ஏக இறைவனின் திருப்பெயரால்

ஒரு மனிதன் தன்னைப் பேரன்ற சக மனிதன் ஒருவனை பிறப்பால் தாழ்ந்தவனாகக் கருதுவதுதான் தீண்டாமை என்பதாகும் தீண்டாமையின் அளவுகோலைப் பொருத்தவரை நம் நாட்டில் காணப்படும் வெறும் இரட்டை குவளை முறைகள் அல்லது காலில் செருப்பணிந்து செல்வதற்கு விதிக்கப்டும் தடைகள் மற்றும் அல்ல வாழ்வின் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஒரு மனிதன் இன்னெரு மனிதனை தாழ்ந்தவனாகக் கருதுகின்றானோ அவையெல்லாமே தீண்டாமைதான் தீண்டாமைக்கானக் காரணங்களைப் பொருத்தவரை நாட்டுக்கு நாடு அவை வித்தியாசப்படும் மேலை நாடுகளைப் பொருத்தவரை நிறத்தின் அடிப்படையிலும் நம்முடைய இந்தியாவை பொருத்தவரை ஜாதியின் அடிப்படையிலும் அந்த காரணம் இருக்கின்றன தீண்டாமை இன்றோ நேற்றோ தோன்றிய ஒன்றல்ல மனித சமுதாயம் பல்கிப் பெருகி கூட்டம் கூட்டமாக மனிதர்கள் வாழத் தெரடங்கிய போதிருந்தே தீண்டாமை என்ற தீய குணமும் மனிதர்களுக்குள் வளரத்தெரடங்கி இன்றைய நவீன அறிவியல் காலம் வரை மனித சமுதாயத்தில் வேறூன்றி இருப்பதைப் பார்க்கிறோம் உதாரணமாக மிகச்சமீபத்தில் நடந்து மக்கள் மறந்து விட்ட ஏழு பேரை பழிவாங்கிய பரமக்குடி துப்பாக்கிச் சூட்டையும் சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சி எஸ் கர்ண்ண அவர்கள் தான் தாழ்த்தப்பட்டவன் என்பதற்க்காக சக நீதிபதிகள் தன்னை அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரியப்படுத்திய நிகழ்ச்சியுமே தீன்டாமை எனும் விஷம் எப்படி அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை பரவியுள்ளது என்பதறக்குச் சான்றாகும் எனவே மற்றுள்ள மதங்கள் எப்படி கடவுளின் பெயரால் தீண்டாமை எனும் தீமையை மனிதர்களின் மனங்களில் விதைக்கின்றன என்றும் இவைகள் கடவுளின் பெயரால் தீண்டாமையை நியாயப்படுத்தும் அதேவேளை கடவுள் மறுப்பு கொள்கையான நாத்திகக் கொள்கை தீண்டாமையை அழிக்க உதவியதா அல்லது தீண்டாமையை வளர்க்க உதவியதா என்றும் தீண்டாமை ஒழிய ஒரே தீர்வான இஸ்லாம் தீண்டாமையை எவ்வாறு ஒழித்து கட்டியது என்பதையும் பார்ப்போம்