Showing posts with label முஸ்லீம் உலகின் நிகழ்வுகள். Show all posts
Showing posts with label முஸ்லீம் உலகின் நிகழ்வுகள். Show all posts

October 24, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை தொடர் 2

ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாற்றின் ஒரு பகுதியினை முந்தைய தொடரில் பார்த்தோம் அதில் கடாபியின் பிறப்பும் கல்வியும் புரட்சிகரச் சிந்தனை ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள் போன்ற சிலவிஷயங்களைப்  பாரத்தோம் அந்தத்தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும் அதன் தொடர்ச்சியாக இந்த்த்தொடரை வெளியிடுகிறோம்
கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்
பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத 
நாற்பது இளம்பெண்களைத்தான் கடாபி தனது பாதுகாப்புப் படையாக வைத்திருந்தார் அதன் பின்னர் விமர்சிக்கப்பட்டது தனது குடும்பத்தினரின் ஆடம்பரம் பற்றித்தான் கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரத்தைப் பற்றி உறுதியாக எந்தத் தகவலும் இல்லையென்றாலும் மேற்கத்திய ஊடகங்கள் பலவாறான செய்திகளை வெளியிட்டுள்ளன அவைகள் அவரது உறவினர்கள் ஹாலிவுட்டில் பணமுதலீடு செய்துள்ளதாகவும் மிகப்பெரிய விருந்துகளை ஏற்பாடு செய்து பாப் இசைப் பாடகர்களுடன் கூத்தடிப்பதாகவும் கடாபியின் இரண்டாவது மனைவிக்கு சொந்தமாக விமான நிறுவனம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது கடாபி கொள்ளப்பட்டு மூன்று நாட்களாகும் நிலையில் அவரின் சொத்துமதிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக இருபதாயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

October 23, 2011

கடாபி பிறப்பு முதல் இறப்புவரை


ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாறை  இங்கு தருகிறோம்
பிறப்பும் கல்வியும்
1942 ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த கடாபியின் முழுப்பெயர் முவம்மர் முஹம்மது அபூமின்யார் அல்கடாபி ஆகும் கடாபியின் சொந்த ஊரான ஸிர்த்திற்க்கு அருகில் பாலைவனப் பிரதேசத்தின் பெதுயுன் கோத்திரத்தில் வளர்ந்த கடாபி அங்குள்ள கதாபா கோத்திரத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்க்கு அருகில் உள்ள முஸ்லீம் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய கடாபி பின்னர் மிஸ்ரதயில் ஆசிரியர் ஒருவரின் மாணவராகச் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார் 1961 ல் தலைநகர் பெங்காசியில் உள்ள லிபியன் ரானுவ அகடாமியில் சேர்ந்து ராணுவக்கல்வி பயின்று அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து சென்று அங்கு நான்கு மாதம் ராணுவ உயர்கல்வியை கற்றுமுடித்தார்
புரட்சிகரச் சிந்தனை
முவம்மர் கடாபி சிறுவயது முதலே புரட்சிகரச் சிந்தனை உள்ளவராக விளங்கினார் தான் பிறப்பதற்க்குச் சில வருடங்கள் முன்பு வரை தன் தாய்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டமும் அதில் உமர் முக்தார் போன்றோரின் தியாக வரலாறையெல்லாம் வாய்வழியாகக் கேட்டதும் ரஷ்ய கம்யூனிஸப்புரட்சியைத் தேடிப்பிடித்து படித்ததும் அக்காலகட்டத்தில் பாலஸ்தீன மன்னில் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் தங்களின் தந்திரத்தாலும் இங்கிலாந்தின் நூறுசதவித முழு ஆதரவுடனும் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற அரபு நாடுகளுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தததுமே அவரின் புரட்சிகரச் சிந்தனைக்கு வித்திட்டது எனலாம்

October 12, 2011

தவக்குல் கர்மானிக்கு நோபல் பரிசு அமெரிக்காவின் ராஜதந்திரம்


ஏக இறைவனின் திருப்பெயரால்
இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின் அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட் அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய் என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும் இம்முறை இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால் அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில் புரிந்துவிடும்

September 27, 2011

தோண்டத் தோண்டப் பிணங்கள் ஜம்முகாஷ்மீரின் கண்ணீர் கதை


ஏக இறைவனின் திருப்பெயரால்

சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இறந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன  உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது ஞாபகமிருக்கலாம் அதைத்தொடர்ந்து இப்பொழுது ஜம்முவிலும் ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத இளைஞர்களிண் சடலங்கள் அங்குள்ள சவக்குழிகளில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை சடலங்களை குழிவெட்டி அடக்கம் செய்த முதியவரான பரித்கான் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் காஷ்மீர் பற்றியெரிந்து கொண்டிருந்த முதல் பத்து வருடம் அதாவது 1990 முதல் போலிசும் ராணுவமும் கொண்டுவந்த 2500 க்கும் மேலான அடையாளம் தெரியாத சடலங்களை தான் அடக்கம் செய்திருப்பதாக அந்த முதியவர் கூறியுள்ளார்