்தான் செங்கொடியும் செய்துவருகின்றார் பதில் எழுதியது போலவும் இருக்கவேண்டும் அதேநேரம் அந்த எழுத்தின் மூலம் என்ன சொல்லவருகிறோம் என்று யாருக்கும் புரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார் எனவே இந்த விமர்சனத்திற்க்கு இலக்கிய நடையில் எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டு எதையாவது எழுதிவைக்காமல் வெட்டு ஒன்னு துன்டு ரெண்டு என்ற அடிப்படையில் பதில் அளிப்பாரா பார்ப்போம்
மார்க்ஸின் பிரபஞ்சத்தைப் பற்றிய தத்துவம் எப்படி அறிவியலுக்கெதிரானது என்று பார்த்தோம் இனி இயக்கமே பொருளின் அடிப்படை என்று கூறிய மார்க்ஸ் அந்தப்பொருள் இயங்குவதற்க்குரிய ஆற்றல் எப்படி வந்தது என்பதைப் பற்றி ஏன் விளக்கவில்லை என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்
அல்லாஹ் மிக அறிந்தவன்
இதே தலைப்பின் கீழ் உள்ள மற்ற தொடர்கள்

No comments:

Post a Comment