December 19, 2011

ஆரம்பமே அபத்தமான கம்யூனிஸக் கொள்கை (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்) (தொடர் 3)

ஏக இறைவனின் திருப்பெயரால்
சகோதர சகோதரிகளே கம்யூனிஸம் எனும் சித்தாந்தம் பொருள் முதல் வாதம் மற்றும் கருத்து முதல் வாதம் எனும் இரண்டு தத்துவங்களின் கூட்டுக்கலவையில் உண்டாக்கப்பட்டதுதான் (இந்த இரண்டு தத்துவங்களையும் தனித்தனியாக சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்)
இவையிரண்டுமே கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்கள்தான் என்றாலும் அவையிரண்டும் பரஸ்பரம் முரன்பட்ட தத்துவங்களாகும் ஏனென்றால் கருத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டானது என்று ஏற்றுக்கொண்டால் பொருள் முதல் வாதம் தவறானது என்று ஆகிவிடும் அதேபோல் பொருளில் இருந்துதான் பிரபஞ்சம் உண்டானது என்று ஏற்றுக்கொண்டால் கருத்து முதல் வாதம் தவறானதென ஆகிவிடும் மார்க்ஸ் முதலில் இவையிரண்டையுமே சரிகண்டார் பின்னர் பல வருடங்கள் தொடர்ந்து ஆய்வு? செய்து அவைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக சில குறைகளைக் கண்டறிந்த மார்க்ஸ் இறுதியாக எங்கள்ஸுடன் சேர்ந்து பொருள் முதல் வாதத்திலிருந்து அடிப்படைகளையும் கருத்து முதல்வாதத்திலிருந்து சட்டங்களையும் எடுத்து வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதம் எனும் புதிய தத்துவத்தை உண்டாக்கி அதை ஜெர்மன் சித்தாந்தம் (the german ideology)

December 09, 2011

கம்யூனிஸம் ஒரு சுருக்கமான அறிமுகம் (மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம் தொடர் 2)

 ஏக இறைவனின் திருப்பெயரால்
சகோதர சகோதரிகளே ஒரு கொள்கையை விமர்சிக்கும் முன் அதுவும் அந்தக்கொள்கையின் அடிப்படை துவங்கி அனைத்தையும் ஆராய்ந்து விமர்சிக்கும் முன் அந்தக்கொள்கையின் அடிப்படைச் சாராம்சத்தை விளக்கிவிட்டு விமர்சனத்தைத் தொடர்வது நல்லது என்று நினைக்கிறோம் அந்த அடிப்படையில் நாம் விமர்சிக்கப் புகுந்துள்ள கம்யூனிஸக்கொள்கையின் அடிப்படைச் சாராம்சத்தை சுருக்கமாக கீழே தருகின்றோம்
கம்யூனிஸம் உருவான வரலாறு
கம்யூனிஸக்கொள்கை என்பது ஆதிகாலம் முதலே பூமியில் உள்ளதுதான் என்று கம்யூனிஸ வாதிகளால் சொல்லப்பட்டாலும்  இன்று உலகில் நாம் காணும் கம்யூனிஸக் கொள்கையை உருவாக்கியவர் காரல் மார்க்ஸ் என்பவர்தான் கம்யூனிஸக் கொள்கைக்கு வடிவம் கொடுத்ததில் எங்கல்ஸ்சும் ஒருவர் தான் என்றாலும் இது விஷயத்தில் மார்க்ஸிற்க்குத் தான் அதிக பங்கு உள்ளது

December 03, 2011

மண்ணைக்கவ்விய மார்க்ஸிஸம்

ஏக இறைவனின் திருப்பெயரால்
சமீபகாலமாக தமிழ் இனைய உலகில் மாவொய்ஸ்ட் சிந்தனை கொண்ட கம்யூனிஸ்ட்கள் இஸ்லாத்தைத் தவறாக விமர்சித்து வருகின்றனர் தங்களின் கொள்கையை முன்னிருத்தி இஸ்லாத்தை விமர்சிக்க முன்வராதவர்களை முஸ்லீம்கள் நேரடிவிவாதத்திற்க்கு அழைத்தாலும் வரமாட்டோம் இனையத்தில்தான் எழுதுவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் கொள்கை எந்தளவிற்க்குத் தவறானது என்பதை தெளிவுபடுத்தவே இந்தத் தொடர் வெளியிடப்படுகிறது